விவசாயிகளுக்கு குஷி.. பி.எம். கிசான் யோஜனாவில் இது அவசியம்.. நாளையே கடைசி.. நாளை மறுநாளே குட்நியூஸ்?
சென்னை: நாளை மறுநாள் இடைக்கால பட்ஜெட் தாக்கலாக உள்ள நிலையில், விவசாயிகள் குறித்த எதிர்பார்ப்பு எகிறி வருகிறது.. அத்துடன், 16 வது தவணையை பெறுவதற்கு உரிய முக்கியமான அறிவிப்பும் வெளியாகி உள்ளது.
கடந்த எம்பி தேர்தலின்போது, பாஜக அரசு முக்கிய வாக்குறுதி ஒன்றை தந்திருந்தது. அதன்படி, மறுபடியும் தேர்தலில் வெற்றிபெற்றால் விவசாயிகளின் சராசரி வருமானத்தை டபுள் மடங்காக உயர்த்துவதாக வாக்குறுதி தந்திருந்தது.

இந்த வாக்குறுதியானது விவசாயிகளையே கவர்ந்திழுத்த நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வாக்களித்து வெற்றியும் பெற வைத்தனர். இதையடுத்து, ஏற்கனவே, 6000 ரூபாய் உதவி தொகையை நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கும் வழங்கும் திட்டமானது, விரிவுப்படுத்தப்பட்டது.
உதவித்தொகை: அந்தவகையில், இந்தியா முழுவதுமுள்ள சுமார் 12 கோடி விவசாயிகளுக்கு பயனளிக்கும் வகையில், வருடத்துக்கு ரூ.6000 மானிய உதவித் தொகை வழங்கும் திட்டமான பிஎம் கிசான் விரிவுப்படுத்தப்பட்டது.
பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜனா (பிஎம் கிசான்) அதாவது பிரதம மந்திரி கௌரவ நிதி உதவித்திட்டம் என்ற திட்டமானது, கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில் உள்ள கோடிக்கணக்கான விவசாயிகளை தன்னம்பிக்கை கொண்டவர்களாக மாற்றும் வகையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
தவணை முறைகள்: இதில், ஒரு தவணைக்கு 2000 ரூபாய் வீதம், ஒரு ஆண்டுக்கு மொத்தம் 6000 ரூபாய் பயனாளிகளின் வங்கி கணக்கில் நேரடியாகவே டெபாசிட் செய்யப்படுகிறது.
அந்தவகையில், நாடு முழுவதும் 11 கோடிக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு ரூ.2.61 லட்சம் கோடிக்கு மேல் சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன. 3 கோடிக்கும் அதிகமான பெண் பயனாளிகள் பயனடைந்துள்ளனர்... அவர்கள் மட்டும் மொத்தம் ரூ. 53,600 கோடி நிதியை பெற்றுள்ளனர். விரைவில் எம்பி தேர்தல் வரப்போகிறது.. மீண்டும் ஆட்சியை தக்க வைக்க பாஜக முயன்று வருகிறது.
இந்த நிலையில்தான், நாளை மறுநாள் பிப்ரவரி 1ம் தேதி நாடாளுமன்றத்தில் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது.. இடைக்கால பட்ஜெட் என்றாலும், மிக முக்கிய அறிவிப்புகள் விவசாயிகளுக்கு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விவசாயிகள்: அந்தவகையில், விவசாயிகளுக்கு மத்திய அரசால் வழங்கப்படும் ஆண்டுத்தொகை, இந்த பட்ஜெட்டில் ரூ.12000 ஆக உயர்த்தப்படலாம் என்றும் தகவல்கள் கசிந்து கொண்டிருக்கின்றன.. அதாவது, விவசாயிகளுக்கு வழங்கப்படும் தவணை மூன்றிலிருந்து 4ஆக உயர்த்தப்படலாம் என்றும், வருடத்திற்கு இனி 6000 ரூபாயில் இருந்து 8000 ரூபாய் உயர்த்தப்படலாம் என்றும் சொல்கிறார்கள்.
இதை பற்றி உறுதியான தகவல்கள் இதுவரை வெளிவரவில்லை என்றாலும், வரப்போகும் பட்ஜெட்டில் இது தொடர்பான அறிவிப்பு வரலாம் என்றே யூகிக்கப்படுவதால், மிகப்பெரிய எதிர்பார்ப்பு கிளம்பி உள்ளது.
இதனிடையே, 16வது தவணையை நோக்கி விவசாயிகள் காத்துள்ளனர்.. இதுவரை மொத்தம் 15 தவணைகளாக 2000 ரூபாய் பெற்றிருக்கிறார்கள்.. நடப்பாண்டில் 16-வது தவணையை பெற வேண்டுமானால், பி.எம்.கிசான் வெப்சைட்டில் தங்களது ஆதார் நம்பரை உறுதி செய்ய வேண்டும் ..
தவணைகள்: அப்படி உறுதி செய்த பயனாளிகளுக்கு மட்டுமே தவணை வழங்கப்படும் என்று மத்திய அரசு உறுதியாக அறிவித்திருக்கிறது. இதற்கான, கடைசி தேதி 31.01.2024 ஆகும். அதாவது நாளைதான் கடைசி நாள்.. எனவே, தகுதியுள்ள வேளாண் மக்கள் உடனடியாக ஆதாரை உறுதி செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டு வருகிறார்கள்.
உங்களது ஆதார் எண்ணை எப்படி உறுதி செய்வது தெரியுமா? பிஎம் கிசான் திட்டத்தில் பலனடைவோர், பொது சேவை மையம் மூலமாகவோ அல்லது தங்களது செல்போன் மூலமாகவோ, ஆதார் நம்பரை கீழ்காணும் முறைகளில் உறுதி செய்து கொள்ளலாம்.
ஆதார் எண்: அருகிலுள்ள பொது சேவை மையத்திற்கு சென்று, தங்களுடைய பெயரை பி.எம்.கிசான் இணைய தளத்தில் e-KYC செய்ய வேண்டுமென்று கோரும் நிலையில், ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ள செல்போன் நம்பருக்கு ஓடிபி வரும்.. அதை வைத்து, பிஎம் கிசான் வெப்சைட்டில் பதிவு செய்து உறுதி செய்யலாம் அல்லது பொது சேவை மையத்தில் உள்ள கருவியில், பயனாளிகள் தங்கள் விரல் ரேகையை வைத்து பி.எம்.கிசான் வெப்சைட்டில் ஆதார் எண்ணை உறுதி செய்யலாம்.
அல்லது, உங்களது மொபைல் போனிலேயே ஆன்லைனில், http://pmkisan.gov.in என்ற வெப்சைட்டிற்கு சென்று, ஆதார் e-KYC என்ற பக்கத்திற்கு சென்று ஆதார் எண்ணை உறுதி செய்யலாம். இது தொடர்பான கூடுதல் விவரம் ஏதாவது அறிய விரும்பினால் உங்கள் வட்டார வேளாண்மை அல்லது தோட்டக்கலைத்துறை அலுவலகத்தை தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications