விவசாயிகளுக்கு குஷி.. பி.எம். கிசான் 16-வது தவணை கிடைச்சதா? ரூ.2000 வாங்கிட்டீங்களா? அப்ப இது படிங்க
சென்னை: பிரதமரின் பி.எம். கிசான் திட்டத்தில் 2000 ரூபாயை விவசாயிகள் பெற்றுவிட்டீர்களா? அவ்வாறு பலன் பெறாதவர்கள், இது தொடர்பாக எப்படி புகார் அளிக்கலாம் தெரியுமா?
பிஎம் கிசான் எனப்படும் பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜனா திட்டமானது விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காப்பதற்காகவே கொண்டுவரப்பட்ட திட்டமாகும்.

உதவித்தொகை: இந்த திட்டத்தை பிரதம மந்திரி கௌரவ நிதி உதவித்திட்டம் என்று சொல்வார்கள். மத்திய அரசு சார்பாக விவசாயிகளுக்கு பண உதவிகள் இந்த திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, ஒரு தவணைக்கு 2000 ரூபாய் வீதம், ஒரு ஆண்டுக்கு மொத்தம் 6000 ரூபாய் பயனாளிகளின் வங்கி கணக்கில் நேரடியாகவே டெபாசிட் செய்யப்படுகிறது.
விவசாயிகள் மானிய விலையில் விவசாயத்திற்கு தேவையான பொருட்களை வாங்கி கொள்வதற்காகவே இந்த திட்டத்தை மத்திய அரசு தொடங்கியுள்ளது.. நம் நாட்டில், இதுவரை 11 கோடிக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு ரூ.2.61 லட்சம் கோடிக்கு மேல் சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன.
பட்ஜெட்: 16வது தவணையை எதிர்நோக்கி விவசாயிகள் நீண்ட நாட்களாகவே காத்திருந்தனர். இப்படிப்பட்ட சூழலில், விவசாயிகளுக்கு வழங்கப்படும் ஆண்டுத்தொகை, ரூ.12000 ஆக உயர்த்தப்பட்டு, தவணை மூன்றிலிருந்து 4ஆக உயர்த்தப்படலாம் என்றும், வருடத்திற்கு இனி 6000 ரூபாயில் இருந்து 8000 ரூபாய் உயர்த்தப்படலாம் என்றும் தகவல்கள் வருகின்றன.
ஆனால், இதுவரை உறுதியான தகவல்கள் எதுவுமே வெளியாகவில்லை. இடைக்கால பட்ஜெட்டிலும் இது தொடர்பான அறிவிப்புகள் வரும் என்றார்கள்.. ஆனால் எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.
இந்நிலையில் கடந்த பிப்ரவரி 28ம் தேதி விவசாயிகளுக்கு 16வது தவணை விடுவிக்கப்பட்டுள்ளது.. இதுவரை வழங்கப்பட்ட தொகை ரூ.3 லட்சம் கோடியை கடந்திருப்பதாக மத்திய அரசு செய்தி குறிப்பில் தெரிவித்திருக்கிறது.
சரிபார்ப்பது: எனினும், விவசாயிகளுக்கு மத்திய அரசு வழங்கும் ரூபாய் 2000 உதவித்தொகை கிடைக்காதவர்கள் கீழ்க்கண்ட வழிமுறைகளை பின்பற்றி பலன் அடையலாம். இந்த தவணையான டிசம்பர் 2023 முதல் மார்ச் 2024 வரையிலான காலகட்டத்தை உள்ளடக்கியதாகும்.. இந்த தவணையின் பலன் பெறுவோர் பட்டியலில் பெயரை சரி பார்ப்பது எப்படி தெரியுமா?
- PM கிசான் யோஜனா- pmkisan.gov.in என்ற அதிகாரப்பூர்வ போர்ட்டலுக்கு செல்ல வேண்டும்.
- ஹோம் பேஜில் காணப்படும் "Beneficiary Status" என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.
- ஆதார் நம்பர் அக்கவுண்ட் நம்பர் அல்லது மொபைல் நம்பர் என்பதில் ஒன்றை தேர்வு செய்து, "Get Data" என்பதை கிளிக் செய்ய வேண்டும். இப்போது நீங்கள் தவணை தொகையில் பலன்பெற்றதை அறிய முடியும்.
புகார்: PM கிசான் யோஜனாவின் தவணை பணம் கிடைக்காதவர்கள் புகார் கொடுக்கலாம். அந்த புகாரை எப்படி பதிவு செய்வது தெரியுமா? [email protected]. and [email protected] என்ற இணையதளத்தில் புகார் தரலாம்.. அல்லது 011-24300606,155261 என்ற தொலைபேசி எண்ணிலோ அல்லது 1800-115-526 இலவச தொலைபேசி எண்ணிலோ நீங்கள் புகார் தலாம்.












Click it and Unblock the Notifications