சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"சாமி"யிடம் பணிந்த பாஜக.. "ஓகே" சொன்ன மோடி.. திமுகவை ஓவர்டேக் செய்து.. ஆட்சியை பிடிக்க பலே வியூகம்

புதுச்சேரியில் ரங்கசாமி முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுவிட்டார்

Google Oneindia Tamil News

சென்னை: பாஜக பணிந்தது என்று எடுத்து கொள்வதா? அல்லது சாமர்த்தியம் என்று எடுத்து கொள்வதா தெரியவில்லை.. புதுச்சேரியில் கால் பதிக்க துடிதுடித்து கொண்டுள்ளது.. இதில் ரங்கசாமியின் வியூகமும் கவனத்தில் கொள்ள வேண்டி உள்ளது.

ரங்கசாமியை பொறுத்தவரை, புதுச்சேரியை பல வருடம் தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தவர்.. திறமைசாலி.. மூத்த அரசியல்வாதி..

இவரது ஆதரவு மட்டும் இல்லையென்றால், பாஜகவின் காய் நகர்த்தல் அவ்வளவு சுலபமாக கடந்த மாதம் புதுச்சேரியில் நடந்திருக்காது.

"சாதி".. டமார் என வெடிக்கும் பூசல்.. ஓபிஎஸ்ஸின் "50/50" மெகா பிளான்.. காரணம் அந்த 3 மேட்டர்கள்தானா?

 புதுச்சேரி

புதுச்சேரி

தனக்கு போதுமான சீட் ஒதுக்கீடு, மற்றும் முதல்வர் வேட்பாளர் சீட் என 2 விஷயங்களை மனசில் வைத்து கொண்டுதான் பாஜகவுக்கு ஆதரவாக ரங்கசாமி செயல்பட்டார்.. ஆனால், காரியம் கச்சிதமாக முடிந்ததும் பாஜக, ரங்கசாமியின் கோரிக்கைக்கு செவி சாய்க்கவில்லை போலும்.. இதனால் கடந்த சில தினங்களாகவே ரங்கசாமி அப்செட்டில் இருந்தாகவும் தெரிகிறது. தன்னுடைய ஆதரவாளர்களிடமும் கூடி கூடி விவாதித்தார்.

 நிர்வாகிகள்

நிர்வாகிகள்

அதனால்தான், தனித்து போட்டியிட்டால் புதுச்சேரியில் எந்த அளவுக்கு ஒர்க் அவுட் ஆகும் என்று கணிப்புகளையும் நிர்வாகிகளிடம் மறைமுகமாக நடத்தியாம்.. இறுதியில்தான், கூட்டணியில் போட்டியிட்டால் குறைந்தபட்சம் 10 இடங்களை வெல்லாம், அதுவும் ரங்கசாமியுடன் இணைந்தால் நிச்சயம் வெற்றி பெறலாம் என்றும் சாதகமான முடிவுகள் பாஜகவுக்கு கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.

 ஆலோசனை

ஆலோசனை

இதற்கு பிறகுதான், ரங்கசாமியின் கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டதாம்.. டெல்லியில் பிரதமர் அலுவலகத்தில் இது சம்பந்தமான பேச்சினை அமைச்சர் மெக்வால் ஆரம்பித்துள்ளார்.. அமித்ஷா உள்ளிட்டோரிடமும் ஆலோசித்ததாக தெரிகிறது.. மொத்த நிலவரத்தையும் கேட்ட பிறகே, புதுவையில் பாஜக ஆட்சி அமைய என்ன வேண்டுமானாலும் செய்யலாம், அதிலும் ரங்கசாமியை விட்டுவிடவே கூடாது என்ற முடிவுக்கும் வந்துள்ளனர்.. பிரதமர் மோடியும் இதற்கு ஓகே சொல்லிவிட்டதாக தெரிகிறது.

 முதல்வர் வேட்பாளர்

முதல்வர் வேட்பாளர்

இதையடுத்துதான், 17 தொகுதிகள் ரங்கசாமிக்கும், மிச்சமுள்ள 13 தொகுதிகள் பாஜக, அதிமுக, பாமகவுக்கும் என்ற பேச்சு ஆரம்பமாகி உள்ளது.. அதுமட்டுமல்ல, ரங்கசாமிதான் முதல்வர் வேட்பாளர் என்பதற்கும் ஓகே சொல்லப்பட்டுள்ளது.. அதாவது ரங்கசாமியின் 2 கோரிக்கைகளும் பாஜகவிடம் எடுபட்டுவிட்டது.

 பாஜக ஆட்சி?

பாஜக ஆட்சி?

இந்த விஷயத்தில் ரங்கசாமி தன் முடிவில் உறுதியாக இருந்து வெற்றி பெற்றார் என்று சொல்வதா? அல்லது பாஜக வேறு வழியில்லாமல் ரங்கசாமியின் முடிவுக்கு பணிந்ததா என்று தெரியவில்லை.. ஒருவேளை புதுச்சேரியில் என்ஆர் காங்கிரஸ் வெற்றி பெற்றால், ரங்கசாமிதான் முதல்வர், பாஜக துணை முதல்வர் பதவியில் உட்காரும் என தெரிகிறது.. அதாவது ஓபனாக சொல்லப்போனால், கிட்டத்தட்ட பீகார் நிதிஷ்குமார் ஆட்சி போலதான்..!

English summary
PM Modi accept accept Rangasamy as CM candidate in Puducherry
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X