சென்னை Red zone.. நாளை சென்னைக்கு வரும் பிரதமர் மோடி.. டிரோன்களுக்கு தடை.. கடும் பாதுகாப்பு!
சென்னை: பிரதமர் நரேந்திர மோடி நாளை மார்ச் 3 மற்றும் 4 ஆம் தேதிகளில், சென்னைக்கு வரவுள்ளார். இதையொட்டி, பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. மீனம்பாக்கம், கிண்டி மற்றும் பிரதமர் பயணிக்கும் முக்கிய வழித்தடங்கள் "RED ZONE" ஆக அறிவிக்கப்பட்டுள்ளன.
பிரதமர் நரேந்திர மோடி நாளையும் (வெள்ளிக்கிழமை), நாளை மறுநாளும் (சனிக்கிழமை) சென்னையில் சுற்றுப்பயணம் செய்கிறார். நாளை புதுச்சேரிக்கு சென்றும் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுகிறார். அவர் நாளை பிற்பகல் 3.20 மணிக்கு தனி விமானத்தில் சென்னை வந்தடைகிறார்.

சென்னை விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் புதுச்சேரி செல்கிறார் பிரதமர் மோடி. அங்கு தேர்தல் பிரசாரம் செய்கிறார். நாளை மாலை 6 மணியளவில் அவர் மீண்டும் சென்னை வருகிறார். இரவு சென்னை கிண்டியில் உள்ள பிரபல நட்சத்திர ஹோட்டலில் தங்குகிறார்.
நாளை இரவு அவர் பாஜக தலைவர்களை சந்தித்து தேர்தல் வெற்றி வியூகம் குறித்து ஆலோசனை நடத்துகிறார். சனிக்கிழமை பிற்பகல் 1 மணியளவில் சென்னையில் இருந்து கேரளாவுக்கு செல்கிறார். பிரதமரின் சென்னை வருகையையொட்டி போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவின்பேரில் 3 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
பிரதமர் செல்லும் வழித்தடங்களில் 10 அடிக்கு ஒரு போலீசார் வீதம் பாதுகாப்புக்காக நிறுத்தப்படுகிறார்கள். இதையொட்டி கிண்டி, மீனம்பாக்கம் பகுதிகள் சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கிண்டி, மீனம்பாக்கம் பகுதிகளில் டிரோன்கள் பறக்கவிடுவதற்கும் போலீசார் தடை விதித்துள்ளனர்.
இந்த இரண்டு நாட்களில், அரசு ஏற்பாடுகளைத் தவிர, ட்ரோன் கேமராக்கள் மற்றும் ஆளில்லா வான்வழி கருவிகள் பறக்க முழுமையாக தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், ட்ரோன்கள், ரிமோட் கட்டுப்பாட்டு மைக்ரோ லைட் விமானங்கள், பாரா கிளைடர்கள், ஹாட் ஏர் பலூன்கள் போன்றவற்றை மார்ச் 24 ஆம் தேதி முதல், மே 22ம் தேதி வரை, சென்னை பெருநகர காவல் எல்லைக்குள் பறக்க விடுவதற்கான தடை ஏற்கனவே அமலில் உள்ளது.
இந்நிலையில், பொதுமக்கள் பாதுகாப்பு விதிமுறைகளை கடைப்பிடித்து காவல்துறைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என சென்னை போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர்.
-
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
விஜய்யை எச்சரித்த மோடி.. கவனமாக இருங்கள்.. ரகசிய கேமரா இருக்கும்.. மீட்டிங்கில் சொன்ன அட்வைஸ் -
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications