மோடி- ஜின் பிங் சந்திப்பு.. மாமல்லபுரத்தை தேர்வு செய்தது யார்? வெளியுறவுத்துறை விளக்கம்
Recommended Video
மாமல்லபுரம்: மாமல்லபுரத்தில்தான் சந்திப்பு நடத்த வேண்டும் என்று தேர்ந்தெடுத்தது சீன அதிபர் ஜின்பிங் தான் என்று செய்திகள் சில ஊடகங்களில் வெளியாகி இருந்தது. ஆனால் இதனை மறுத்துள்ள இந்திய வெளியுறவுத்துறை, மாமல்லபுரத்தில்தான் சந்திப்பு நடக்க வேண்டும் என்று பிரதமர் மோடியே தனிப்பட்ட முறையில் விரும்பி தேர்ந்தெடுத்தார் என்று குறிப்பிட்டுள்ளது.
பிரதமர் மோடியும் சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் கடந்த 2014ம் ஆண்டு செப்டம்பர் மாதம் இந்தியாவின் அகமதாபாத் நகரில் சந்தித்துக்கொண்டனர். அப்போது இருவரும் மகாத்மா காந்தியின் சபர்மதி ஆஸ்ரமத்திற்கு சென்றனர்.

இந்நிலையில் சென்னை அருகே மாமல்லபுரத்தில் தான் இரண்டாவது சந்திப்பு நடக்க வேண்டும் என சீன அதிபர் ஜி ஜின்பிங் விரும்பி தேர்ந்தெடுத்தாக இன்று காலை சில ஆங்கில ஊடகங்களில் செய்தி வெளியாகி இருந்தது.
இதற்கு இந்திய வெளியுறவுத்துறை மறுப்பு தெரிவித்துள்ளது, பிரதமர் மோடிதான் தனிப்பட்ட முறையில் மாமல்லபுரத்தில் சந்திப்பு நடக்க வேண்டும் என்று விரும்பி தேர்ந்தெடுத்தாக வெளியுறவுத்துறை மூத்த அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
மாமல்லபுரத்தில் வரலாற்று சிற்பங்களான ஐந்து ரதம், அர்ஜூனன் தபசு, வெண்ணை உருண்டை என பல இடஙகளை பிரதமர் மோடியுடன் சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் இன்று மாலை சுற்றி பார்த்தனர். இன்று இரவு பிரதமர் மோடி, சீன அதிபருக்கு விருந்து அளிக்கிறார். அத்துடன் தனியாக சந்தித்து பேசுகிறார். நாளை இருவரும் கோவளத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் சந்தித்து பேசுகிறார்கள்
-
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்' -
நாங்க தோத்துட்டோம்.. ஆனா சாகலை! விஜய்க்கு ஏதாவது ஆச்சுனா கம்பெனி பொறுப்பில்லை! மாஜி கொடுத்த வார்னிங்












Click it and Unblock the Notifications