• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

"கன்னடர் ரஜினி, கிறிஸ்துவர் விஜய்".. தமிழகத்தை எரிச்சிடுவேன்.. மீரா மிதுன் போட்ட பரபர ட்வீட்!

|

சென்னை: இந்த தமிழ்நாடு ஏன் இன்னும் என்னை டார்கெட் செய்கிறது? மதுரையை எரித்த கண்ணகி போன்று எனக்கு கோபம் அதிகரித்தால் நானும் தமிழ்நாட்டை அழிச்சிடுவேன்.. கன்னடர் ரஜினிகாந்த், கிறிஸ்தவர் விஜய் ஆகியோர் என் பெயரை கெடுக்க முயற்சி செய்கிறார்கள்?! சைபர் புல்லியிங் குறித்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க நான் தயங்க மாட்டேன்... கடவுள் பார்த்துக் கொண்டிருக்கிறார்" என்று மீராமிதுன் ட்வீட்டுகளை பதிவிட்டுள்ளார்.

  Vijay யை சீண்டும் Meera Mithun, கொதிக்கும் ரசிகர்கள்.

  துடிப்புமிக்க, வீர்யமிக்க, பயனுள்ள செயல்களை செய்து புகழை அடையாமல், எதையாவது வம்படியாக பேசி பேசியே ஃபேமஸ் ஆவார்களே.. அந்த லிஸ்ட்டை சேர்ந்தவர்தான் பிக் பாஸ் புகழ் மீரா மிதுன்.

  ஒரு பெண் கலைஞர் என்ற முறையில் இவர் ரசிக்கப்படுகிறார்.. அவரது அந்த திறமைக்குரிய மரியாதையை இவருக்குரிய ரசிகர்கள் தந்தும் வருகிறார்கள். ஆனால், சமீப காலமாக இவர் பதிவிடும் ட்வீட்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகின்றன.

  வனிதா எத்தனை கல்யாணம் செஞ்சா நமக்கென்ன.. தமிழ்நாடு இருக்கிற இருப்பில்.. அதுவா இப்ப ரொம்ப முக்கியம்

  கொந்தளிப்பு

  கொந்தளிப்பு

  "இப்போதைய தமிழக அரசு கொரோனவை கட்டுப்படுத்த தவறிவிட்டது... இதனால் தமிழக அரசை பிரதமர் உடனடியாக டிஸ்மிஸ் செய்ய வேண்டும்... அதோடு தன்னை தமிழக முதல்வராக ஆக்கினால் ஒரே வாரத்தில் கொரோனாவை தமிழகத்தில் இருந்தே விரட்டுவேன்.. தமிழகத்தில் உள்ள கிரிமினல்கள் எல்லாரையும் ஒரே மாசத்தில் ஜெயிலுக்குள் தள்ளுவேன். அதனால் பிரதமர் மோடி தனக்கு ஒரு வாய்ப்பு அளித்தால் நான் என்னுடைய தாய் நாட்டை காப்பேன்" என்று பதிவிட்டார்.

  தமிழகம்

  தமிழகம்

  இந்நிலையில் இன்னொரு ட்வீட்டை பதிவிட்டுள்ளார்.. அந்த ட்வீட்டில் அவர் சொல்லி உள்ளதாவது: "தமிழகம் என்னை ஒதுக்கி வைத்துவிட்டது... அதற்கு நன்றி... அதனால் தான் நான் இப்போது சூப்பர் மாடலாக இருக்கிறேன். கோலிவுட் எனக்கு எதிராக இருப்பதால், நான் பாலிவுட், ஹாலிவுட்டில் வேலை பார்த்து வருகிறேன்.

  விமர்சனம்

  விமர்சனம்

  ஆனால் இந்த தமிழ்நாடு ஏன் இன்னும் என்னை டார்கெட் செய்கிறது என்பது தான் எனக்கு புரியவில்லை. என்னை விமர்சிப்பது தான் இவர்களுக்கு ஒரே வேலையா? தமிழ்நாடு தமிழர்களுக்கு, இந்துகளுக்கானது. ஆனால் மலையாளிகளும், கிறிஸ்தவர்களும் ஆதிக்கம் செலுத்தி ஒரு தமிழ் பெண்ணுக்கு அநீதி இழைக்கிறார்கள். மதுரையை எரித்த கண்ணகி போன்று எனக்கு கோபம் அதிகரித்தால் நானும் அதையே தான் தமிழகத்திற்கு செய்வேன்.

  முயற்சி

  முயற்சி

  தமிழ்நாடு அழிந்து கொண்டிருக்கிறது. உங்களை எல்லாம் காப்பாற்றிக் கொள்ளுங்கள்.... நான் பத்திரமாக இருக்கிறேன்... கன்னடர் ரஜினிகாந்த், கிறிஸ்தவர் விஜய் ஆகியோர் என் பெயரை கெடுக்க முயற்சி செய்கிறார்கள்?! சைபர் புல்லியிங் குறித்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க நான் தயங்க மாட்டேன்... கடவுள் பார்த்துக் கொண்டிருக்கிறார்" என்று பதிவிட்டுள்ளார்.

  ரஜினி, விஜய்

  ரஜினி, விஜய்

  மீராவின் இந்த ட்வீட்டை பார்த்ததும் ஏகப்பட்ட கண்டன கமெண்ட்கள் குவிந்து வருகின்றன.. "சும்மா ட்விட்டரில் காமெடி பண்ண வேணாம்.. ரஜினி, விஜய்யை ஊர், உலகத்திற்கே தெரியும். ஆனால் உங்களை அவங்களுக்கு தெரியுமா? சூப்பர் மாடல் என்ற அர்த்தமாவது தெரியுமா? கோலிவுட்டிலேயே யாரும் ஏன் கண்டுக்கலைன்னு தெரியுமா?" என்று மீராவை கலாய்த்து கேள்வி மேல் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

  நெட்டிசன்கள்

  நெட்டிசன்கள்

  விஜய், ரஜினி ரசிகர்களோ, "நீ யார் கன்னடர், கிறிஸ்துவர் என சர்டிபிகேட் கொடுக்க? வேணுமன்னே ஏடாகூடமா பேசி பப்ளிசிட்டிதேட பார்க்குறீயா?" என வறுத்தெடுக்க ஆரம்பித்துள்ளனர். தங்களுடைய பரபரப்புக்காவும், பப்ளிசிட்டிக்காகவும் பிரபலங்களை வம்பிக்கிழுத்து ட்வீட் போடும், இந்த போக்கினை பொதுமக்களே கண்டிக்கவும் தொடங்கிவிட்டனர்.

  வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

   
   
   
  English summary
  PM Modi: christian vijay, kannada rajinikanth are doing the best to defame me, meera mithun tweet
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X