தான் செய்தால் சரி.. பிறர் செய்தால் தவறு! மோடியின் குணம் இதுதான் - மீண்டும் பிளந்துகட்டிய பிடிஆர்
சென்னை: பிரதமர் நரேந்திர மோடி தான் செய்தால் சரி என்றும் பிறர் செய்தால் தவறு என்றும் நினைப்பதாகவும் மாநிலங்களின் நிதியை பெற்றுக்கொண்டு மாநிலங்களுக்கே வாழ சொல்லித் தருவதாகவும் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
Recommended Video

பணமதிப்பிழப்பு, தேர்தல் பத்திரங்கள், அரசியலமைப்பு சட்டம் 370 நீக்கம் தொடர்பான வழக்குகளை உச்சநீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளாமல் உள்ளது. இலவச திட்டங்களுக்கு எதிரான விவாதம் என்பதே அர்த்தமற்ற ஒன்றாக உள்ளது.
மக்களின் பணத்துக்கு உச்சநீதிமன்றத்தை பாதுகாவலராக அரசியலமைப்பு சட்டம் சுட்டிக்காட்டவே இல்லை. தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் மக்கள் பணத்தை எப்படி செலவு செய்வது என்று சட்டமன்ற, நாடாளுமன்றத்தில் முடிவு செய்வார்கள்.

மானிய ஸ்கூட்டர்
இதில் உச்சநீதிமன்றம் ஏன் குறுக்கே வருகிறது என்று எனக்கு புரியவில்லை. பிரதமர் நரேந்திர மோடி, தமிழ்நாட்டில் அதிமுக ஆட்சியில் இருந்தபோது ஸ்கூட்டருக்கு ரூ.25,000 மானியம் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைப்பதற்காக டெல்லியில் இருந்து ஏன் வந்தார்? இதுதான் பிரதமர் நரேந்திர மோடியின் பாசாங்குத்தனம்.

பிரதமர் மோடி
பிரதமர் நரேந்திர மோடி தான் செய்வதை மட்டும் நல்ல செயல் என்றும், அதுவே மற்றவர்கள் செய்தால் தவறு என்றும் நினைக்கிறார். இது அவரின் நயவஞ்சகத்தனம். எப்படி யோசித்தாலும் நிதியை கையாளுவதில் நான் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை விட சிறந்தவன். நான் அவருக்கு சவால் விடுகிறேன். இந்தி பேசும் மாநிலங்களுக்கு பாஜக இலவசங்களை கொடுத்தே வாக்குகளை பெற்றது.

உச்சநீதிமன்றம்
அர்த்தமற்ற வார்த்தைகள் உச்சநீதிமன்றத்திலிருந்து வந்தாலும் அது அர்த்தமற்றதுதான். இலவசங்கள் தொடர்பான விவாதங்கள் கேலிக்கூத்தானவை. காலணியாதிக்க செயல்பாடு மத்திய அரசிடம் இருக்கிறது. டெல்லிக்கு எல்லாம் தெரியும், டெல்லி எல்லாத்தையும் கட்டுப்படுத்துகிறது, டெல்லியே அனைத்து நன்மைகளுக்கும் காரணம் என்று நினைக்கிறார்கள்.

மாநில உரிமை
மத்திய அரசு மாநிலங்களை உத்தரவுகளை செயல்படுத்தும் முகவர்கள் என்றே நினைக்கிறது. மத்திய அரசு 100% நிதியை தன்னுடைய கட்டுப்பாடிலேயே வைக்க நினைக்கிறது. மாநிலங்களை தங்களை சார்ந்து இருக்க வைப்பதற்காக அனைத்து பின் கதவுகளையும் மத்திய அரசு பயன்படுத்துகிறது. சுதந்திரமாக முடிவுகள் எடுப்பதை மத்திய அரசு விரும்பவில்லை. அவர்கள் மாநில விவகாரங்களில் தலையிடுகிறார்கள்.

கல்வி மாநிலப் பட்டியல்
நாங்கள் கல்வியை பொதுப்பட்டியலில் இருந்து மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வலியுறுத்துகிறோம். பெரிய நாடுகள் மாநிலங்கள், மாவட்ட நிர்வாகங்கள், பஞ்சாயத்துகளுக்கு அதிக அதிகாரங்களை வழங்கியுள்ளன. கடன் பெறுவது, நிதி செலவீடுகள் தொடர்பான அதிகாரங்களை கைப்பற்ற மத்திய அரசு முயற்சித்து வருகிறது.
-
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி












Click it and Unblock the Notifications