காங்கிரஸ் முஸ்லிம் கட்சி என்பதை மோடி வெளிச்சம் போட்டுவிட்டாராம்.. பிரபலம் கருத்து
சென்னை: காங்கிரஸ் ஒரு முஸ்லீம் கட்சி என்பதை பிரதமர் மோடி வெளிச்சம் போட்டு காட்டிவிட்டதாகவும், வட இந்தியாவில் நடப்பதை தமிழக ஊடகங்கள் திரித்து காட்டுகின்றன என்றும் மூத்த பத்திரிகையாளர் ராஜகோபாலன் தெரிவித்துள்ளார்.
வட இந்தியாவில் நடப்பதை தமிழக ஊடகங்கள் திரித்து காட்டுவதாக மூத்த பத்திரிகையாளர் ராஜகோபாலன் கடுமையாக சாடினார். ஒன் இந்தியா யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்த ராஜகோபாலன், "நாளை நமதே.. நாற்பதும் நமதே என்று முதல்வர் ஸ்டாலின் சொல்லும் போது, நாளை நமதே நானூறும் நமதே என்று பிரதமர் மோடி சொல்லக்கூடாதா?.. என்று கேட்டார்.

அதேபோல், சமாஜ்வாதி, காங்கிரஸ் ஆகிய கட்சிகள் மீண்டும் அதிகாரத்திற்கு வந்தால், பால ராமரை மீண்டும் கூடாரத்திற்கு அனுப்பி விடுவார்கள். ராமர் கோவில் மீது புல்டோசரை ஏற்றி விடுவார்கள். எந்த இடத்தில் புல்டோசரை ஏற்ற வேண்டும், எங்கே ஏற்றக்கூடாது என்பது பற்றி யோகி ஆதித்யநாத்திடம் அவர்கள் பாடம் படிக்க வேண்டும் என்று மோடி பேசியது குறித்து எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருவது தொடர்பாக பேசிய ராஜகோபாலன், மோடி எந்த சந்தர்ப்பத்தில்(Context) அப்படி பேசினார் என்பதையும் பார்க்க வேண்டும் என்று கூறினார்.
ராஜகோபாலன் தனது பேட்டியில் மேலும் கூறியதாவது:- புல்டோசர்களை எப்படி உபயோகப்படுத்த வேண்டும் என்பதை யோகி ஆதித்யநாத்தை பார்த்து கற்றுக்கொள்ளுங்கள் என்று மோடி எதற்காக சொன்னார் தெரியுமா.. தமிழ்நாட்டில் இருக்கின்ற ஊடகங்கள், தொலைக்காட்சிகள் வட இந்தியாவில் நடப்பதை ட்விஸ்ட் செய்து திரித்து சொல்கிறார்கள்.
2014 ல் 303 சீட்களை பெற்றது பாஜக. அடுத்ததாக 2019 இல் 325 சீட்களை பெற்றது. தற்போது 400 சீட்களை பெறுவோம் என்று பாஜக கூறுவதில் என்ன தவறு இருக்கிறது. நாளை நமதே.. நாற்பதும் நமதே என்று முதல்வர் ஸ்டாலின் சொல்லும் போது, நாளை நமதே நானூறும் நமதே என்று பிரதமர் மோடி சொல்லக்கூடாதா?.. இது தான் பின்னணி.
மோடி சொல்வதின் அழுத்தம் என்ன என்று சொன்னால், ஏழை எளிய மக்கள், மிக மிக பின்தங்கிய மக்கள் 8 குழந்தைகள், 9 குழந்தைகள் பெற்றுக்கொள்ளலாம் என்று பிரதமர் மோடி சொன்னாரே தவிர.. அவர் முஸ்லீம்கள் என்று சொல்லவே இல்லையே. ட்விஸ்ட் பண்ணார் என்று சொன்னார் என்று நீங்கள் சொல்லலாம்.
காங்கிரஸ் என்பது ஒரு ஊழல் கட்சி. காங்கிரஸ் என்பது இந்துக்கு விரோத கட்சி. காங்கிரஸ் என்பது முஸ்லீம் கட்சி என்பதை நிரூபித்து விட்டார் மோடி. இது தான் வட இந்தியாவில் இருக்கின்ற தாக்கம். இதனை திராவிட கழகம் அரசாங்கம் புரிந்துகொள்ளாமல் இருக்கின்றது.
மூத்த காங்கிரஸ் தலைவர், ஏகே ஆண்டனி கடந்த 2014 ஆம் ஆண்டில் 18 பக்க அறிக்கை கொடுத்து உள்ளார். அந்த அறிக்கையில் இந்து மதத்திற்கு எதிராக போனதால் தான் நாம் தோற்கடிக்கப்பட்டோம் என்று. அவர் ஒரு சிறுபான்மையினர். கிறிஸ்தவர். ராகுல் காந்தி சொல்கிறார் 5 வீடு, 10 வீடுகள் வைத்திருப்பவர்களிடம் இருந்து ஏழைகளுக்கு பிரித்து கொடுப்பேன் என்று. அவர் யார் இதை சொல்வதற்கு. ஊழல் மன்னன் தான் ராகுல் காந்தி. இவ்வாறு அவர் பேசினார்.
லோக்சபா தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. 4 கட்ட தேர்தல் முடிந்துள்ள நிலையில், நாளை மறுநாள் 5-ஆம் கட்ட தேர்தல் நடைபெறுகிறது. இதில் 8 மாநிலங்களில் உள்ள 49 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இன்று மாலையுடன் பிரசாரம் ஓய உள்ள நிலையில் அரசியல் தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
அந்த வகையில், பிரதமர் மோடி உத்தர பிரதேசத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசும் போது காங்கிரஸ் கட்சியை கடுமையாக சாடினார். மோடி கூறுகையில், அயோத்தி ராமர் கோவில் விஷயத்தில் நீதிமன்றத் தீர்ப்பை மாற்ற விரும்புவதாக காங்கிரஸ் தலைவர் ஒருவர் கூறியிருக்கிறார். இது எப்படி சாத்தியம் என்று நினைக்கலாம்..
சுதந்திர போராட்டத்தின் போது நாட்டை பிரிக்க வேண்டும் என்று பேசினார்கள். அப்போது நாட்டை பிரிக்க முடியாது என்று மக்கள் கூறினார்கள். ஆனால் அதை செய்தனர். எனவே எந்த எல்லைக்கும் அவர்கள் செல்லக் கூடியவர்கள். அவர்களுக்கு நாடு முக்கியம் இல்லை. அதிகாரம் தான் முக்கியம்.
சமாஜ்வாதி, காங்கிரஸ் ஆகிய கட்சிகள் மீண்டும் அதிகாரத்திற்கு வந்தால், பால ராமரை மீண்டும் கூடாரத்திற்கு அனுப்பி விடுவார்கள். ராமர் கோவில் மீது புல்டோசரை ஏற்றி விடுவார்கள். எந்த இடத்தில் புல்டோசரை ஏற்ற வேண்டும், எங்கே ஏற்றக்கூடாது என்பது பற்றி யோகி ஆதித்யநாத்திடம் அவர்கள் பாடம் படிக்க வேண்டும்" என்று மோடி பேசினார். மோடியின் இந்த பேச்சை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன. இந்த நிலையில் தான் பத்திரிகையாளர் ராஜகோபாலன் இவ்வாறு பேசியுள்ளார்.
-
ராகுல் காந்தி தமிழகத்திற்கு வர மறுத்துவிட்டாரா? பிரச்சாரம் தாமதமாவது ஏன்? - கிரிஷ் சோடங்கர் விளக்கம் -
ராகுல் வரலைன்னா.. பெரிய சிக்கலாகிடும்.. டெல்லியில் பதறிய தமிழக காங்கிரஸ் தலைகள்! என்னாச்சு? -
ஹசினா சையத் செயல் முற்றிலும் முறையற்றது.. சசிகாந்த் செந்தில் விமர்சனம் -
ஜனநாயகன் லீக்.. குற்றவாளிகளை சும்மா விடக்கூடாது! பிரதமர் மோடி தலையிடணும்.. IMPPA சங்கம் டிமாண்ட் -
ஹசீனா சையத் கீழ்த்தரமான குணத்தை காட்டிட்டாங்க! காங்கிரஸ் மகளிர் அணி தலைவி அட்டாக்! -
காங்கிரஸுக்கு வில்லன் காங்கிரஸ் தான்.. திடீரென டெல்லிக்கு ஓடிய கர்நாடக MLAக்கள்! பதறும் சித்தராமையா -
தவெக விற்கு தேர்தலில் ஆதரவு கிடையாது.. ‘ஜனநாயகன்’ லீக் காட்சிகளால் பின்வாங்கிய முஸ்லிம் மக்கள் கழகம் -
திமுகவிற்கு ‘குட்பை'.. விஜயின் தவெகவிற்கு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு! -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
தேர்தல் ஆணையத்தின் அதிரடி ‘டிரான்ஸ்பர்’ மேளா.. காலியான எடப்பாடி கணக்கு... ஸ்டாலின் பவர்ஃபுல் மூவ்! -
எடப்பாடிக்கு அருகில் சீட்.. ஒரே விமானத்தில் பயணம்.. கடைசி நேரத்தில் பிளானை மாற்றிய உதயநிதி! -
வில்லிவாக்கத்தில் ட்விஸ்ட்.. ஆதவ் அர்ஜுனாவுக்கு அடிக்குமா ஜாக்பாட்? களம் எப்படி இருக்கிறது?












Click it and Unblock the Notifications