மோடி ஜி சிறப்பாக ஆட்சி செய்கிறார்..இப்படி ஒரு பிரதமரை பார்த்தது இல்லை..செல்லூர் ராஜூ சொல்றதை பாருங்க
பிரதமர் மோடி சிறப்பாக ஆட்சி செய்கிறார் என்றும் இப்படி ஒரு பிரதமரை இதுவரை யாரும் பார்த்தது இல்லை என்றும் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
சென்னை: கட்சியின் எதிர்கால வளர்ச்சிக்கு எது ஆரோக்கியமானதோ, அது தொடர்பாக மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் பேசப்பட்டது. பிரதமர் மோடி சிறப்பாக ஆட்சி செய்கிறார். இப்படி ஒரு பிரதமரை இதுவரை யாரும் பார்த்தது இல்லை என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கட்சியின் எதிர்கால வளர்ச்சிக்கு எது ஆரோக்கியமானதோ.. அது தொடர்பாக மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் பொதுச்செயலாளர் அவர்கள் பேசினார். வாக்காளர்கள் நம் பக்கம் இருக்கிறார்கள்..

பாஜக நடவடிக்கை கண்டித்தக்கது
மக்கள் நம் பக்கம் இருக்கிறார்கள்.. அவர்களது வாக்குகளை சிந்தாமல் சிதறாமல் கொண்டுவருவதற்கு என்னென்ன வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். அதற்கான பணிகளை மாவட்ட செயலாளர்கள் களத்தில் இறங்கி செய்ய வேண்டும். கட்சி வளர்ச்சி பணிகள் குறித்து மட்டுமே பேசப்பட்டது. வேறும் எதுவும் இன்றைய கூட்டத்தில் பேசப்படவில்லை. பாஜகவினுடைய நடவடிக்கை கண்டித்தக்கது என ஏற்கனவே சொல்லிவிட்டோம்.

மோடி ஜி சிறப்பாக ஆட்சி செய்கிறார்
தோழமைக் கட்சிகளுக்குள் இது மாதிரி நடப்பது சகஜமான ஒன்றுதான். ஜெயலலிதா, கருணாநிதியோடு ஓப்பிடுவதற்கு யாருமே இல்லை என்பதுதான் எங்களின் எண்ணம். அவர்களை போல ஒரு தலைவர்கள் இனி உருவாக முடியாது. உருவாகவும் இல்லை. இது தொடர்பாக பாஜக பேசியதன் காரணமாக சில கருத்துக்கள் பரிமாறப்பட்டது. இனிமேல் அதுபோல இல்லை. மோடிஜியை பொறுத்தவரை சிறப்பாக ஆட்சி செய்கிறார்.

மிகப்பெரிய ஜனநாயகப் படுகொலை
தமிழ் மொழியை உலக அளவிற்கு கொண்டு போகிறார். இது போல ஒரு பாரத பிரதமரை நாம் பார்த்தது இல்லை. அந்த வகையில் நாங்கள் வரவேற்கிறோம். கூட்டணி என்பது ஒரு கட்சியினுடைய கொள்கை இல்லை. கூட்டணியை எப்போது வேண்டும் என்றாலும் மாற்றிக்கொள்ளலாம். திமுகவிலும் இதே மாதிரி நடைபெற்றது. காங்கிரஸ் கட்சியை வெற்றி பெற வைக்கத்தான் ஈரோடு கிழக்கில் திமுக மிகப்பெரிய ஜனநாயகப் படுகொலையை நடத்தியது. இந்திய துணைக் கண்டத்தில் தேர்தல் ஆணையத்திற்கு பெரும் கரும் புள்ளியாக அமைந்துள்ளது.

மோதலுக்கு முற்றுப்புள்ளி வச்சாச்சு
எங்கள் தலைவர்களை யார் பேசினாலும் சரி.. இப்போது இல்லை. எப்போது வேண்டும் என்றாலும் சரி.. இதற்கு முன்னாள் காங்கிரஸ் கட்சியில் மக்வானா என்பவர் ஒருவர் மத்திய அமைச்சராக இருந்தார். அவர் எம்.ஜி.ஆர் குறித்து தேவையில்லாத கருத்தை தெரிவித்தார். அப்போது பதிலடி கொடுத்தோம். எம்.ஜி.ஆரும் அதைப்பற்றி எதுவும் நினைக்கவில்லை. அதன்பிறகு மக்வானா தனது போக்கை மாற்றிக்கொண்டார். பாஜகவுடனான மோதலுக்கு முற்றுப்புள்ளி வச்சாச்சு.. இனிமேல் வந்தால் அதற்கு பதிலடி நாங்கள் கொடுப்போம்.

திருமாவளவன் எங்கள் சகோதரர் போல
எங்களுக்கு நெருக்கடி கொடுக்க யாராலும் முடியது. ஆண்டவனாலே முடியாது. அதிமுக கூட்டணிக்கு விசிக வந்தால் ஏற்றுக்கொள்வோம். திருமாவளவன் எங்கள் சகோதரர் போன்றவர். மதுரை என்பது எடப்பாடி பழனிசாமிக்கு ராசியான இடம். மதுரைக்கு வரும் போது எல்லாம் வெற்றி கிடைக்கிறது. மதுரைக்கு வரும் போதுதான் இரட்டை இலை கிடைத்தது. பிறகு கோர்ட் தீர்ப்பும் மதுரைக்கு வரும் போதுதான் கிடைத்தது.

ஆன்லைன் ரம்மியை தடை செய்ய..
ஆன்லைன் ரம்மி விவகாரத்தை பொறுத்தவரை இது ஆளுநருடைய அதிகாரத்திற்கு உட்பட்டது. அவர் என்ன சொல்கிறார் என்றான் ஆன்லைன் ரம்மியை தடை செய்ய மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை. மத்திய அரசுதான் கொண்டு வர வேண்டும். மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளதா என்பதை தெரிந்து கொள்ள பல வல்லுனர்களை கூப்பிட்டு ஆராய்ந்தேன் என்று தனது கருத்தை ஆளுநர் சொல்லியிருக்கிறார்" இவ்வாறு அவர் கூறினார்.
-
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
2016 சட்டமன்ற தேர்தலில்.. அதிமுகவின் இன்பதுரை வெற்றி செல்லாது.. உயர்நீதிமன்றம் அதிரடி! -
அமித் ஷாவுக்கே அடங்காத அண்ணாமலை! சைலண்டாய் டெல்லியில் பார்த்த வேலை! ஆர்வக்கோளாறில் ஆதரவாளர்கள்! -
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்!












Click it and Unblock the Notifications