குஜராத்தில் மோடி.. தமிழ்நாட்டில் இல.கணேசன்.. ஒரே காலகட்டத்தில் கட்சியில் வளர்ந்த தலைகள்!
சென்னை: பிரதமர் நரேந்திர மோடியும், மறைந்த நாகலாந்து ஆளுநர் இல.கணேசனும் ஒரே காலகட்டத்தில் கட்சியில் வளர்ந்தவர்கள். மோடி குஜராத்தில் படிப்படியாக வளர்ந்த போது தமிழ்நாட்டில் கட்சியை வளர்த்ததோடு தானும் வளர்ந்து கொண்டிருந்தார் இல.கணேசன்.
இலகணேசன் மறைவயடுத்து, பாஜகவை தமிழகம் முழுவதும் வளர்க்க கடுமையாக உழைத்தவர் இல.கணேசன் என பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான தமிழகத்தைச் சேர்ந்த இல.கணேசன், நாகாலாந்து ஆளுநராகப் பணியாற்றி வந்த நிலையில், சென்னையில் உள்ள அவரது வீட்டில் கடந்த ஆகஸ்ட் 8 ஆம் தேதி நிலை தடுமாறி கீழே விழுந்ததில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று (ஆகஸ்ட் 15) மாலை சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் காலமானார். அவரது மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
ஆர்.எஸ்.எஸ் பின்னணி
ஐந்து வயதிலேயே ஆர்எஸ்எஸ் ஷாகா பயிற்சிகளில் பங்கேற்கத் தொடங்கியவர் இல.கணேசன். 16 வயதிலேயே அரசு ஊழியராகிவிட்டார் என்றாலும், ஆர்எஸ்எஸ் பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தார். அதன் பிறகு, திருமணம் செய்து கொள்ளாமலேயே ஆர்.எஸ்.எஸ் இயக்கத்திற்காக முழுநேரமாகப் பணியாற்றினார்.
1991-ல் பாஜகவில் தேசிய செயற்குழு உறுப்பினரான இல.கணேசன் விரைவிலேயே மாநில அமைப்புச் செயலாளர் ஆனார். பாஜகவில் மாநிலத் தலைவருக்கு நிகரான அதிகாரம் கொண்ட முக்கியமான பதவி இது. ஆர்எஸ்எஸ்ஸை சேர்ந்தவர் தான் இந்தப் பதவிக்கு வரமுடியும். அந்தப் பதவியிலிருந்தபடிதான் தமிழ்நாட்டில் கட்சியை வளர்த்தார் கணேசன்.
குஜராத்தில் மோடி - தமிழ்நாட்டில் இல.கணேசன்
குஜராத்தில் நரேந்திர மோடியும், தமிழ்நாட்டில் இல. கணேசனும் கிட்டத்தட்ட ஒரே காலகட்டத்தில் ஆர்எஸ்எஸ்ஸில் அடுத்தடுத்த நிலை நோக்கி நகர்ந்தவர்கள். இல. கணேசன் தமிழ்நாட்டில் மாவட்டப் பொறுப்பாளராக இருந்தபோது, குஜராத்தில் மாவட்டப் பொறுப்பாளராக இருந்தார் மோடி. அடுத்து, இருவரும் ஒரே சமயத்தில் மண்டலப் பொறுப்பாளர்கள் ஆனார்கள்.
தேசிய அளவில் இருவரும் பல கூட்டங்களில் இணைந்து பணியாற்றி உள்ளனர். மாநில அளவிலான பதவி நோக்கி நகர்கையில், பாஜகவுக்குள் இல.கணேசனுக்கு முன்பே பொறுப்புக்குச் சென்றுவிட்டார் மோடி. இல.கணேசனும், தேசியச் செயலாளர், தேசிய துணைத் தலைவர், மாநிலத் தலைவர் பதவிகளிலும் இருந்தார். அதன் பிறகு மோடியின் கிராஃப் தாறுமாறாக எகிறி அவர் 3 முறை குஜராத்தின் முதலமைச்சராகவும், அதன்பிறகு 3வது முறையாக தற்போது நாட்டின் பிரதமராகவும் இருக்கிறார்.
இல.கணேசன், 2009 மக்களவைத் தேர்தலிலும், 2014 மக்களவைத் தேர்தலிலும் தென் சென்னை தொகுதியில் பாஜக வேட்பாளராகப் போட்டியிட்டார். 2 முறையும் தோல்வியடைந்தாலும் பின்னர் மத்தியப் பிரதேசத்திலிருந்து மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டு, 6 அக்டோபர் 2016 அன்று ராஜ்யசபா உறுப்பினராகப் பதவியேற்றார். 2021ல் மணிப்பூர் ஆளுநராக நியமிக்கப்பட்டு, அதன் பிறகு நாகாலாந்து ஆளுநர் ஆனார் இல.கணேசன்.
மோடி இரங்கல்
இல.கணேசன் மறைவுக்கு பிரதமர் மோடி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "நாகாலாந்து ஆளுநர் இல. கணேசன் அவர்களின் மறைவால் வேதனை அடைந்தேன். நாட்டின் சேவைக்கும், தேசத்தைச் சிறப்பாகக் கட்டமைக்கவும் தமது வாழ்க்கையை அர்ப்பணித்த ஒரு உண்மையான தேசியவாதியாக அவர் எப்போதும் நினைவுகூரப்படுவார்.
தமிழ்நாடு முழுவதும் பாஜகவின் வளர்ச்சிக்கு அவர் கடுமையாக உழைத்தார். தமிழ் கலாச்சாரத்தின் மீது அவருக்கு மிகுந்த ஆர்வம் இருந்தது. எனது எண்ணங்கள் அவரது குடும்பத்தினருடனும் அவரது ஆதரவாளர்களுடனும் உள்ளன. ஓம் சாந்தி" எனப் பதிவிட்டுள்ளார்.
-
திமுகவையே ஓவர்டேக் செய்த எடப்பாடி.. அதிமுக – பாஜக தொகுதி பங்கீட்டில் இப்படி நடந்ததே இல்லை! பின்னணி -
30 சிறுமிகளிடம் சில்மிஷம்.. தொக்காக சிக்கிய பாஜக கவுன்சிலர் மகன்! கோவாவில் ஷாக் -
நடிகை கவுதமியை மீண்டும் ஏமாற்றிய அதிமுக – பாஜக.. ராஜபாளையம் ஜான் பாண்டியனுக்கு ஒதுக்கியதன் பின்னணி -
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
சிங்காநல்லூர் அல்லது கவுண்டம்பாளையம்.. ஒரு தொகுதியை கொடுங்க.. பியூஷ் கோயலிடம் கேட்ட அண்ணாமலை? -
அவிநாசி அல்லது மேட்டுப்பாளையம்.. 2ல் ஒரு தொகுதியில் போட்டியிடும் மத்திய இணையமைச்சர் எல்.முருகன்? -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
எடப்பாடி சாமர்த்தியசாலியா.. அமித்ஷா சாமர்த்தியசாலியா.. அதிமுக கூட்டணியில் நடக்கும் எதார்த்தம் என்ன -
சிங்கம் களம் இறங்கிருச்சு.. சிங்காநல்லூரில் களம் காணும் அண்ணாமலை? அக்கா தமிழிசை எங்கே தெரியுமா? -
அதிவேகத்தில் அதிமுக.. ஏரியா பிரித்த எடப்பாடி! அதிமுக கூட்டணியில் யார்? எங்கே போட்டி? உத்தேச லிஸ்ட்! -
மதுரை வடக்கில் சரவணனுக்கு சீட் இல்லையா? தாமரை சின்னத்தில் களமிறங்கும் திருமாறன்.. பின்னணியில் மூவர்! -
Election Commission: தேர்தல் ஆணைய கடிதத்தில் பாஜகவின் முத்திரை.. கேரள அரசியல் கட்சிகள் அதிர்ச்சி.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications