சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

6 ஆண்டுகளில் புதிய தொழில்கள் எண்ணிக்கை 15,000 சதவீதம் அதிகரிப்பு: பிரதமர் மோடி பெருமிதம்

Google Oneindia Tamil News

சென்னை: கடந்த 6 ஆண்டுகளில் நாட்டில் புதிய தொழில்கள் எண்ணிக்கை 15,000 சதவீதம் அதிகரித்துள்ளதாக பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

Recommended Video

    6 ஆண்டுகளில் புதிய தொழில்கள் எண்ணிக்கை 15,000 சதவீதம் அதிகரிப்பு

    சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி இன்று ஆற்றிய உரை: அண்ணாப் பல்கலைக்கழகத்தின் 42-வது பட்டமளிப்பு விழாவில் இன்று பட்டம்பெறும் அனைவருக்கும் வாழ்த்துக்கள். உங்களுக்கான எதிர்காலத்தை உங்கள் மனங்களில் ஏற்கனவே நீங்கள் கட்டமைத்திருப்பீர்கள். எனவே இன்றைய தினம் சாதனைகளுக்கான தினம் மட்டும் அல்ல, முன்னேற்றத்திற்கான தினமும் ஆகும்.

    125 ஆண்டுகளுக்கு முன் மதராஸ் என்று அறியப்பட்ட இங்கு இந்திய இளைஞர்களின் சாத்தியங்கள் எவை என்பது குறித்த சுவாமி விவேகானந்தரின் வார்த்தைகளை நினைவில் கொள்வோம். ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவின் இளைஞர்களை நம்பிக்கையோடு பார்த்துக்கொண்டிருக்கிறது. ஏனெனில் நீங்கள் தான் நாட்டின் வளர்ச்சி எந்திரங்கள்; இந்தியா உலகின் வளர்ச்சி எந்திரமாக உள்ளது. முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ பி ஜே அப்துல் கலாம் சிந்தனைகளும், மாண்புகளும் உங்களுக்கு எப்போதும் உந்துசக்தியாக இருக்கட்டும்.

    கொவிட்-19 பெருந்தொற்று முன்னெப்போதும் காணப்படாத சம்பவமாகும். ஒரு நூற்றாண்டுக்கு ஒருமுறை வரும் இந்த நெருக்கடியை எவரும் சாதாரணமாக கையாள இயலாது. இது அனைத்து நாடுகளையும் சோதனைக்கு உட்படுத்தியது. நாம் எவ்வளவு துயரங்களை சந்தித்தோம் என்பதை நீங்கள் அறிவீர்கள். அறியப்படாத ஒன்றை இந்தியா நம்பிக்கையோடு எதிர்கொண்டது, அதற்காக விஞ்ஞானிகளுக்கும், சுகாதார ஊழியர்களுக்கும், பொதுமக்களுக்கும் நன்றி கூறவேண்டும். இதன் விளைவாக இந்தியாவில் அனைத்து துறைகளிலும் புதுமையான சுறுசுறுப்பு உருவாகியுள்ளது.

    தொழில்துறை, முதலீடு, புதிய கண்டுபிடிப்பு அல்லது சர்வதேச வர்த்தகம் என அனைத்திலும் இந்தியா முன்னிலையில் இருப்பதை காண முடிகிறது. கடந்த ஆண்டு இந்தியா உலகின் 2-வது பெரிய செல்பேசி தயாரிப்பாளராக இருந்தது என்று பிரதமர் கூறினார். புதிய கண்டுபிடிப்பு என்பது வாழ்க்கையின் நெறியாக மாறியிருக்கிறது. கடந்த 6 ஆண்டுகளில் மட்டும் அங்கீகரிக்கப்பட்ட புதிய தொழில்களின் எண்ணிக்கை 15,000 சதவீதம் அளவுக்கு அதிகரித்துள்ளது.

    ஒரு கூட்டு கிளியாக.. சமூக வலைதளங்களில் முடிவுக்கு வந்த மோதல்! 'இந்திய’பிரதமர் மோடி! நெகிழ்ந்த பாஜக! ஒரு கூட்டு கிளியாக.. சமூக வலைதளங்களில் முடிவுக்கு வந்த மோதல்! 'இந்திய’பிரதமர் மோடி! நெகிழ்ந்த பாஜக!

    நேரடி அன்னிய முதலீடு

    நேரடி அன்னிய முதலீடு

    கடந்த ஆண்டு 83 பில்லியன் டாலருக்கும் அதிகமாக வெளிநாட்டு நேரடி முதலீட்டை இந்தியா பெற்று சாதனை படைத்துள்ளது. நமது புதிய தொழில்களும் கூட பெருந்தொற்றுக்கு பிந்தைய காலத்தில் சாதனை அளவாக நிதி ஆதாரத்தை பெற்றுள்ளன. இவை அனைத்துக்கும் மேலாக சர்வதேச வர்த்தக ஊக்குவிப்பில் இந்தியாவின் நிலை முன்னெப்போதும் இல்லாத சிறப்பை பெற்றுள்ளது.

    அந்த 3 அம்சங்கள்

    அந்த 3 அம்சங்கள்

    தொழில்நுட்பம் காரணமான இடையூறுகளின் சகாப்தத்தில் 3 முக்கியமான அம்சங்கள் உங்களுக்கு சாதகமாக உள்ளன. "முதல் அம்சம் என்பது தொழில்நுட்பத்திற்கான ரசனையாக உள்ளது. தொழில்நுட்ப பயன்பாட்டில் சாதகமான உணர்வு வளர்ந்து வருகிறது. பரமஏழைகளும் கூட இதனை பயன்படுத்துகிறார்கள். 2-வது அம்சம் என்பது கடுமையான பணி செய்பவர்களிடம் நம்பிக்கை கொள்வது. ஏற்கனவே சமூக நிகழ்வுகளில் ஒரு ஆணோ, பெண்ணோ தன்னை தொழில்முனைவோர் என்று சொல்லிக்கொள்வதில் சிரமம் இருந்தது. சிலரை வாழ்க்கையில் பொருளாதார ரீதியில் தன்னிறைவு பெற்றவர்கள் என்று கூறுவது வழக்கம், இதன் பொருள் ஊதியம் பெறும் ஊழியர்கள் என்பதாகும். தற்போது நிலைமை நேர்மாறானதாக உள்ளது. 3-வது அம்சம் என்பது சீர்திருத்தத்திற்கான மனோநிலை.

    வலிமையான அரசு

    வலிமையான அரசு

    வலுவான அரசு என்பதன் பொருள் அது அனைத்தையும், அனைவரையும் கட்டுப்பாட்டில் கொண்டிருப்பது என்ற கருத்து ஏற்கனவே இருந்தது. ஆனால் இதனை நாங்கள் மாற்றியிருக்கிறோம். வலுவான அரசு என்பது அனைத்தையும், அனைவரையும் கட்டுப்படுத்துவது அல்ல, தலையீட்டிற்கான நடைமுறையின் காரணத்தை கட்டுப்படுத்துவதாகும். வலுவான அரசு என்பது கட்டுப்படுத்துவது அல்ல, பொறுப்புமிக்கது. வலுவான அரசு என்பது அனைத்து தளங்களுக்குள்ளும் நுழைவது அல்ல, அது தன்னைத்தானே கட்டுப்படுத்திக்கொண்டு மக்களின் திறமைகளுக்கு இடமளிப்பதாகும்.
    ஒரு வலுவான அரசின் பலம் என்பது அது அனைத்தையும் அறிந்திருப்பது அல்லது அனைத்தையும் செய்யமுடிந்தது அல்ல என்பதை அடக்கத்துடன் ஏற்பதில் உள்ளது.

    சாதனைகள்..

    சாதனைகள்..

    இதனால் தான் சீர்திருத்தங்கள், அனைத்து துறைகளிலும் மக்களுக்கும், அவர்களின் திறமைக்கும் மகத்தான இடத்தை உருவாக்கித்தருகின்றன. தேசிய கல்விக்கொள்கையில் இளைஞர்களுக்கு சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது.வணிகம் செய்வதை எளிதாக்க 25,000 நடைமுறை சிக்கல்கள் நீக்கப்பட்டிருக்கின்றன. பங்குகள் வழியிலான மூலதனத்தின் மீதான வரி நீக்கம், முன்தேதியிட்ட வரிநீக்கம் கார்ப்பரேட் வரி குறைப்பு - போன்றவை முதலீடுகள் மற்றும் தொழில்துறையில் ஊக்கத்தை அளித்துள்ளன. ட்ரோன்கள், விண்வெளி, புவியியல் துறைகளின் சீர்திருத்தங்கள் புதிய வழிகளை திறந்துள்ளன. இளைஞர்களின் முன்னேற்றத்திற்கும், நாட்டின் முன்னேற்றத்திற்கும் இடையேயான இணைப்பை பிரதமர் கோடிட்டு காட்டினார். "உங்களின் வளர்ச்சி, இந்தியாவின் வளர்ச்சி. உங்களின் கற்றல், இந்தியாவின் கற்றல். உங்களின் வெற்றி, இந்தியாவின் வெற்றி. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

    English summary
    The Prime Minister Narendra Modi attended the 42nd Convocation of Anna University in Chennai today.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X