ராஜீவ் காந்தியே ராஜினாமா செய்தாரே! மோடி ராஜினாமா செய்யணும்.. சுயமரியாதை இல்லையா? சு. சாமி அட்டாக்
சென்னை; கடந்த 1989-90, 1998-2004 ஆகிய ஆண்டுகளில் பாஜக கூட்டணியில் இருந்தபோதும் அவர்களால் சரியாக ஆட்சி செய்ய முடியவில்லை. அது பாஜகவுக்கு பேரிடியாக இருந்தது. இதனால் பாஜக ராஜினாமா செய்ய வேண்டும் என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியம் சாமி தெரிவித்துள்ளார்.
கடந்த லோக்சபா தேர்தலில் பாஜக தேசிய அளவில் 303 இடங்களில் வென்றது. பாஜக என்டிஏ கூட்டணி 353 இடங்களில் வென்றது. காங்கிரஸ் 52 இடங்களில் வென்றது. இந்த நிலையில்தான் இன்று வாக்கு எண்ணிக்கை செய்யப்பட்டு தேர்தல் முடிவுகள் வெளியாகின. 543 தொகுதிகள் நாட்டில் உள்ளன. இதில் 272 தொகுதிகளில் வென்றால் ஆட்சியை பிடிக்க முடியும்.

இப்படிப்பட்ட நிலையில் 2024 லோக்சபா தேர்தலில் கிட்டத்தட்ட 292 தொகுதிகளில் என்டிஏ கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. பாஜக தனியாக 240 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சி 97 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இந்தியா கூட்டணி 229 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இதனால் 40 இடங்களை வைத்து இருக்கும் சந்திர பாபு நாயுடு, நிதிஷ் குமார், ஷிண்டே சிவசேனா ஆகியோரின் உதவிதான் மோடி ஆட்சி அமைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு உள்ளது
தலைவர் மாற்றம்: இந்த நிலையில்தான் பாஜகவின் தேசிய தலைவராக இருக்கும் ஜே பி நட்டா மாற்றப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. நட்டாவின் மாற்றம் கிட்டத்தட்ட உறுதியாகி உள்ளது. பாஜகவில் பல மாற்றங்கள் நடக்க உள்ள நிலையில் பிரதமர் மோடியும் ராஜினாமா செய்ய வேண்டும் என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியம் சாமி தெரிவித்துள்ளார்.
அவர் செய்துள்ள போஸ்டில், பிரதமராக மோடிக்கு 2 முறை வாய்ப்பு கிடைத்துள்ளது. மற்றவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. என்னுடைய அபிப்பிராயப்படி மத்தியில் பிரதமராக மோடி அல்லாத பாஜகவை சேர்ந்த வேறு யாராவது பொறுப்பேற்க வேண்டும்
எனக்கு முதலிலேயே தெரியும். பொருளாதாரத்தில் பெரிய மாற்றம் வரவில்லை. பொருளாதார அறிவு உள்ளவர்களை மோடி சந்திக்கவில்லை. எல்லாம் எனக்கு தெரியும் என்ற பெருமையில் இருந்தார். அதேபோல் சீனா 4 ஆயிரம் சதுர கிலோமீட்டர் தொலைவுக்கு இந்தியா எல்லைக்குள் வந்து ஆக்கிரமித்துள்ளனர். அதனை மறைத்து வைத்துள்ளனர். வெளிநாடுகளும் நமக்கு உதவியாக இல்லை. அமெரிக்காவும் நமக்கு எதிரியாக மாறிவிட்டது
240 அல்லது அதைச் சுற்றி எத்தனை இடங்கள் வென்றாலும் சரி.. பெரும்பான்மையான 272க்குக் கீழே விழுந்ததால், மோடி ஒதுங்கிக்கொள்ள வேண்டும். எந்த சுயமரியாதைத் தலைவரும் ராஜினாமா செய்வார் தானாக வெளியே தள்ளப்படும் வரை காத்திருக்க மாட்டார்.
கடந்த 1989-90, 1998-2004 ஆகிய ஆண்டுகளில் பாஜக கூட்டணியில் இருந்தபோதும் அவர்களால் சரியாக ஆட்சி செய்ய முடியவில்லை. அது பாஜகவுக்கு பேரிடியாக இருந்தது. 10 ஆண்டுகளுக்குப் பிறகு (2014-2024) .. நீண்ட இந்துத்துவாவு ஆட்சிக்குப் பிறகு இப்போது மீண்டும் ஒரு கூட்டணியின் கீழ் மோடி பிரதமராக விரும்புகிறார். அது சரியான முடிவு அல்ல. கடந்த 1989-90, 1998-2004 ஆகிய ஆண்டுகளில் பாஜக கூட்டணியில் இருந்தபோதும் அவர்களால் சரியாக ஆட்சி செய்ய முடியவில்லை. அது பாஜகவுக்கு பேரிடியாக இருந்தது. 10 ஆண்டுகளுக்குப் பிறகு (2014-2024) .. நீண்ட இந்துத்துவாவு ஆட்சிக்குப் பிறகு இப்போது மீண்டும் ஒரு கூட்டணியின் கீழ் மோடி பிரதமராக விரும்புகிறார். அது சரியான முடிவு அல்ல.
ராஜிவ் காந்திக்கு மெஜாரிட்டி இல்லாத போது அவர் எதிர்க்கட்சியான பாஜக ஆட்சி அமைக்க வழி வகுத்தார். எனவே பாஜக எதிர்க்கட்சியில் அமர்ந்து இந்தியா அரசு உருவாக வழிவிட வேண்டும்.. அதன்பின் இந்தியா கூட்டணி அரசை பாஜக தூள் தூளாக்க வேண்டும் என்று சுப்பிரமணியன் சாமி கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications