Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

45 நிமிட பேச்சில் அதிமுக பெயரையே உச்சரிக்காத பிரதமர் மோடி.. எடப்பாடி வேற ரூட்.. கூட்டணியில் முரண்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: மதுராந்தகத்தில் இன்று நடைபெற்ற என்.டி.ஏ கூட்டணி பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி ஒரு முறை கூட அதிமுக பெயரையே உச்சரிக்கவில்லை. 45 நிமிடங்கள் பேசிய பிரதமர் மோடி, ஒருமுறை கூட 'அதிமுக' என்ற பெயரையே உச்சரிக்காதது அதிமுக தொண்டர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் இன்று நடைபெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பொதுக்கூட்டத்தில் ஒரே மேடையில் பிரதமர் மோடி, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாமக தலைவர் அன்புமணி, பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

PM Modi Tamil Nadu Chennai

இந்தக் கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, "பிரதமர் மோடி இந்த மண்ணில் கால் வைத்ததும், இயற்கையே சூரியனை மறைந்துவிட்டது. சூரியன் மறைந்து குளிர்ச்சி நிலவுவதே சட்டமன்ற தேர்தல் வெற்றிக்கு சான்று. மக்களை வாட்டி வதைக்கும் ஆட்சி தேவையா? திமுக ஆட்சி கொடுத்தது துன்பம், வேதனை, ஊழல்தான். ஒரு குடும்பம் வாழ 8 கோடி மக்கள் சுரண்டப்படலாமா?

கருணாநிதி குடும்பத்தில் பிறந்தவர்கள்தான் ஆள வேண்டுமா? எந்த தகுதியும் இல்லாத உதயநிதியை அமைச்சராக்கினார்கள். தமிழகத்தில் கருணாநிதி குடும்பம் ஆட்சியில் அமர்ந்துகொண்டு கொள்ளை அடித்துக்கொண்டிருக்கிறது. வரும் சட்டமன்ற தேர்தல் குடும்ப ஆட்சிக்கு முடிவு கட்டும் தேர்தல், திமுக ஆட்சிக்கு முடிவு கட்டும் தேர்தல். இதுதான் திமுகவுக்கு இறுதித்தேர்தல்.

அதிமுக பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும். தமிழகத்துக்கு ஏராளமான திட்டங்களை தந்தவர் மோடி. தீய சக்தி திமுகவை வீழ்த்துவோம். மோடி தந்த திட்டங்களை திமுக அரசு முடக்கியது. அதிமுகவின் கோரிக்கைகளை மத்திய அரசு ஏற்றது. நாங்கள் மத்திய அரசுடன் இணக்கமாக இருந்து நிதி பெற்றோம்" எனத் தெரிவித்தார்.

அதேசமயம், இந்தப் பொதுக் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, என்.டி.ஏ கூட்டணி தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்கும் என்றார். 45 நிமிடங்கள் பேசிய பிரதமர் மோடி, ஒருமுறை கூட 'அதிமுக' என்ற பெயரையே உச்சரிக்கவில்லை. மோடி தனது பேச்சில் பாஜக , திமுக , காங்கிரஸ் என்ற கட்சிகளை குறிப்பிட்டாரே தவிர, அதிமுக என்ற பெயரை கூட குறிப்பிடவில்லை. அதிமுக பெயரையே பிரதமர் மோடி உச்சரிக்காதது அதிமுக தொண்டர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

2026ல் என்.டி.ஏ கூட்டணி ஆட்சி அமையும் என பாஜக தலைவர்கள் தொடர்ந்து பேசி வருகின்றனர். எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அதிமுக தலைவர்கள் அதிமுக ஆட்சி அமையும் எனப் பேசி வரும் நிலையில், பாஜக தலைவர்களின் பேச்சுகள், கூட்டணி ஆட்சியை முன்மொழிவதாகவே உள்ளன.

அந்தவகையில் இன்று நடந்த என்.டி.ஏ பொதுக்கூட்டத்திலும் எடப்பாடி பழனிசாமி பேசும்போது, அதிமுக ஆட்சி அமையும் எனப் பேசினார். ஆனால் பிரதமர் மோடியோ, தனது பேச்சில் அதிமுக என்ற கட்சியின் பெயரை ஒரு முறை கூட உச்சரிக்கவில்லை.

2026 சட்டசபை தேர்தலையொட்டி தமிழ்நாட்டின் பல கட்சிகளும் கூட்டணி ஆட்சி பற்றி குரல் எழுப்பி வருகின்றன. பாஜகவும் கூட்டணி ஆட்சி பற்றியே பேசி வருகிறது. எனினும், அதிமுக, திமுக ஆகிய கட்சிகள் கூட்டணி ஆட்சிக்கு வாய்ப்பில்லை என்றே கூறி வருகின்றன. இந்த முரண்பாடு இன்றைய பொதுக்கூட்டத்திலும் எதிரொலித்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+