தேனி: அன்பான வணக்கம் என்று தமிழில் பேசி பிரதமர் மோடி தனது பேச்சை தொடங்கினார். மேலும் நாளை நமதே, நாற்பதும் நமதே என கூறி மோடி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில் தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் நடைபெறும் பிரசாரக் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசுகிறார். இங்கு ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத்தை ஆதரித்து பேசுகிறார்.
இதற்காக அவர் நேற்று இரவே தமிழகம் வந்துள்ளார். ஆண்டிப்பட்டியில் 70 ஏக்கர் பரப்பளவில் பொதுக் கூட்டத்துக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இதை தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் நேரடியாக கண்காணித்து வருகிறார்.
அதுபோல் ராமநாதபுரத்தில் பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனையும் ஆதரித்து பேசுகிறார். பிரதமரின் பொதுக் கூட்டத்தையொட்டி இரு இடங்களிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
Apr 13, 2019, 12:11 pm IST
சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்திய இந்திய ராணுவத்தின் வீரத்தை எதிர்க்கட்சிகள் கேள்வி
பாகிஸ்தான் பிடியில் சிக்கிய இந்திய ராணுவ வீரர் அபிநந்தனை விடுவிக்க முயற்சி எடுத்தோம்
அந்த முயற்சியை எதிர்க்கட்சிகள் அவமதித்தன- மோடி
Apr 13, 2019, 12:06 pm IST
மீண்டும் ஆட்சிக்கு வந்தவுடன் மக்களுக்கான வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்துவேன்- மோடி
இந்தியாவின் வளர்ச்சியை ஏற்றுக் கொள்ள முடியாததால் தான் திமுக- காங். கூட்டணிக்கு என்னை பிடிக்கவில்லை
ஒவ்வொருவரும் கண்ணியத்துடனும் வளமுடனும் வாழ வேண்டும்
புதிய இந்தியாவை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறோம்
Apr 13, 2019, 12:05 pm IST
மக்களின் காவலாளியான நான் உஷாராக இருக்கிறேன் - மோடி
திருடர்கள் மற்றும் திருட்டுத்தனம் செய்யும் எதிர்க்கட்சிகளை பிடிக்கும் காவலாளி நான்
தமிழ்நாட்டை வளமான மாநிலமாக மாற்ற வேண்டும் என்பதே என் லட்சியம்
நாட்டின் பாதுகாப்பு விஷயத்தில் எந்தவிதமான சமரசத்துக்கும் இடம் இல்லை
Apr 13, 2019, 11:44 am IST
தேனி வேட்பாளர் ரவீந்திரநாத், திண்டுக்கல் வேட்பாளர் ஜோதி முத்துவை ஆதரித்து மோடி பேச்சு
மதுரை வேட்பாளர் ராஜ் சத்யன், விருதுநகர் வேட்பாளர் அழகர்சாமியையும் ஆதரித்து மோடி பேச்சு
தேனி பொதுக் கூட்டத்தில் முதல்வர், துணை முதல்வர் பங்கேற்பு
Apr 13, 2019, 11:42 am IST
தேனி கரிசல்பட்டிவிலக்கில் பொதுக் கூட்டத்தில் மோடி பேசி வருகிறார்
தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகளை கூறினார் மோடி
மோடி பேச்சை தொடங்குவதற்கு முன்னர் அவரது காலில் விழுந்து ஆசி பெற்றார் ஓபிஎஸ் மகன்
Apr 12, 2019, 5:50 pm IST
பெரியார் பற்றிய புத்தகங்களை மோடிக்கு பரிசளிக்கப்போகிறேன்- ராகுல் காந்தி
தமிழர்களை யாராலும் அடக்கியாள முடியாது என்பதை மோடி உணர வேண்டும்
Apr 12, 2019, 5:12 pm IST
தேனியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உரை
காங்கிரஸ் தேர்தல் அறிக்கைக்கு மக்களிடம் மிகுந்த வரவேற்பு- ராகுல் காந்தி
அனைத்து பிரிவு மக்களிடமும் கருத்து கேட்டு காங்கிரஸ் தேர்தல் அறிக்கை தயாரித்துள்ளோம்
Apr 12, 2019, 2:44 pm IST
பண மதிப்பிழப்பு குறித்து யாரிடமும் மோடி ஆலோசிக்கவில்லை- ராகுல் காந்தி
கோடிக்கணக்கான மக்களின் கருத்துகளை கேட்டறிந்து காங்கிரஸ் தேர்தல் அறிக்கை தயாரிப்பு
காங்கிரஸ் கட்சி ஏழ்மை மீது சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் நடத்தப்போகிறது
காங்கிரஸ் மற்றும் திமுக இணைந்து தமிழகத்தில் வறுமையை ஒழிப்போம்