தேர்தல் வருதே.. பாம்பன் பாலம் திறப்பு மட்டுமல்ல.. ரூ8,300 கோடி திட்டங்கள்.. அடிக்கல் நாட்டும் மோடி!
சென்னை: ஏப்ரல் 6-ந் தேதி ராம நவமி நாளில் பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாட்டிற்கு வருகை தந்து, ராமேஸ்வரத்தை பிரதான நிலப்பகுதியுடன் இணைக்கும் புதிய பாம்பன் ரயில் பாலத்தைத் திறந்து வைக்கிறார்
தமிழ்நாட்டில் 8,300 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு ரயில், சாலைத் திட்டங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டி, நிறைவடைந்த திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். மேலும் ராமேஸ்வரம்-தாம்பரம் (சென்னை) இடையே புதிய ரயில் சேவையை பிரதமர் மோடி கொடியசைத்துத் தொடங்கி வைக்கிறார்.
இது தொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கை: பிரதமர் நரேந்திர மோடி, ஏப்ரல் 6-ந் தேதி தமிழ்நாட்டிற்கு வருகை தருகிறார். ராம நவமி நாளான அன்று, நண்பகல் 12 மணியளவில், இந்தியாவின் முதல் செங்குத்து தூக்கு கடல் பாலமான புதிய பாம்பன் ரயில் பாலத்தை திறந்து வைத்து, சாலை பாலத்திலிருந்து ஒரு ரயிலையும் கப்பலையும் கொடியசைத்து தொடங்கி வைத்து, பாலத்தில் நடைபெறும் போக்குவரத்து செயல்பாட்டையும் அவர் பார்வையிடுகிறார்.

அதன்பிறகு பகல் 12.45 மணியளவில் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் சுவாமி தரிசனம் செய்கிறார். பிற்பகல் 1.30 மணிக்கு ராமேஸ்வரத்தில் 8,300 கோடி ரூபாய் மதிப்பில் தமிழ்நாட்டில் பல்வேறு ரயில், சாலைத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, நிறைவடைந்த திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். இந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றுகிறார்.
புதிய பாம்பன் ரயில் பாலத்தை திறந்து வைக்கும் பிரதமர், ராமேஸ்வரம்-தாம்பரம் (சென்னை) இடையே புதிய ரயில் சேவையை கொடியசைத்துத் தொடங்கி வைக்கிறார். இந்தப் பாலம் ஆழமான கலாச்சார முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது. ராமாயணத்தின் படி, ராமர் சேது கட்டுமானம் ராமேஸ்வரம் அருகே உள்ள தனுஷ்கோடியில் இருந்து தொடங்கப்பட்டது.
ராமேஸ்வரத்தை பிரதான நிலப்பகுதியுடன் இணைக்கும் இந்தப் பாலம், உலக அரங்கில் இந்திய பொறியியல் திறமைக்கு குறிப்பிடத்தக்க சாதனையாக உள்ளது. இது 550 கோடி ரூபாய்க்கும் அதிகமான செலவில் கட்டப்பட்டுள்ளது. இது 2.08 கிலோ மீட்டர் நீளம் கொண்டது. 99 இடைவெளி இணைப்புகளையும் 72.5 மீட்டர் செங்குத்து லிப்ட் ஸ்பானையும் கொண்டுள்ளது. இது 17 மீட்டர் உயரம் வரை உயரும். இது கப்பல்களின் சீரான இயக்கத்தை எளிதாக்குகிறது. அதே நேரத்தில் தடையற்ற ரயில் போக்குவரத்து செயல்பாடுகளையும் உறுதி செய்கிறது.
துருப்பிடிக்காத எஃகு வலுவூட்டல், உயர்தர பாதுகாப்பு வண்ணப்பூச்சு, முழுமையாக பற்றவைக்கப்பட்ட இணைப்புகளுடன் கட்டப்பட்ட இந்தப் பாலம் அதிகரித்த ஆயுளையும் குறைந்த பராமரிப்புத் தேவைகளையும் கொண்ட வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இது எதிர்காலத் தேவைகளுக்கு ஏற்ப இரட்டை ரயில் தடங்களை அமைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒரு சிறப்பு பாலிசிலோக்சேன் பூச்சு, ரயில் பாலத்தை அரிப்பிலிருந்து பாதுகாக்கிறது. இது கடுமையான கடல் சூழலில் ரயில் பாலத்தின் நீண்ட ஆயுளை உறுதி செய்கிறது.
தமிழ்நாட்டில் 8,300 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு ரயில், சாலைத் திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டி, நிறைவடைந்த திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். தேசிய நெடுஞ்சாலை எண் 40-ல் வாலாஜாபேட்டை - ராணிப்பேட்டை பிரிவில் 28 கிலோமீட்டர் நீளப் பாதையை நான்கு வழிப்பாதையாக மாற்றுவதற்கு அடிக்கல் நாட்டுகிறார். தேசிய நெடுஞ்சாலை எண் 332-ல் விழுப்புரம் - புதுச்சேரி பிரிவில் 29 கிலோ மீட்டர் நீளமுள்ள 4 வழிச்சாலை திட்டத்தை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.
தேசிய நெடுஞ்சாலை 32-ல் 57 கிலோ மீட்டர் நீளமுள்ள பூண்டியாங்குப்பம் - சட்டநாதபுரம் பிரிவையும், தேசிய நெடுஞ்சாலை 36-ல் சோழபுரம் - தஞ்சாவூர் பிரிவில் 48 கிலோ மீட்டர் நீளமுள்ள பகுதியையும் பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். இந்த நெடுஞ்சாலைகள் பல புனிதத் தலங்களையும் சுற்றுலாத் தலங்களையும் இணைக்கும். நகரங்களுக்கு இடையிலான தூரத்தைக் குறைத்து, மருத்துவக் கல்லூரி, மருத்துவமனை, துறைமுகங்கள் ஆகியவற்றுக்கு விரைவாக போக்குவரத்தை வழங்க உதவும். மேலும் உள்ளூர் விவசாயிகள் வேளாண் பொருட்களை அருகிலுள்ள சந்தைகளுக்கு எளிதில் கொண்டு செல்ல இவை உதவும். உள்ளூர் தோல் தொழில்களையும் சிறு தொழில்களையும், பொருளாதார நடவடிக்கைகளையும் புதிய சாலை ஊக்குவிக்கும்.
-
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications