“பிரதமர் மோடியின் ஒப்புதல் வாக்குமூலம்”.. மோடி சொன்ன வார்த்தையை கப்பென பிடித்து விளாசிய மனோ தங்கராஜ்
சென்னை: அதானி, அம்பானியிடம் கருப்பு பணம் இருப்பது தெரிந்தும் அதை மீட்க பிரதமர் மோடி ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று அமைச்சர் மனோ தங்கராஜ் கேள்வி எழுப்பியுள்ளார்.
மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வரும் நிலையில், மூன்று கட்ட வாக்குப்பதிவு வெற்றிகரமாக நடைபெற்று முடிந்துள்ளது. அடுத்து, 4வது கட்டமாக வரும் மே 13ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. மே 13ஆம் தேதி தெலங்கானாவில் மொத்தமுள்ள 17 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதையொட்டி அங்கு தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார் பிரதமர் மோடி.

அந்தவகையில் நேற்று பிரச்சாரத்தில் பேசும்போது, "ராகுல் காந்தி 5 இளவரசர்களைப் பற்றி எப்போதும் பேசுவார், தொடர்ந்து அதானி, அம்பானி குறித்து பேசி வந்த ராகுல் காந்தி தற்போது அமைதியாக உள்ளார். தேர்தல் அறிவித்த பிறகு ராகுல் காந்தியும், காங்கிரஸ் தலைவர்களும் அதானி, அம்பானி குறித்து பேசுவதை நிறுத்திவிட்டார்கள்.
அதானி, அம்பானியிடம் இருந்து எவ்வளவு கறுப்புப் பணத்தை வாங்கினீர்கள்? மக்களவைத் தேர்தலுக்காக எவ்வளவு நன்கொடை பெற்றீர்கள்? 5 ஆண்டுகளாக விமர்சித்து வந்தவர்கள் ஒரே இரவில் அமைதி காப்பது ஏன்? ஏதோ தவறாக நடப்பதை நான் அறிகிறேன். நாட்டு மக்களுக்கு காங்கிரஸ் விளக்கம் அளிக்க வேண்டும்" என காங்கிரஸ் கட்சியை கடுமையாக விமர்சித்தார்.
பிரதமர் மோடியின் குற்றச்சாட்டுக்கு காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி உள்ளிட்டோர் பதில் அளித்துள்ளனர். இந்நிலையில் தமிழக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜும் மோடி பேச்சை விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக அமைச்சர் மனோ தங்கராஜ் தனது சமூகவலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில். "முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்க முயலும் பிரதமர் மோடியின் ஒப்புதல் வாக்குமூலம் !!
அதானி, அம்பானியிடம் இருந்து காங்கிரஸ் எவ்வளவு கறுப்புப் பணத்தை பெற்றது என பிரதமர் நரேந்திர மோடி கேள்வி எழுப்பியுள்ளார். அதானி, அம்பானியிடம் கருப்பு பணம் இருப்பது தெரிந்தும் அதை மீட்க பிரதமர் மோடி ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?
அமலாக்கத்துறை, வருமான வரித்துறை சோதனை எல்லாம் எதிர்க் கட்சிகளுக்கு மட்டும் தான், அதானி, அம்பானிக்கு பொருந்தாது என இதன் மூலம் பிரதமர் மோடி ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார்" என்று தெரிவித்துள்ளார்.
-
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
அண்ணாமலை 'மும்மொழி' எதிர்ப்பு: நேபாளப் பயணம்... ரஜினியுடன் ரகசிய சந்திப்பா? விரைவில் புது கட்சி -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
மொத்தமாக காலியாகும் மம்தா கட்சி.. பாஜகவுக்கு தாவும் 50 திரிணாமுல் MLAகள்? 20 எம்பிக்களும் ராஜினாமா? -
நிர்மலா சீதாராமனை சந்திக்கும் விஜய்.. 20 நிமிடத்தை தாண்டுமா? மோடி சந்தித்த கையோடு அடுத்த முக்கிய அப்பாயின்மென்ட்!












Click it and Unblock the Notifications