ஜின்பிங்கை தமிழ்நாடு உபசரிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது... மோடி நெகிழ்ச்சி ட்வீட்

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    சென்னை வந்தார் பிரதமர் மோடி-வீடியோ

    சென்னை: சீனா அதிபர் ஜின்பிங்குடனான சந்திப்புக்காக சென்னை வந்திறங்கிய நேரத்தில் பிரதமர் மோடி சீன மற்றும் தமிழ் மொழிகளில் ட்விட்டர் பக்கத்தில் தமது வருகை குறித்து பதிவிட்டுள்ளார்..

    சென்னையை அடுத்த பழமை வாய்ந்த துறைமுக நகரமான மாமல்லபுரத்தில் சீனா அதிபர் ஜின்பிங்கை பிரதமர் மோடி இன்றும் நாளையும் சந்தித்து பேசுகிறார். இச்சந்திப்புக்காக பிரதமர் மோடி சற்று முன்னர் சென்னை விமான நிலையம் வந்தடைந்தார்.

    PM Modi tweets on TN Visit

    சென்னை விமான நிலையத்தில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித், முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர்கள் மோடிக்கு உற்சாக வரவேற்பளித்தனர். பின்னர் ஹெலிகாப்டர் மூலம் கோவளத்தில் உள்ள ஹோட்டலுக்கு சென்றார் மோடி.

    பிரதமர் மோடி சென்னை வந்திறங்கிய நேரத்தில் அவரது ட்விட்டர் பக்கத்தில் தமிழ், சீன மொழிகளில் பதிவிட்டுள்ளார். அதில், சீன அதிபர் ஷி ஜின்பிங்கை தமிழ்நாடு உபசரிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்தியா -சீனா இடையேயான உறவு இந்த முறைசாரா உச்சி மாநாட்டின் மூலம் மேலும் வலுப்பெறட்டும் என குறிப்பிட்டுள்ளார் மோடி.

    சீன மொழியில், விருந்தோம்பலுக்கு பெயர் பெற்ற தமிழகம் வந்தடைந்ததில் மகிழ்ச்சி எனவும் மோடி பதிவிட்டுள்ளார்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+