மொத்தமாக ஸ்தம்பித்த சென்னை.. கிண்டியில் கடும் போக்குவரத்து நெரிசல்.. சமாளிக்க முடியாமல் திணறல்!
Recommended Video
சென்னை: சீன அதிபர் ஜி ஜின்பிங் வருகை காரணமாக தற்போது சென்னையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
எல்லோரும் எதிர்பார்த்த அந்த நாள் வந்துவிட்டது என்று கூறலாம். உலகத்தின் பார்வையே இன்று தமிழகத்தின் மேல்தான் இருக்கிறது. சீன அதிபர் ஜி ஜின்பிங் இன்று தமிழகம் வருகிறார்.
பிரதமர் மோடியுடன் மூன்று நாட்கள் அவர் ஆலோசனை நடத்த உள்ளார். மொத்தம் மூன்று நாள் இந்த ஆலோசனை கூட்டம் நடக்கிறது.

என்ன போக்குவரத்து
இதனால் சென்னையில் தற்போது கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. கிண்டி ஏர்போர்ட்டில் இருந்து அண்ணாசாலை, சர்தார் வல்லபாய் பட்டேல் சாலை, ராஜீவ் காந்தி சாலை, ஈசிஆர் என்று வரிசையாக எல்லா இடங்களிலும் போக்குவரத்து நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.

சென்னை எங்கு
பெருங்களத்தூரில் இருந்து சென்னை நோக்கி வரும் வாகனங்கள் ஜிஎஸ்டி சாலை வழியாக அனுமதிக்கப்படவில்லை. இவைமதுரவாயல் வழியாக திருப்பிவிடப்பட்டது. இதனால் அந்த மதுரவாயல் சாலைகளில் கடுமையாக போக்குவரத்து நெரிசல் நிலவி வருகிறது.

தென் சென்னை
அதேபோல் தென் சென்னையில் இருந்து வட சென்னை நோக்கி செல்லும் வாகனங்கள் பல்லாவரம் வழியாக திருப்பி விடப்படுகிறது. இவை குரோம்பேட்டை, தாம்பரம் சென்று அங்கிருந்து மதுரவாயல் வழியாக சுற்றி உள்ளே வருகிறது.

சாலை அடைப்பு
அதேபோல் கிண்டியில் மொத்தமாக இதனால் சாலை அடைக்கப்பட்டுள்ளது. இந்த போக்குவரத்து நெரிசலில் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதி என்றால் அது கிண்டிதான். இதனால் வெளியூர் வாகனங்கள் சென்னைக்குள் வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

முட்டுக்காடு சாலை
அங்கு தற்போது மொத்தமாக போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. முட்டுக்காடு நோக்கி செல்லும் ஈசிஆர் சாலையும் மூடப்பட்டுள்ளது. ஓஎம்ஆர் சாலையில் செல்லும் வாகனங்கள் எல்லாம் சோளிங்கநல்லூரில் இருந்து பெரும்பாக்கம் நோக்கி திருப்பி விடப்பட்டுள்ளது.
-
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு












Click it and Unblock the Notifications