சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மகாபலிபுரம் சனாதான கலாச்சாரத்தின் கோட்டை.. பாஜக சர்ச்சை டிவிட்.. நெட்டிசன்ஸ் கொந்தளிப்பு!

சனாதான கலாச்சாரத்தின் கோட்டையாக மகாபலிபுரம் திகழ்கிறது, என்று பாஜக டிவிட் செய்துள்ளது பெரிய சர்ச்சையாகி உள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    மகாபலிபுரம் சானதான கலாச்சாரத்தின் கோட்டை என்ற பாஜக..கொந்தளித்த நெட்டிசன்ஸ்-வீடியோ

    சென்னை: சனாதான கலாச்சாரத்தின் கோட்டையாக மகாபலிபுரம் திகழ்கிறது, என்று பாஜக டிவிட் செய்துள்ளது பெரிய சர்ச்சையாகி உள்ளது.

    பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையில் இன்று சென்னைக்கு சீன அதிபர் ஜி ஜிங்பிங் வருகை தருகிறார். பிரதமர் மோடி உடன் அவர் இன்று மாலை சந்திப்பு நடத்துகிறார்.

    பாஜக மற்றும் அதிமுக அரசு சார்பாக தீவிரமாக இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி தற்போது தமிழகம் வந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

    பாஜக டிவிட்

    இது தொடர்பாக பாஜக செய்துள்ள டிவிட் தற்போது பெரிய சர்ச்சையாகி உள்ளது. மகாபலிபுரத்தில் உள்ள கற்கோயில்கள் எல்லாம் சனாதான கலாச்சாரத்தின் அடையாளம் ஆகும். தமிழகம் பக்தி இயக்கங்களின் தாயகம். இந்து கலாச்சாரத்தின் கோட்டையாக தமிழகம் திகழ்கிறது, என்று பாஜக டிவிட் செய்துள்ளது.

    பலர் கேள்வி

    பலர் கேள்வி

    இந்த டிவிட் காரணமாக தமிழக பாஜகவை பலர் கேள்வி எழுப்ப தொடங்கி உள்ளனர். தமிழின் பெருமையை பேச பாஜக முயல்கிறது என்ற தோற்றம் உருவாகி வரும் நிலையில் அதை கெடுத்துக் கொள்ளும் வகையில் ஏன் இப்படி டிவிட் செய்துள்ளீர்கள் என்று கீழே பலர் கேள்வி எழுப்பி உள்ளனர்.

    நெட்டிசன்கள் பதில்

    நெட்டிசன்கள் பலர் இதை பார்த்து கொதித்து போய் உள்ளனர். ''சனாதன கலாச்சாரமா? இந்த எண்ணத்தால் தான் எப்போதும் தமிழக மக்கள் எதிர்க்கிறார்கள். மோடி வந்தாலே #GoBackModi சொல்கிறார்கள். என்று இவர் டிவிட் செய்துள்ளார்.

    கீழடி எப்படி

    2600 வருடங்களுக்கு முந்தைய கீழடி நாகரீகத்தில் கூட மதம் சார்ந்த சாட்சியங்கள் எதுவும் கிடைக்கவில்லை. ஒரு சிலையோ, சாஸ்திர ஆதாரங்களோ கிடைக்கவில்லை. அப்படி இருக்கும் நிலையில் மாமல்லபுரம் குறித்து மட்டும் பாஜக கட்சி இப்படி பேசுகிறது என்று பலர் கேள்வி எழுப்பி உள்ளனர்.

    காஞ்சிபுரம்தான்

    அதேபோல் காஞ்சிபுரத்தில் இருந்து சீனா சென்ற போதிதர்மர் தொடங்கி பலர் அங்கு அந்த சமயத்தில் புத்த மதத்தை பின்பற்றி வந்தனர். மேலும் ஜென் வாழ்க்கை உள்ளிட்ட புத்தம் சார்ந்து வாழ்க்கையை முறையை வாழ்ந்து வந்தனர். அப்படி இருக்கும் போது அவர்கள் எப்படி சனதானத்தின் அடையாளமாக இருப்பார்கள் என்று கேள்வி எழுப்பி உள்ளனர்.

    English summary
    PM Modi - Xi Jinping Meet: Mahabalipuram is a bastion of Hindu culture says Tamilnadu BJP.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X