சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நீங்க தாராளமா வாங்க.. ஆனால் அவரை அனுமதிக்க மாட்டோம்.. சீன அதிபருக்கு தமிழர்கள் அனுப்பும் மெசேஜ்!

Google Oneindia Tamil News

Recommended Video

    | #gobackmodi trending on twitter | மோடிக்கு எதிராக வைரலாகும் 3 ஹேஷ்டேக்

    சென்னை: பிரதமர் மோடியின் தமிழக வருகையை முன்னிட்டு மூன்று விதமான ஹேஸ்டேக்குகளை தமிழர்கள் டிவிட்டரில் டிரெண்ட் செய்து வருகிறார்கள்.

    சீன நாட்டின் அதிபர் ஜி ஜின்பிங் இன்று தமிழகம் வருகிறார். இன்று மாமல்லபுரம் செல்லும் அவர் பிரதமர் மோடியை சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளார்.இந்த நிலையில் பிரதமர் மோடியின் வருகைக்கு எதிராக தமிழர்கள் டிவிட் செய்து வருகிறார்கள்.

    பிரதமர் மோடியின் வருகைக்கு எதிராக கோ பேக் மோடி டேக் தேசிய அளவில் வைரலாக டிரெண்டாகி வருகிறது. அதேபோல் சீன மொழியிலும் #回到莫迪 என்ற டேக் பிரதமர் மோடிக்கு எதிராக டிரெண்டாகி வருகிறது. இது இல்லாமல் சீன அதிபர் ஜி ஜின்பிங்கை வரவேற்கும் வகையில் #TamilNadu_welcomes_XiJinping என்று டேக் டிவிட்டரில் டிரெண்டாகி வருகிறது.

    ஆங்கிலம் மட்டுமல்ல.. சீனத்திலும் டிரெண்ட் செய்யும் தமிழர்கள்.. மோடிக்கு எதிராக வைரலாகும் 3 ஹேஷ்டேக்ஆங்கிலம் மட்டுமல்ல.. சீனத்திலும் டிரெண்ட் செய்யும் தமிழர்கள்.. மோடிக்கு எதிராக வைரலாகும் 3 ஹேஷ்டேக்

    மரியாதை

    #GoBackModi மீண்டும் தேசிய அளவில் டிரெண்டாகி வருகிறது. அப்படி என்றால் அவர் தமிழ்நாட்டில் இருக்கிறார் என்று அர்த்தம். தமிழர்களுக்கு அவருக்கு எப்படி மரியாதை கொடுக்க வேண்டும் என்று தெரிந்துள்ளது.

    ஒரே டேக்

    ஒரே நாடு.. ஒரே டேக்.. அதுதான் #GoBackModi

    மோடி மைண்ட்வாய்ஸ்

    அது எப்படி பாஸ்.. மோடி எந்த ரூபத்துல வந்தாலும் ஈஸியா அணைகட்டுறீங்க.. என்று இவர் டிவிட் செய்துள்ளார்.

    என்ன தொடர்பு

    #GoBackModi டேக்கை சீன மொழியிலும் #回到莫迪 என்ற டேக்கை டிரெண்ட் செய்து வருகிறார்கள். இந்தியாவின் முகத்தை பாதுகாப்பதற்காக போராடும் தமிழர்களுக்கு நன்றி என்று இவர் கூறியுள்ளார்.

    என்ன உலகம்

    பாசிசத்தை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்று ஒவ்வொரு முறையும் உலகிற்கு தமிழகம் எடுத்துக்காட்டுகிறது.

    என்ன அர்த்தம்

    அதே சமயம் சீன அதிபரை வரவேற்று #TN_welcomes_XiJinping என்ற டேக்கும் டிரெண்ட் செய்யப்பட்டு வருகிறது . தமிழர்களுக்கும் சீனர்களுக்கும் நிறைய வரலாற்று தொடர்பு இருக்கிறது. அதனால் நாங்கள் சீன அதிபரை வரவேற்கிறோம் என்று இவர் கூறியுள்ளார்.

    தமிழ் மொழி

    தமிழ் மொழியை விரும்பி படிக்கும் சீன நாட்டின் அதிபரை வரவேற்கிறோம். ஆனால் அதற்காக பிரதமர் மோடியை மறக்க மாட்டோம்.. அவருக்கும் எப்போதும் கோ பேக் மோடிதான் என்று இவர் டிவிட் செய்துள்ளார்.

    English summary
    PM Modi - Xi Jinping Meet: Tamilians trend against Modi goes viral in national-wide with three hashtags.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X