வாடகை வீட்டுதாரர்களுக்கு குஷி.. பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் இணையதள வசதி.. பிஎம் ஆவாஸ் யோஜனா செம
சென்னை: PMAY எனப்படும், பிரதமரின் நகர்ப்புற வீட்டு வசதி திட்டத்தின், முதல் கட்டத்தில், தமிழகத்தில் 6.80 லட்சம் வீடுகள் கட்ட ஒப்புதல் அளிக்கப்பட்டதில், 5.99 லட்சம் வீடுகளின் கட்டுமான பணிகள் முடிக்கப்பட்டுள்ளன.. இந்நிலையில், 2ம் கட்டத்தில், பயனாளிகளை தேர்வு செய்வது உள்ளிட்ட நடைமுறைகள் மாற்றி அமைக்கப்பட்டு உள்ளன. இதனால், பயனாளிகளுக்கான தகுதி விபரங்களை பொதுமக்கள் அறிந்து, உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்க புதிய வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்த குட்நியூஸ் வெளியாகியிருக்கிறது.
பிரதமரின் கிராமப்புற வீட்டு வசதி திட்டமான, பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டமானது, கடந்த 2015-ல், துவங்கப்பட்டது.. கிராமப்புற மக்களின் வாழ்க்கை சூழலை அடியோடு மாற்றக்கூடிய, உறுதியான வீடுகளை அவர்களுக்கு கட்டி தருவதே இந்த திட்டத்தின் நோக்கமாகும்.

மத்திய அரசு சலுகைகள்
நகர்ப்புற பகுதிகளில், ஏழை மக்களுக்கு, மாநில அரசுடன் சேர்ந்து, வீடு கட்டி கொடுப்பது, நிலம் வைத்துள்ள மக்கள் வீடு கட்ட மானியம் வழங்குவது, வங்கிக்கடனில் வீடு வாங்குவோருக்கு, வட்டியில் மானியம் வழங்குவது என 3 பிரிவுகளாக இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின்படி, வீடு கட்டுவதற்கு பயனாளிகளுக்கு மானியம் தரப்படுகிறது.. இந்த திட்டத்தின்கீழ் வட்டி விகிதம் குறைவு. வருமானத்திற்கு ஏற்ப மானியம் மாறுபடும். வீட்டின் அளவுக்கேற்ப இந்த மானிய தொகை வழங்கப்படுகிறது.. கடனை திருப்பி செலுத்த 20 ஆண்டுகள் அவகாசம் தரப்படுகிறது.
ஆவாஸ் யோஜனா திட்டம்
வீடுகளில் பாத்ரூம் வசதி, கரண்ட் வசதி, குடிநீர் வசதி, எல்பிஜி சிலிண்டர் வசதிகள் உள்ளன. வீடுகளை வேகமாக கட்டி முடிப்பதுடன், குறிப்பிட்ட நேரத்தில் ஒதுக்கீடுகளை தருவது, நேரடி ஆய்வுகள், நிதியை விடுவிப்பது போன்றவை பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் சிறப்பம்சமாகும்.
நகர்ப்புறம், கிராமப்புறம் என்று 2 பிரிவுகள் இந்த பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தில் பிரிக்கப்பட்டிருக்கின்றன.. மேலும், 75 சதவீதம் எஸ்சி/எஸ்டி அல்லது சிறுபான்மை மக்களுக்காக ஒதுககப்பட்டுள்ளது. அதேபோல, 10 வீடுகளில் 7 வீடுகள் தனியாகவோ அல்லது கூட்டாகவோ பெண்களுக்கு உரிமையானதாகும்.
ஆவணங்கள், ஆன்லைன் வசதி
இப்படிப்பட்ட சூழலில், PMAY எனப்படும் இந்த பிரதமரின் நகர்ப்புற வீட்டு வசதி திட்டத்தின் இரண்டாம் கட்டத்தில், வீடு பெற விரும்பும் பயனாளிகளுக்கான தகுதி விபரங்களை, இணையதளத்தில் அறிந்து கொள்ள புதிய வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
அதாவது, இந்த திட்டத்திற்கான அவகாசம் முடிந்த நிலையில், 2ம் கட்டம் 2024ல் துவக்கப்பட்டது. இதில், பயனாளிகளை தேர்வு செய்வது உள்ளிட்ட நடைமுறைகள் மாற்றி அமைக்கப்பட்டிருப்பதால், பயனாளிகளுக்கான தகுதி விபரங்களை பொதுமக்கள் அறிந்து, உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்க, ஆன்லைன் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.. இதன்மூலம், பிரதமரின் வீட்டுவசதி திட்டத்தில், பொதுமக்கள் எவ்வாறு பயன் பெறலாம் என்ற தகவல்களை எளிதாக பெறலாம்.
புதிய இணையம் வசதி
உள்ளாட்சி அமைப்பு அல்லது நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்துக்கு செல்லாமல், ஆன்லைனிலேயே பொதுமக்கள் நேரடியாக இதற்கு விண்ணப்பிக்கலாம்... இணையதளத்தில் தங்கள் தகுதி நிலையை அறிந்து, அதன் அடிப்படையில் உரிய ஆவணங்களை பதிவேற்றமும் செய்யலாம்.
தகுதியான விண்ணப்பம், நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தில், உரிய பிரிவுக்கு அனுப்பி வைக்கப்படும். இதனால், பொது மக்கள் அலைச்சல் இல்லாமல், எளிதாக வீடு பெற வழி ஏற்படும். https://pmaymis.gov.in/ PMAYMIS2_2024/PMAY_SURVEY/EligiblityCheck.aspx என்ற இணையதள முகவரியில் இந்த வசதியை பெறலாம் என்று நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.
-
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
அண்ணாமலைக்கே பேரதிர்ச்சி! "சிங்கம் கர்ஜிக்க காத்திருக்கிறது" போஸ்டர் ஒட்டி உசுப்பேற்றும் ஆதரவாளர்கள் -
சட்டமன்றத்தில் டீலிங்.. மாண்பை உடைத்த விஜய்! கொந்தளிக்கும் எதிர்க்கட்சிகள்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு -
Rich CM Vijay: நாட்டின் பணக்கார முதல்வர்கள் பட்டியல்! தமிழக முதல்வர் விஜய்க்கு எத்தனையாவது இடம்? -
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல்












Click it and Unblock the Notifications