பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் சக்ஸஸ்.. PM ஆவாஸ் யோஜனா.. வாடகைக்கு வசிப்போருக்கு சூப்பர் சான்ஸ்
சென்னை: PMAY என்று அழைக்கப்படும் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டமானது, பொதுமக்களின் நம்பிக்கையையும், வரவேற்பையும் பெற்று கொண்டிருக்கிறது.. கடந்த 2015-ல், மத்திய அரசால் துவங்கப்பட்ட இந்த திட்டமானது, கிராமப்புறங்களில் வாழும் மக்களின் வாழ்க்கை சூழலை அடியோடு மாற்றக்கூடிய, உறுதியான வீடுகளை அவர்களுக்கு கட்டித் தருவதையே அடிப்படை நோக்கமாக கொண்டு செயல்பட்டு வருகிறது.. கடந்த சில நாட்களுக்கு முன்புதான், இந்த திட்டத்தின் செயல்பாடுகள் குறித்த தகவல் வெளியாகியிருந்த நிலையில், தற்போது இத்திட்டம் செய்து முடித்துள்ள சாதனை குறித்து மற்றொரு மகிழ்ச்சி செய்தி வெளியாகியிருக்கிறது.
பிரதமரின் கிராமப்புற வீட்டு வசதி திட்டத்தையே, PMAY அதாவது பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டம் என்கிறார்கள்..

நகர்ப்புற பகுதிகளில், ஏழை மக்களுக்கு, மாநில அரசுடன் சேர்ந்து, வீடுகளை கட்டி தருவது இதன் பிரதான நோக்கமாக இருந்தாலும், நிலமுள்ள மக்கள் வீடு கட்ட மானியம் வழங்குவது, வங்கிக்கடனில் வீடு வாங்குவோருக்கு, வட்டியில் மானியம் வழங்குவது போன்றவற்றையும் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தி வருகிறது.
பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் ஸ்பெஷல்ஸ்
பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின்படி, வீடு கட்டுவதற்கான மானியத்தை பயனாளிகளுக்கு தருகிறது.. இதன் வட்டி விகிதமும் மிகவும் குறைவு... ஆனால், வருமானத்திற்கு ஏற்ப இந்த மானியம் மாறுபடும். அதேபோல, கட்டப்போகும் வீட்டின் அளவுக்கேற்பவும் இந்த மானிய தொகை தரப்படுகிறது.. எனினும், அடுத்த இருபது வருடங்களில் இந்த கடனை செலுத்த அவகாசமும் வழங்கப்படுகிறது.
வெறும் வீட்டை மட்டும் கட்டாமல், அந்த வீடுகளுக்குள் குளியலறை, கழிப்பறை வசதிகள் மின்சார இணைப்பு, கேஸ் சிலிண்டர் வசதி உட்பட சகல வசதிகளும் இந்த திட்டத்தின் கீழ் செய்து தரப்படுகின்றன.. இதற்கான நேரடி ஆய்வுகளும், நிதியை விடுவிப்பதும் என பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டம் திறன்பட செயல்படுவதால்தான் கிராமப்புற மக்களின் அபிமானத்தை பெற்று வருகிறது.
நகர்ப்புறம், கிராமப்புறம் என இரு பிரிவுகளாக பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தில் உள்ளதுடன் 75% எஸ்சி/எஸ்டி அல்லது சிறுபான்மையினருக்காக ஒதுக்கப்பட்டிருக்கிறது.. அதேபோல, பத்து வீடுகளில், 7 வீடுகள் தனியாகவோ அல்லது கூட்டாகவோ பெண்களின் உரிமைகளை பெற்றது என்பதால், மகளிரின் ஆதரவையும் பெற்று வருகிறது.
தமிழகத்தில் சபாஷ் திட்டம்
நம்முடைய தமிழகத்திலும் இந்த திட்டம் திறன்பட செயல்பட்டு வருகிறது.. முதல்கட்டமாக 6.80 லட்சம் வீடுகள் கட்ட ஒப்புதல் அளிக்கப்பட்டதில், 5.99 லட்சம் வீடுகளின் கட்டுமான பணிகள் தமிழகத்தில் முடிக்கப்பட்டன. இதையடுத்து இரண்டாம் கட்டத்தில், பயனாளிகளை தேர்வு செய்வது போன்ற நடைமுறைகள் மாற்றப்பட்டு, தகுதி விபரங்களை பொதுமக்கள் அறிந்து, உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிப்பதற்கான வசதிகளும் தமிழகத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
ஆன்லைனிலும் சூப்பர் வசதி
இதற்கான இரண்டாம் கட்டம் கடந்த வருடம் ஆரம்பமானது.. இதில், பயனாளிகளை தேர்வு செய்வது உள்ளிட்ட நடைமுறைகள் மாற்றி அமைக்கப்பட்டிருப்பதால், பயனாளிகளுக்கான தகுதி விபரங்களை பொதுமக்கள் அறிந்து, உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்க, ஆன்லைன் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.. இதன்மூலம், பிரதமரின் வீட்டுவசதி திட்டத்தில், பொதுமக்கள் எவ்வாறு பயன் பெற முடியும்.
தகுதியான விண்ணப்பம், நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தில், உரிய பிரிவுக்கு அனுப்பி வைக்கப்படும். https://pmaymis.gov.in/ MAYMIS2_2024/PMAY_SURVEY/EligiblityCheck.aspx என்ற இணையதள முகவரியில் இந்த வசதியை பெறலாம் என்று நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அதிகாரிகள் கடந்த வாரம் குட்நியூஸ் ஒன்றை வெளியிட்டிருந்தனர்-
4.12 கோடி வீடுகள் - சபாஷ்
இந்நிலையில், மத்திய அரசு முக்கிய தகவல் ஒன்றை தற்போது வெளியிட்டிருக்கிறது.. அதாவது, இந்த திட்டத்தின்கீழ் பயனாளிகள் சமூக, பொருளாதார சாதி கணக்கெடுப்பு 2011 தரவுத்தளம் மற்றும் இறுதி செய்யப்பட்ட வீட்டுவசதி கணக்கெடுப்பு பட்டியலின்கீழ் உள்ள வீட்டுவசதி பற்றாக்குறை அளவுருக்களின் அடிப்படையில் அடையாளம் காணப்படுகிறார்கள்.
2.81 கோடி வீடுகள் ஏற்கனவே கட்டிமுடிக்கப்பட்டுள்ள நிலையில், கிராமப்புற வீட்டுவசதி திட்டத்தின்கீழ், 29.07.2025 நிலவரப்படி, 4.12 கோடி வீடுகள் என்ற ஒட்டுமொத்த இலக்கை (கட்டம் I + கட்டம் II) மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களுக்கு ஒதுக்கியுள்ளதாகவும், அதனடிப்படையில் மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள் 3.84 கோடி பயனாளிகளுக்கு அனுமதி வழங்கியிருப்பதாகவும், மத்திய அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது..












Click it and Unblock the Notifications