சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

இவங்க அட்டூழியத்துக்கு ஒரு முடிவே கிடையாதா?.. கொதிக்கும் அன்புமணி ராமதாஸ்.. பரபர அறிக்கை!

Google Oneindia Tamil News

சென்னை: தமிழ்நாடு மீனவர்கள் இந்திய கடல் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் மீன்பிடித்து வருகின்றனர். ஆனால் அவர்கள் தங்கள் நாட்டு எல்லையில் அத்துமீறி விட்டதாக கூறி இலங்கை கடற்படையினர் தொடர்ந்து அட்டூழியத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழக மீனவர்களை சிறைப்பிடித்தும், படகுகளை, வலைகளை சேதப்படுத்தி வருகின்றனர். இது தொடர்பாக தமிழக அரசு வலிறுத்தியதன்பேரில் மத்திய அரசு பலமுறை கண்டனம் தெரிவித்தும் இலங்கை ராணுவத்தினர் திருந்துவதாக தெரியவில்லை. அவர்களின் அத்துமீறல் தொடர்ந்து நடந்து வருகிறது.

வி.கே. சசிகலா: 'அ.தி.மு.கவை உயிர் மூச்சு உள்ளவரை காப்பாற்றுவேன்' - தமிழ்நாடு அரசியல்வி.கே. சசிகலா: 'அ.தி.மு.கவை உயிர் மூச்சு உள்ளவரை காப்பாற்றுவேன்' - தமிழ்நாடு அரசியல்

இலங்கை கடற்படையினர் அட்டூழியம்

இலங்கை கடற்படையினர் அட்டூழியம்

இந்த நிலையில் நேற்று கச்சத்தீவு அருகே இந்திய கடல் எல்லையில் மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் மீண்டும் தாக்குதல் நடத்தி அட்டூழியத்தில் ஈடுபட்டனர். இலங்கை கடற்படையினர் தாக்குதலுக்கு பா.ம.க இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மீனவர்களுக்கு பெரும் இழப்பு

மீனவர்களுக்கு பெரும் இழப்பு

இது தொடர்பாக டுவிட்டரில் வெளியிட்ட பதிவில் அவர் கூறி இருப்பதாவது:- வங்கக்கடலில் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த தலைமன்னார் பகுதி மீனவர்கள் மீது சிங்களப் படையினர் கற்களையும், பாட்டில்களையும் வீசித் தாக்கியுள்ளனர். சிங்களப் படையினரின் தாக்குதலால் தமிழக மீனவர்களுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது!

கவலையளிக்கிறது

கவலையளிக்கிறது

இந்திய கடல் எல்லையில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் மீது சிங்களப் படையினர் தாக்குதல் நடத்தியது கண்டிக்கத்தக்கது. இத்தகைய தாக்குதல்கள் தொடர்வது கவலையளிக்கிறது. இதற்கு காரணமான சிங்களப் படையினர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்!

முற்றுப்புள்ளி வேண்டும்

முற்றுப்புள்ளி வேண்டும்

காரைக்கால் முதல் இராமேஸ்வரம் வரையிலான கடல் பரப்பு குறுகியது. அங்கு மீன் பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்படுவதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும். இரு நாட்டு மீனவர்களும் எல்லை தாண்டி மீன் பிடிக்க அனுமதிக்கப்பட வேண்டும். இவ்வாறு அன்புமணி கூறியுள்ளார்.

English summary
PMK youth leader Anbumani Ramadas has condemned the attack on Tamil Nadu fishermen by the Sri Lankan Navy. He said fishermen from both countries should be allowed to fish across the border
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X