Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ராமதாஸை ஓரம் கட்டும் அன்புமணி.. வேதனையில் கடைசியாக எடுத்த அஸ்திரம்! டெல்லிக்கு பறந்த பாமக லெட்டர்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: புத்தாண்டை முன்னிட்டு வரும் 29ஆம் தேதி சேலத்தில் புத்தாண்டை வரவேற்போம் என்ற பெயரில் ராமதாஸ் பாமக பொதுக்குழுவை கூட்ட உள்ளதாக அறிவித்துள்ளார். அந்த பொதுக்குழு தங்களை கட்டுப்படுத்தாது என அன்புமணி அறிக்கை வெளியிட்டிருந்தார். இந்த நிலையில் கட்சி பெயரை தவறாக பயன்படுத்தி, சேலத்தில், வரும் 29ம் தேதி சட்ட விரோதமாக, பாமக செயற்குழு - பொதுக்குழுக் கூட்டத்தை ராமதாஸ் கூட்டுவதாக, தேர்தல் ஆணையத்தில் பாமக தலைவர் அன்புமணி சார்பில், புகார் அளிக்கப்பட்டுள்ளது.

பாமக நிறுவனர் ராமதாஸ், அவரது மகனும் கட்சியினர் தலைவருமான அன்புமணி இடையிலான மோதல் மேலும் தீவிரமாகியுள்ளது. கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் சார்பில் வரும் டிசம்பர் 29ஆம் தேதி சேலத்தில் "புத்தாண்டை வரவேற்போம்" என்ற பெயரில் பொதுக்குழு கூட்டம் நடத்தப்பட உள்ளது.

அந்த கூட்டத்தில் சட்டமன்ற தேர்தல் கூட்டணி உள்ளிட்ட முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்படும் என ராமதாஸ் அறிவித்திருந்தார். ஆனால், இந்தக் கூட்டம் சட்டபூர்வமானது அல்ல என்று தற்போதைய பாமக தலைவர் அன்புமணி தரப்பு தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளது.

Anbumani Ramadoss Ramadoss pmk

பாமக சர்ச்சை

தேர்தல் ஆணையம் மற்றும் நீதிமன்ற உத்தரவுகளின்படி, பாமக தலைவராக அன்புமணி அங்கீகரிக்கப்பட்டிருப்பதால், பொதுக்குழு உட்பட எந்தக் கூட்டத்தையும் அறிவிக்கவும் நடத்தவும் அதிகாரம் அவருக்கே உள்ளது என்று புகாரில் கூறப்பட்டுள்ளது. பாமக அமைப்பு விதிகளின் படி, பொதுக்குழு அல்லது செயற்குழு கூட்டம் நடத்தப்பட வேண்டுமெனில், பொதுக்குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவரும் பொதுச் செயலரும் மட்டுமே அதை கூட்ட வேண்டும்.

அன்புமணி- ராமதாஸ் மோதல்

மேலும், பொதுக்குழு கூட்டத்திற்கு தலைவர் தலைமை தாங்க வேண்டும். இந்த விதிகளை மீறி நடைபெறும் எந்தக் கூட்டமும் சட்டபூர்வமானதாக கருதப்படாது என அன்புமணி தரப்பு வலியுறுத்தியுள்ளது. இதற்காக சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் டெல்லி உயர்நீதிமன்றத்தில் நடந்த வழக்குகளையும் மனுவில் மேற்கோள் காட்டியுள்ளனர். அந்த வழக்குகளில் அன்புமணி தான் பாமக தலைவராக அங்கீகரிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே, அவரைத் தவிர வேறு யாருக்கும் பொதுக்குழு கூட்டம் நடத்த அதிகாரம் இல்லை என்பதே அன்புமணி தரப்பின் நிலைப்பாடு.

தேர்தல் ஆணையம் மனு

ஆனால் இந்நிலையில், கட்சி பெயரைத் தவறாக பயன்படுத்தி, சட்ட விரோதமாக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் என்ற பெயரில் ஒன்று கூடல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என அன்புமணி தரப்பு குற்றச்சாட்டு முன்வைத்துள்ளது. இதுகுறித்த தகவல் அதிகாரப்பூர்வமாக தேர்தல் கமிஷனுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். அதனால், டிசம்பர் 29ஆம் தேதி சேலத்தில் நடைபெறவிருக்கும் கூட்டம் பாமக பொதுக்குழு கூட்டமாக கருதப்படமுடியாது. அந்தக் கூட்டத்தில் எடுக்கப்படும் எந்தத் தீர்மானமும் கட்சியை கட்டுப்படுத்தாது என்றும் அன்புமணி தரப்பு தெளிவுபடுத்தியுள்ளது.

சேலம் பாமக கூட்டம்

பாமகவில் ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையிலான கருத்து முரண்பாடு பல மாதங்களாக நீடித்து வருகிறது. கட்சியின் செயல் அதிகாரம் மற்றும் முடிவெடுக்கும் உரிமையைச்சுற்றியே இந்த மோதல் தொடர்ந்து வருகிறது. இந்நிலையில், சேலத்தில் நடைபெற உள்ள பொதுக்குழு கூட்டத்தை மையமாக கொண்டு இரு தரப்பினருக்கும் இடையிலான பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது. இதனால் பாமகவில் அடுத்து என்ன நடக்கப் போகிறது? தேர்தல் ஆணையம் இந்த மனுவுக்கு என்ன தீர்ப்பு வழங்க போகிறது? என்ற கேள்விகள் அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+