தைலாபுரத்தில் ராமதாஸ்.. சென்னையில் அன்புமணி.. ஒரே நாளில் சந்தித்த குருமூர்த்தி.. என்ன நடந்தது?
சென்னை: பாமக தலைவர் அன்புமணி மற்றும் துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி ஆகியோர் நேற்றிரவு சந்தித்து சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியாகி இருக்கிறது. நேற்று காலை பாமக நிறுவனர் ராமதாஸை சந்தித்து குருமூர்த்தி ஆலோசித்திருந்த நிலையில், இரவில் அன்புமணியை சந்தித்திருப்பது பல்வேறு விவாதங்களை தொடங்கி வைத்திருக்கிறது.
பாமகவில் நிறுவனர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி இடையில் உச்சக்கட்ட மோதல் நடந்து வருகிறது. அன்புமணி மீது ராமதாஸ் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன் வைப்பதும், அன்புமணி அதற்கு வேறொரு மேடையில் பதிலடி கொடுப்பதுமாக சம்பவங்கள் அரங்கேறி வந்தது. இந்த சூழலில் நேற்று திடீரென சென்னையில் இருந்து புறப்பட்ட அன்புமணி தைலாபுரம் சென்றார்.

ராமதாஸ் - குருமூர்த்தி
சுமார் ஒரு மணி நேரம் தைலாபுரத்தில் அன்புமணி ராமதாஸுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாக சொல்லப்படுகிறது. இதன்பின் அன்புமணி புறப்பட்ட அடுத்த 5 நிமிடங்களில் துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி மற்றும் சைதை துரைசாமி ஆகிய இருவரும் ராமதாஸை சந்தித்து சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக ஆலோசனை நடத்தினர்.
என்ன நடந்தது?
இது வெறும் நட்பு ரீதியிலான சந்திப்பு என்று கூறிய குருமூர்த்தி, அன்புமணி வந்ததே தெரியாது என்றும் கூறினார். ஆனால் நாளை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மதுரைக்கு வரவுள்ள நிலையில், திடீரென குருமூர்த்தி பாமக விவகாரங்களில் பேச்சுவார்த்தை நடத்த சென்றது பல்வேறு கேள்விகளையும், விவாதங்களையும் ஏற்படுத்தியுள்ளது.
பாமக - பாஜக கூட்டணி
இதனால் பாமக - பாஜக - அதிமுக கூட்டணி உறுதி செய்யப்படும் என்று சொல்லப்பட்டது. ஏனென்றால் சென்னை வந்தபோது மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, குருமூர்த்தி இல்லத்தில் சுமார் 2 மணி நேரம் வரை ஆலோசனை நடத்தி இருந்தார். இதனால் குருமூர்த்தி பாஜக கூட்டணியை வலுப்படுத்த அடுத்தக் கட்ட பணிகளை தொடங்கிவிட்டதாக சொல்லப்பட்டு வருகிறது.
அன்புமணி - குருமூர்த்தி
தற்போது நேற்றிரவு பாமக தலைவர் அன்புமணி மற்றும் குருமூர்த்தி இருவரும் சந்தித்து சுமார் ஒரு மணி நேரம் ஆலோசனை நடத்தி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதன் மூலமாக ராமதாஸ் சொன்ன கருத்துகள் அன்புமணியிடம் சொல்லப்பட்டிருக்கலாம் என்றும் பேசப்படுகிறது. அதற்கேற்ப இன்று ராமதாஸ் பாமக நிர்வாகிகளிடம், விரைவில் நல்ல செய்தி வரும் என்று கூறி இருக்கிறார்.
அடுத்த நகர்வு?
இதனால் பாமகவில் நடந்து வரும் பிரச்சனைகள் முடிவுக்கு வந்துள்ளதாக பார்க்கப்படுகிறது. அமித் ஷா மதுரை பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட பின், பாமகவின் அடுத்தக் கட்ட நகர்வுகள் இருக்கலாம் என்றும் அரசியல் விமர்சகர்கள் கூறி வருகின்றனர். ஒரே நாளில் ராமதாஸ் மற்றும் அன்புமணி இருவரையும் சந்தித்து குருமூர்த்தி பேசி இருப்பது பாமகவினர் மத்தியில் கவனிக்கப்பட்டு வருகிறது.
-
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு












Click it and Unblock the Notifications