இது லிஸ்ட்லயே இல்லையே.. ஆளுநர் தமிழ்நாட்டுக்கே எதிர்! அதிமுக ஆட்சியில் வந்த மசோதாவுமா? பாமக எம்எல்ஏ
சென்னை: ஆளுநர் ஆர்.என்.ரவியின் போக்கு தமிழ்நாட்டுக்கே எதிரானது என்றும், அவர் அதிமுக ஆட்சியில் கொண்டு வந்த சட்ட முன்வடிவுகளையும் ஏற்கவில்லை எனவும் பாமக எம்.எல்.ஏ ஜிகே மணி தெரிவித்து உள்ளார்.
தமிழ்நாடு சட்டசபையில் முதலமைச்சர் ஸ்டாலின் கொண்டு வந்த தீர்மானத்தின் மீது பேசிய அவர், "10 சட்ட முன் வடிவுகளை முதலமைச்சர் இங்கே சுட்டிக் காட்டினார்கள். அதில் 2020 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட சட்டத் திருத்த முன்வடிவு கடந்த ஆட்சிக் காலத்தில் கொண்டு வரப்பட்டது. 12/2020 சட்டத்திருத்தமும் கடந்த ஆட்சியில் கொண்டு வரப்பட்டதாகும். எனவே கடந்த ஆட்சியில் கொண்டு வரப்பட்ட 2 சட்டத் திருத்த முன்வடிவுகள், இந்த ஆட்சி காலத்தில் கொண்டு வரப்பட்ட 8 சட்ட முன்வடிவுகளை முதலமைச்சர் இங்கே சுட்டிக்காட்டி இருக்கிறார்கள்.

இதனால், ஆளுநருக்கு என்ன பாதிப்பு இருக்கிறது. இது தமிழ்நாட்டின் நலன் கருதியது. தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கானது. ஆகவே ஆளுநர் முதலமைச்சருக்கும் தமிழ்நாடு அரசுக்கும் தமிழ்நாடு மக்களுக்கும் இணக்கமாக இருக்க வேண்டும். இன்னும் சொல்லப்போனால் மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் பாலமாக இருக்க வேண்டும். குறிப்பாக இந்த சட்ட முன்வடிவுகள் பல்கலைக்கழகங்களை அதிகமாக சுட்டிக்காட்டி உள்ளது.
பல்கலைக்கழகங்கள் நிதி நெருக்கடியில் உள்ளன. இதனை சமாளிக்க வேண்டிய பொறுப்பு தமிழ்நாடு அரசுக்கு உள்ளது. பல்கலைக்கழகத்தை உருவாக்கியது மாநில அரசும் முதலமைச்சரும். ஆகவே இந்த நெருக்கடியான சூழலில் இந்த சட்ட முன்வடிவுகளை மீண்டும் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பினால் இந்திய அரசியலமைப்பு சட்டம் 200 வது பிரிவின்படி அவர் கட்டாயம் ஒப்புதல் வழங்கிட வேண்டும் என்ற சூழல் இருக்கிறது.
பேரவைத் தலைவர் இதை அறிவிப்பதற்கு முன்பாக நானும் அரசியல் கட்சித் தலைவர்கள், மூத்த சட்ட வல்லுநர்கள் ஒட்டுமொத்தமாக ஆளுநரின் போக்கு ஏற்புடையதல்ல. தமிழ்நாட்டுக்கு விரோதமானது என்றார்கள். ஒருவர் கூட ஏற்கவில்லை. நான் நடுநிலையோடு சொல்கிறேன். ஆளுநரின் போக்கு சட்டவிரோதமானது. தமிழ்நாட்டுக்கு எதிரானது. இங்கு ஆளுங்கட்சி உள்ளது. எதிர்க்கட்சி உள்ளது. மற்ற கட்சிகள் உள்ளன. ஒட்டுமொத்தமாக சேர்ந்து தமிழ்நாட்டு மக்களின் நலனின் அக்கறை கொண்டு நிறைவேற்றப்பட்ட சட்டங்கள் இவை.
இந்த சட்டத் திருத்தங்களுக்கு முட்டுக்கட்டை போடுகிறார் என்றால் இவர் தமிழ்நாட்டுக்கு தேவையா என்ற கேள்வி எழுகிறது. சட்டமன்றம் நிறைவேற்றிய சட்ட முன்வடிவை முழு மனதோடு ஆளுநர் ஏற்க வேண்டும் என்று அரசியலமைப்பு சொல்கிறது. விளக்கம் தேவைப்பட்டால் விளக்கம் கேட்டு திருப்பி அனுப்ப வேண்டும். நிதித்துறை சார்ந்து பிரச்சனை இருந்தால் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கலாம் என்றே சட்டம் சொல்கிறது.
இதை மீறி ஆளுநர் செயல்படுவது தமிழ்நாடு நலனுக்கு உகந்ததாக இருக்காது. மேலும் ஒன்றை சொல்கிறோம். வேந்தரை நியமிக்கும் அதிகாரம் ஆளுநருக்கு இருந்தாலும் பிற மாநிலத்தவரை நியமிக்கிறார்கள். அவருக்கு மொழி பற்றி தெரியாது, இந்த மண்ணை பற்றி தெரியாது, மக்களை பற்றித் தெரியாது, பல்கலைக்கழகங்களை பற்றி தெரியாது. எதையோ செய்கிறார்கள். கடந்த ஆட்சியில் அண்ணா பல்கலைக்கழகத்தில் சூரப்பா என்ற துணை வேந்தரை நியமித்தார்கள். எவ்வளவு பிரச்சனை ஏற்பட்டது? நீதிமன்றம் வரை சென்றது. இது தேவையா?" என்றார்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications