டாஸ்மாக் கடைகளை மூடாவிட்டால் மாநிலம் தழுவிய போராட்டம்.. பாமக ராமதாஸ் அறிவிப்பு
சென்னை: டாஸ்மாக் கடைகளை மூடாவிட்டால் மாநிலம் தழுவிய போராட்டத்தை நிச்சயம் நடத்துவோம் என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
தமிழக நிதிநிலை அறிக்கை சட்டமன்றத்தில் வரும் 18 ஆம் தேதி தாக்கல் செய்யப்படவுள்ளது. ஒவ்வொரு நிதிநிலை அறிக்கையின் முன்பாக பாமக சார்பில் நிழல் நிதி நிலை அறிக்கை வெளியிடப்படும்.
இந்நிலையில், இன்று சென்னை தியாகராய நகரில் பாமகவின் 20-வது பொது நிழல் நிதிநிலை அறிக்கையை பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டார். இந்த நிகழ்ச்சியில் அன்புமணி ராமதாஸ், ஜி.கே. மணி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தமிழ் படங்களுக்கு தமிழில் பெயர்
அப்போது அவர் பேசுகையில் தமிழகத்தில் எடுக்கும் திரைப்படங்களுக்கு தமிழில்தான் பெயர் வைக்க வேண்டும். ஆனால் வைப்பதில்லை. வறுமைக் கோட்டிற்குக் கீழ் வாழும் குடும்பங்களுக்கு அடிப்படை வருமானமாக மாதம் ரூ.2,000 வழங்கும் திட்டம் வரும் ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் செயல்படுத்தப்படும்.

தனி இலவச பேருந்து சேவை
ஏழைக் குடும்பங்களுக்கு மாதம் ரூ.2,000 உதவி வழங்கப்பட்டாலும், அக்குடும்பங்களுக்கு அரசால் வழங்கப்படும் பிற சமூகப் பாதுகாப்பு திட்ட உதவிகளும் தொடர்ந்து வழங்கப்படும். தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கென தனியாக இலவச பேருந்து சேவை வேண்டும்.

60 மாவட்டங்களாக பிரிக்க வேண்டும்
தமிழகத்தை 60 மாவட்டங்களாக பிரிக்க வேண்டும். தமிழக சட்டப்பேரவை குறைந்தது ஆண்டுக்கு 3 முறையும், 100 நாட்களும் கூடி மக்கள் பிரச்சனைகள் குறித்து ஆக்கபூர்வ விவாதம் நடத்துவதை தமிழக அரசு உறுதி செய்யும். தமிழ்நாட்டில் உள்ள தனியார் தொழில் வணிக நிறுவனங்களில் மாத வருமானம் ரூ.40,000 வரை உள்ள பணிகளில் 80% தமிழர்களுக்கு வழங்க புதிய சட்டம் நிறைவேற்றப்படும்.

ஐஐடிக்கு நிகராக 5 இடங்களில் கல்வி நிறுவனங்கள்
தமிழகத்தில் போக்குவரத்தை நெரிசலை குறைக்க அனைவருக்கும் இலவச பேருந்து சேவைக்கு அனுமதிக்க வேண்டும். தமிழ்நாட்டில் 5 இடங்களில் ஐ.ஐ.டிக்கு இணையான தமிழ்நாடு தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் (Tamilnadu Institute of Technology - TIT) ஏற்படுத்தப்படும்.

மே 1 முழு மதுவிலக்கு
தமிழ் வழியில் படித்தவர்களுக்கு மருத்துவம், பொறியியல், கலை அறிவியல் உள்ளிட்ட அனைத்து உயர் கல்வி மாணவர் சேர்க்கையிலும் 20% தனி இடஒதுக்கீடு வழங்கப்படும். தமிழ்நாட்டில் உழைப்பாளர் நாளான மே 1 முதல் முழுமையான மதுவிலக்கு நடைமுறைப்படுத்தப்படும்.

டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும்
டாஸ்மாக் கடைகளை மூடாவிட்டால் மாநிலம் தழுவிய போராட்டத்தை நிச்சயம் நடத்துவோம். ஒரு சொட்டு மது கூட இல்லாத மாநிலமாக தமிழகம் மாற வேண்டும். அது போல் சிகரெட்டும் ஒழிய வேண்டும். கடைசி விவசாயி திரைப்படம் பார்த்தேன். அதன் பிறகு இன்னொரு படத்தை பார்த்தேன். அதில் ஹீரோ ஸ்டைலாக உட்கார்ந்து சிகரெட் பிடிப்பதை பார்த்தேன். அதிலிருந்து படம் பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தையே விட்டுவிட்டேன் என ராமதாஸ் தெரிவித்தார்.
-
பாட்டிலுக்கு ரூ.10.. டாஸ்மாக் பிரச்சனைக்கு பத்து நாட்களில் நிரந்தர தீர்வு.. அமைச்சர் விக்னேஷ் உறுதி -
தமிழகத்தில் ஏன் கள் விற்கக் கூடாது? டாஸ்மாக்கில் மது விற்கிறீர்களே? உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி! -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல்












Click it and Unblock the Notifications