மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்!
சென்னை: தமிழ்நாட்டில் சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அனைத்துக் கட்சிகளும் அரசியல் பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றன. அந்த வகையில் ராமதாஸ் - சசிகலா உடன் கூட்டணி அமைத்து தேர்தலைச் சந்திக்கிறார். இந்நிலையில் சட்டசபை தேர்தலுக்கான வாக்குறுதிகளை பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று வெளியிட்டார். மகளிர் உரிமைத் தொகை ரூ.3,000 வழங்கப்படும் என்பது உள்ளிட்ட வாக்குறுதிகள் வழங்கப்பட்டுள்ளன.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த தைலாபுரத்தில் பாமக (ராமதாஸ் அணி) தேர்தல் அறிக்கையை பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று (மார்ச் 26) வெளியிட, கவுரவத் தலைவர் ஜி.கே.மணி, செயல் தலைவர் ஸ்ரீகாந்தி ஆகியோர் பெற்றுக் கொண்டனர். "அனைவருக்கும் வளர்ச்சி கிட்டும். வளமான வலிமையான தமிழ்நாட்டை காண்போம்" என 101 பக்கங்களில் 74 தலைப்புகளில் அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன.

ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள்
> வெளிப்படை தன்மையுடன் நேர்மையான நிர்வாகம் செயல்படும்.
> நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6 சதவீதம் நிதியை கல்விக்கு ஒதுக்க வலியுறுத்தப்படும்.
> தனியார் பள்ளிகள், கேந்திரிய வித்யாலயா பள்ளிகளின் பாட திட்டங்களுக்கு இணையாக அரசு பள்ளிகளில் பாடத் திட்டங்கள் மேற்கொள்ளப்படும்.
> பள்ளி, கல்லூரி மாணவிகளுக்கு நாப்கின் வழங்கப்படும்.
> 50 ஆயிரம் ஆசிரியர்கள் பணி அமர்த்தப்படுவார்கள்.
> 10 ஆயிரம் பள்ளிகள் மாதிரி பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும்.
> மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கப்படும்.
> கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டு வர வலியுறுத்தப்படும்.
> இடைநிற்றலை தடுக்க பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு உதவித் தொகை, மேல்நிலை மாணவர்களுக்கு ரூ.2 ஆயிரம் மாதந்தோறும் வழங்கப்படும்.
> பள்ளிகளில் நீதிபோதனை வகுப்புகள் நடத்தப்படும்.
> ஒரு தொகுதிக்கு ஒரு கலைக் கல்லூரி, ஒரு பாலிடெக்னிக், ஒரு ஐடிஐ தொடங்கப்படும்.
> கல்லூரி மாணவர்களுக்கு ஆண்டுக்கு ஒரு முறை மருத்துவ பரிசோதனை செய்து, ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும்.
> மாவட்டத்துக்கு ஒரு வேளாண்மை கல்லூரி தொடங்கப்படும்.
> தருமபுரி, விழுப்புரம், தஞ்சாவூர், திருநெல்வேலியில் புதிய வேளாண் பல்கலைக் கழகம் உருவாக்கப்படும்.
> 4 இடங்களில் புதிய கால்நடை மருத்துவக் கல்லூரிகள், 10 புதிய சட்டக் கல்லூரிகள் தொடங்கப்படும்.
> கல்வி கடன் தள்ளுபடி செய்யப்படும்.
> தனியார் மருத்துவமனைகளில் புற்று நோய் சிகிச்சைக்கான செலவை அரசே ஏற்க, தனி நிதியம் உருவாக்கப்படும்.
> வேளாண்மைத் துறை, தோட்டக்கலைத் துறை, வேளாண்மை சந்தை துறைக்கு 3 அமைச்சகங்கள் உருவாக்கப்படும்.
> விளை பொருட்களை அரசே கொள்முதல் செய்ய ஆணையம் உருவாக்கப்படும்.
> ஒரு டன் கரும்புக்கு ரூ.4,500, ஒரு குவிண்டால் நெல்லுக்கு ரூ.3 ஆயிரம் குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயிக்கப்படும்.
> வேளாண் தொழிலாளர்களுக்கு ரூ.3 ஆயிரம் ஊக்கத் தொகை, 60 வயது கடந்த விவசாயிகளுக்கு மாதம் ரூ.2 ஆயிரம் ஓய்வூதியம் வழங்கப்படும்.
> வேளாண் பொருட்களை பாதுகாக்க 26 இடங்களில் சிறப்பு மண்டலம் அமைக்கப்படும்.
> கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகள் பெற்ற கடன் தள்ளுபடி செய்யப்படும்.
> புதுச்சேரியிலும் கடன் தள்ளுபடி செய்யப்படும்.
> நீர் மேலாண்மைக்கு பாசன திட்டங்கள் செயல்படுத்தப்படும்.
> சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டு, இடஒதுக்கீடு வழங்கப்படும்.
> நீதித்துறையில் இட ஒதுக்கீடு நடைமுறைப்படுத்த முயற்சிக்கப்படும்.
> பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்படும்.
> தொழில் வளர்ச்சிக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
> முதியோர் ஓய்வூதியம் ரூ.3 ஆயிரமாக வழங்கப்படும்.
> 60 வயதை கடந்த முதியோருக்கு அரசு பேருந்து மற்றும் ரயில்களில் கட்டணமில்லா பயணம் செய்யலாம்.
> கூட்டுறவு வங்கிகள், பொதுத்துறை வங்கிகளில் நெசவாளர்கள் பெற்ற கடன் தள்ளுபடி செய்யப்படும்.
> உயிரிழந்த மீனவர் குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் நிதி உதவி வழங்கப்படும்.
> தமிழக அரசின் அனைத்து துறைகளிலும் 5 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
> மாவட்டத்துக்கு ஒரு மகளிர் கல்லூரி, சென்னை, தருமபுரி, திருநெல்வேலியில் மகளிர் பல்கலைக் கழகங்கள் உருவாக்கப்படும்.
> உள்ளாட்சியில் மகளிருக்கு 50 சதவீதம், காவல் துறையில் மகளிருக்கு 33 சதவீதம் இடஒதுக்கீடு அளிக்கப்படும்.
> தமிழகம் மற்றும் புதுச்சேரியில் குடும்பத் தலைவிக்கு மாதம் ரூ.3 ஆயிரம் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும்.
> கோவை, மதுரை, சேலம், திருச்சி, திருநெல்வேலியில் மெட்ரோ ரயில் அறிமுகப்படுத்தப்படும்.
> விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் தொடரும். வழிபாட்டு தலங்கள், வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்கள், அரசு பள்ளி மற்றும் கல்லூரிகள் மின் கட்டணம் வசூலிக்கப்படாது.
> மாதம் ஒரு முறை மின் கட்டணம் வசூலிக்கப்படும்.
> தமிழில் படித்தவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்கப்படும்.
> இயற்கை வளங்கள் பாதுகாக்கப்படும். காவல் துறை, தீயணைப்புத் துறையில் 8 மணி நேரம் பணி என்பது கட்டாயமாக்கப்படும்.
> இலங்கை பிரச்சினைக்கு தீர்வு என்பது தனி தமிழ் ஈழம் அமைப்பது மட்டும் என்பதால், உலகெங்கும் வாழும் ஈழத்தமிழர்களிடம் பொது வாக்கெடுப்பு நடத்தி, அவர்களது விருப்பப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
> கச்சத்தீவை மீட்டெடுக்க வலியுறுத்தப்படும். அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
> மதுரை, திருவண்ணாமலை, சேலம் உட்பட 9 மாவட்டங்கள் பிரிக்கப்படும்.
> புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து பெற நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளன.
-
ராமதாஸ் தரப்புக்கு பெரிய அடி.. மாம்பழம் சின்னத்தை முடக்கக்கோரிய மனுவை தள்ளுபடி செய்தது ஐகோர்ட்! -
செளமியா அன்புமணிக்கு எதிராக.. தர்மபுரியில் 2 நாட்கள் பிரச்சாரம் செய்யும் ராமதாஸ்.. பாமகவுக்கு செக்! -
“இனி அறுவடை தான்.. தோழமைக் கட்சியினருடன் இணைந்து வேலை செய்யுங்க”.. ஸ்டாலின் கொடுத்த மெசேஜ்! -
எடப்பாடிக்கு அருகில் சீட்.. ஒரே விமானத்தில் பயணம்.. கடைசி நேரத்தில் பிளானை மாற்றிய உதயநிதி! -
கருணாநிதி மறைந்தபோது மெரினாவில் இடம் கொடுக்காதது ஏன்? இதுதான் காரணம் - எடப்பாடி சொன்ன சீக்ரெட்! -
கோவையின் அஸ்திவாரத்திலேயே கை வைத்த செந்தில் பாலாஜி.. மொத்தமாக மாறும் களம் -
நம்பர் 5.. அடித்து சொல்லும் சர்வேக்கள்! திமுக+ 180 இடங்களை தாண்டுகிறது! அதிமுக ஓவர்? முக்கிய கணிப்பு -
கனிமொழி தனிக்கட்சி தொடங்குவார்.. திமுக யாரிடம் செல்லும் என்றே தெரியாது.. அண்ணாமலை பரபர பேச்சு -
வில்லிவாக்கத்தில் ட்விஸ்ட்.. ஆதவ் அர்ஜுனாவுக்கு அடிக்குமா ஜாக்பாட்? களம் எப்படி இருக்கிறது? -
பிராமண எதிர்ப்பு காலாவதியாகிவிட்டதா? - தவெக பொருளாளர் சொல்வது சரியா? -
“எடப்பாடி பழனிசாமி ஒரு மனநல மருத்துவரை பார்த்து பரிசோதிப்பது நல்லது”.. திமுக பெண் தலைவர்கள் தாக்கு -
சோழவந்தான் தொகுதி.. மீண்டும் உதிக்கும் உதயசூரியன்? 30 ஆண்டுகளுக்கு பின் நடக்கப் போகும் சம்பவம்!












Click it and Unblock the Notifications