தைலாபுரத்துக்கு ஷாக்.. ராமதாஸை கழற்றி விடும் திமுக? எடப்பாடி கொடுத்த ஐடியா? சம்மதிப்பாரா அன்புமணி?

Subscribe to Oneindia Tamil

சென்னை: 2026 சட்டமன்றத் தேர்தலை ஒட்டி அதிமுகவுடன் கூட்டணி அமைத்து விட்டார் பாமக தலைவர் ஆன அன்புமணி ராமதாஸ். அன்புமணியுடன் மோதல் போக்கை கடைபிடித்து வரும் ராமதாஸ் என்ன முடிவெடுக்கப் போகிறார்? என்ற எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது. ராமதாஸ் கூட்டணிக்கு வந்தால் விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இருக்கும் பட்டியலின மக்களின் வாக்குகள் பறிபோகலாம் என்பதால் திமுகவும் யோசிப்பதாக சொல்லப்படுகிறது. மறுபுறம் அன்புமணி சம்மதித்தால் அதிமுக கூட்டணிக்கு ராமதாசை கூட்டி வரலாம் என எடப்பாடி பழனிச்சாமி திட்டமிட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

ஒருகாலத்தில் ராமதாஸ் - அன்புமணி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள், தேர்தல் நேரத்தில் சரியாகிவிடும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், பாமகவிலிருந்து அன்புமணியை நீக்கியது, அவர் மீது நிலுவையில் உள்ள சிபிஐ வழக்குகளை மீண்டும் விசாரிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

ராமதாஸின் இந்த நிலைப்பாட்டைப் பார்க்கும் போது, இருவரும் தற்போது ஒரே அணியில் இணைந்து செயல்படும் வாய்ப்பு இல்லை என்றே அரசியல் வட்டாரங்கள் மதிப்பிடுகின்றன. இந்தச் சூழலில்தான், அன்புமணி திடீரென அதிமுக - பாஜக கூட்டணியில் இணைந்தது, அன்புமணி தலைமையிலான பாமகவை தேசிய ஜனநாயக கூட்டணி அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்ததற்கான அறிகுறியாக பார்க்கப்படுகிறது.

Anbumani ramadoss ramadoss PMK

பாமக உட்பிளவு

2024 மக்களவைத் தேர்தலில் விழுப்புரம், சிதம்பரம், கள்ளக்குறிச்சி, சேலம், நாமக்கல், திருப்பூர் உள்ளிட்ட தொகுதிகளில் அதிமுக 35 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகளை பெற்றது குறிப்பிடத்தக்கது. இது மாநில சராசரியான 23 சதவீதத்தை விட அதிகம். இந்த முடிவுகள், பாமகவை விட எடப்பாடி பழனிசாமி மீது வன்னியர்கள் அதிக நம்பிக்கை வைத்திருப்பதை வெளிப்படுத்தின. அதே நேரத்தில், கட்சி நிர்வாகிகள் மற்றும் வன்னியர் சமூகத்தில் அன்புமணி தலைமையிலான பாமகவே இன்னும் செல்வாக்கு பெற்றதாக அதிமுக கருதுகிறது.

அன்புமணி ராமதாஸ்

இதன் காரணமாக, வட தமிழகம், கொங்கு, டெல்டா பகுதிகளில் கூடுதல் தொகுதிகளில் வெற்றி பெற முடியும் என்ற கணக்கில், அன்புமணியை அதிமுக அரவணைத்துள்ளதாக கூறப்படுகிறது. அன்புமணி அதிமுக கூட்டணியில் சேர்ந்ததற்கான முக்கிய நிபந்தனைகளில் ஒன்றாக, ராமதாஸை கூட்டணியில் சேர்க்கக் கூடாது என்பதும் இருந்ததாக அவரது ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர். இதனால், தற்போது ராமதாஸுக்கான கூட்டணி வாய்ப்புகள் என்ன என்ற கேள்வி எழுந்துள்ளது. ராமதாஸ் தரப்பை பொறுத்தவரை, அன்புமணியை விட அதிக எம்எல்ஏக்களை பெற்றுவிடுவது அல்லது அன்புமணி தரப்புக்கு அதிக எம்எல்ஏக்கள் கிடைக்காமல் தடுப்பது என்பதே முக்கிய வியூகமாக அமைந்துள்ளதாக கூறப்படுகிறது.

அன்புமணி

தேர்தலுக்குப் பிறகு அதிக எம்எல்ஏக்கள் யாரிடம் இருக்கிறதோ, அந்தத் தரப்பின் கட்டுப்பாட்டில்தான் பாமக இருக்கும் என்ற நிலைப்பாட்டிலேயே இரு தரப்பும் செயல்படுகின்றனர். தற்போதைய சூழலில், ராமதாஸுக்கு நான்கு வகையான கூட்டணி வாய்ப்புகள் இருப்பதாக அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர். ஒன்று, திமுக கூட்டணியில் விசிகவுக்கு வழங்கப்படும் அளவிற்கு தொகுதிகளைப் பெற்று, அன்புமணி நிறுத்தும் வேட்பாளர்களுக்கு எதிராக போட்டியிட்டு வெற்றி பெறுவது.

அதிமுக கூட்டணி

இரண்டாவது, தமிழக வெற்றிக் கழக கூட்டணியில் இணைந்து, அன்புமணியை விட அதிக தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறுவது. மூன்றாவது, வன்னியர் இடஒதுக்கீட்டை முன்வைத்து சுமார் 60 தொகுதிகளில் தனித்துப் போட்டியிட்டு, அன்புமணி தரப்பின் வெற்றியைத் தடுக்குவது. நான்காவது, கடைசி நேரத்தில் அன்புமணியை சமாதானப்படுத்தி, அதிமுக கூட்டணியில் ஒற்றை இலக்க தொகுதிகளைப் பெறுவது. அன்புமணி அதிமுக அணியில் இணைந்துள்ளதால், வன்னியர்கள் அதிகம் உள்ள பென்னாகரம், தருமபுரி, மேட்டூர், சேலம் மேற்கு ஆகிய நான்கு தொகுதிகளில் அவருக்கு எம்எல்ஏக்கள் கிடைக்கும் வாய்ப்பு அதிகம்.

திமுக

இந்தத் தொகுதிகளில் திமுக வெற்றி பெறுவது கடினம் என்பதால், விசிகவுக்கு இணையான தொகுதிகளை ராமதாஸுக்கு ஒதுக்கி, அந்த நான்கு தொகுதிகள் உள்ளிட்ட இடங்களில் அன்புமணிக்கு எதிராக ராமதாஸ் வேட்பாளர்களை திமுக களமிறக்கலாம் என்ற கணக்கும் பேசப்படுகிறது. திமுக ஆதரவு வாக்குகளுடன், பாமக ஆதரவு வன்னியர் வாக்குகளில் ஒரு குறிப்பிட்ட பகுதி ராமதாஸுக்கு கிடைத்தால், இந்தத் தொகுதிகளில் வெற்றி பெற முடியும். ஆனால், பெரும்பாலான வன்னியர்கள் திமுகவுக்கு எதிரான மனநிலையில் இருப்பதால், பிற தொகுதிகளில் பாமக வாக்குகளை திமுகவுக்கு முழுமையாக மாற்ற முடியுமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

ஆதிதிராவிடர் வாக்குகள்

மேலும், ராமதாஸை கூட்டணியில் சேர்த்தால், ஆதிதிராவிடர் மற்றும் பிற்பட்டோர் சமூக வாக்குகள், குறிப்பாக விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் பாதிக்கப்படலாம் என்ற அச்சமும் திமுக தரப்பில் உள்ளது. நான்கு தொகுதிகளுக்காக 40 தொகுதிகளில் வாக்கு வங்கி சேதமடையும் அபாயம் இருப்பதால், ராமதாஸை கூட்டணியில் சேர்க்க வேண்டாம் என திமுகவுக்கு வியூகம் வகுக்கும் நிறுவனங்கள் ஆலோசனை வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

தமிழக வெற்றிக் கழகம் கூட்டணி

மற்றொரு பக்கம், நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தை பொறுத்தவரை, இதுவரை எந்தக் கட்சியும் கூட்டணிக்கு வராத நிலை உள்ளது. 234 தொகுதிகளிலும் பலமான வேட்பாளர்களை நிறுத்துவது விஜய்க்கு சவாலாக இருப்பதால், ராமதாஸை கூட்டணியில் சேர்த்துக்கொள்ள வாய்ப்பு உள்ளது. ஆனால், அதனால் ஆதிதிராவிடர் மற்றும் பிற்பட்டோர் சமூகங்களில் தனக்கு இருக்கும் ஆதரவு குறைந்து விடுமோ என்ற தயக்கமும் விஜய்க்கு இருப்பதாக கூறப்படுகிறது. வன்னியர் இடஒதுக்கீட்டை முன்வைத்து தனித்துப் போட்டியிட்டால், 60 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் கிடைப்பதே ராமதாஸுக்கு கடினமான பணியாக இருக்கும்.

தவெக - காங்கிரஸ்

ஒருவேளை தவெக - காங்கிரஸ் கூட்டணி உருவானால், திமுக மற்றும் தவெக அணிகளில் ராமதாஸுக்கான பேரம் பேசும் வலிமை அதிகரிக்கும். இதற்கிடையே, தருமபுரி, சேலம் மற்றும் வட தமிழகத்தில் வன்னியர் வாக்குகள் சிதறாமல் தங்கள் அணிக்கு வர வேண்டும் என்பதற்காக, கடைசி நேரத்தில் அன்புமணியை சமாதானப்படுத்தி, ராமதாஸுக்கு ஒற்றை இலக்க தொகுதிகளை வழங்க அதிமுக முன்வரக்கூடும் என்ற கருத்தும் நிலவுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+