ஒருதலைக் காதலால்... பெண்களுக்கு தொல்லை... தண்டனையை கடுமையாக்க ராமதாஸ் கோரிக்கை!!
சென்னை: ஒருதலைக் காதல் கும்பலின் தொல்லையால் பள்ளி, கல்லூரி மற்றும் அலுவலகம் செல்லும் இளம்பெண்கள் பாதுகாப்பாக நடமாட முடியாத நிலை நிலவுகிறது என்று பாமக ராமதாஸ் பதிவிட்டுள்ளார்.
இதுகுறித்து இன்று அவர் தனது ட்விட்டர் பதிவில், ''கள்ளக்குறிச்சி அருகே தொட்டியத்தில் காதலிக்க மறுத்த பத்தாம் வகுப்பு மாணவியை கழுத்தில் பிளேடால் கீறி கொலை செய்ய இளைஞர் முயன்றிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. இதற்கு காரணமான குற்றவாளியை விரைந்து கைது செய்து கடுமையான தண்டனை பெற்றுத்தர காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சர்வதேச பெண் குழந்தைகள் நாளில் இப்படி ஒரு கொடூரம் நடந்திருப்பது வேதனையளிக்கிறது. பாதிக்கப்பட்ட மாணவியை உடனடியாக மீட்டு, மருத்துவமனையில் சேர்த்து காப்பாற்றிய சின்னசேலம் காவல் ஆய்வாளர் ராஜா மற்றும் பொதுமக்களுக்கு பாராட்டுகள்.

ஒருதலைக் காதல் கும்பலின் தொல்லையால் பள்ளி, கல்லூரி மற்றும் அலுவலகம் செல்லும் இளம்பெண்கள் பாதுகாப்பாக நடமாட முடியாத நிலை நிலவுகிறது. இந்த நிலையை மாற்றி பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும். பெண்களை பின் தொடர்ந்து தொல்லை தருவோருக்கான தண்டனையை கடுமையாக்க வேண்டும்'' என்று குறிப்பிட்டுள்ளார்.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications