காதலிக்கலாம்.. ஆனால் 16 வயசில் வருவதற்கு பெயர் என்ன தெரியுமா.. சவுமியா அன்புமணி
காதல் குறித்து சவுமியா அன்புமணி செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்துள்ளார்
சென்னை: "16 வயசில் வருவதெல்லாம் காதல் கிடையாது.. உடலாலும் மனதாலும் தகுதியான பின்னர் வரும் காதல், 5 ஆண்டுகளாவது நிலைத்து நிற்க வேண்டும். அதுதான் உண்மையான காதல்" என்று சவுமியா அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
காதல் விவகாரத்தில் யார் செத்தாலும் சரி, மோதல் ஏற்பட்டாலும் சரி, கலவரம் வெடித்தாலும் சரி, முதலில் வந்து ஒரு கண்டனத்தை தெரிவித்து விட்டு போவது டாக்டர் ராமதாஸ்தான்.
காதலுக்கு எதிரி இல்லை என்று பலமுறை இவர் விளக்கம் அளித்திருந்தாலும், தொடர்ந்த இந்த கேள்வியில் நமக்கு சந்தேகம் இருந்து கொண்டே இருக்கிறது.

தண்ணீர் பிரச்சனை
இந்நிலையில், அன்புமணியின் மனைவி சவுமியா செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவரிடம் தமிழக அரசியல் சூழல், தண்ணீர் பிரச்சனை, பெண்கள் பாதுகாப்பு குறித்து கேள்வி எழுப்பிய செய்தியாளர்கள் காதல் குறித்தும் கருத்து கேட்டனர்.

பெண் பாதுகாப்பு
"பள்ளி மற்றும் கல்லூரிகளில் பெண்களுக்கு பாதுகாப்பு உள்ளது. ஆனால் பொது இடங்களில் பாதுகாப்பு என்பது மிகப் பெரிய கேள்விக்குறியாக உள்ளது. இப்ப தண்ணீர் பிரச்சனை வருவதால்தான் இதைப்பற்றியே பேசுகிறோம். தண்ணீர் தட்டுப்பாட்டுக்கு காரணம், மழைநீரை சேமிக்கவும் வறட்சியைப் போக்குவதற்கும் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. இதற்கு தமிழக அரசின் நிதி பற்றாக்குறைதான்" என்றார்.

வருத்தம்
நடந்து முடிந்த தேர்தலை பற்றின கேள்விக்கு, "தகுதியான வேட்பாளர்களையே பொதுமக்கள் வெற்றி பெற வைக்கவில்லை என்ற வருத்தம் உள்ளது" என்று சவுமியா பதிலளித்தார்.

16 வயசு காதல்
காதல் விவகாரம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். "காதலுக்கு பாமக எதிரியா?" இதுதான் அந்த கேள்வி. இதற்கு சவுமியா, "16 வயதில் வருவது காதல் கிடையாது. உடலாலும் மனதாலும் தகுதியான பின்னர் வரும் காதல், குறைந்தது 5 ஆண்டுகளாவது நிலைத்து நிற்க வேண்டும். அதுவே உண்மையான காதல்" என்று விளக்கம் அளித்தார்.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி












Click it and Unblock the Notifications