லாட்ஜில் உல்லாச வாழ்க்கை.. சென்னையில் யாரிந்த நபர்? இந்தியாவில் போக்சோ சட்டம் கடுமையாக்கப்படுமா?
சென்னை: பெண் குழந்தைகளை சீரழிப்போர்களுக்கு கடுமையான தண்டனைகள் வழங்கப்பட்டு வருகின்றன.. நேற்றைய தினம், சிறுமியை திருமணம் செய்வதாக கூறி பாலியல் தொந்தரவு செய்த கோபிசெட்டிபாளையத்தைச் சேர்ந்த சதீஷ் 20, என்பவர் மீது போலீசார் போக்சோ வழக்கு பதிவு செய்து, விசாரணையும் நடத்தி கொண்டிருக்கிறார்கள்.. எனினும் பெண் பிள்ளைகளுக்கான பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாகி கொண்டே வருகிறது. நேற்று சென்னையில் என்ன நடந்தது?
நம் நாட்டை பொறுத்தவரை, குழந்தைகளின் நலனை காப்பதற்காகவே போக்சோ உள்ளிட்ட எண்ணற்ற சட்டங்களும் அமலில் உள்ளன. அதுபோலவே பாலியல் வக்கிரங்களை அரங்கேற்றுவர்களை தண்டிக்க நீதிமன்றங்களும் துணையாய் நிற்கின்றன..

என்றாலும், பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான துன்புறுத்தல்கள் குறித்தான புகார்கள் அதிகரித்திருப்பதாக தேசிய மகளிர் ஆணையம் வருத்தத்துடன் கூறியிருப்பதை இங்கு நாம் சுட்டிக்காட்ட வேண்டியிருக்கிறது. அதிலும் கடந்த 5 வருடங்களை காட்டிலும் இப்போது கணிசமாக அதிகரித்துள்ளதாக புள்ளி விவரங்களும் தெரிவிக்கின்றன.
போக்சோ சட்டங்கள்
பள்ளிகளில் போதுமான விழிப்புணர்வு இல்லாததால், நிறைய பள்ளி மாணவிகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகும்போதும் அதனை வெளியே சொல்ல அச்சப்படுகிறார்கள். போக்சோ தண்டனைகளை மேலும் கடுமையாக்க வேண்டும் என்றே பெரும்பாலானோர் கோரி வருகிறார்கள்.
நேற்று ஒரே நாளில் நடந்த சென்னை, பெங்களூரில் சிறுமிகள் பலாத்கார சம்பவம் பொதுமக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி வருகிறது.
கர்நாடக மாநிலம் தாவணகெரே (மாவட்டம்) டவுன் பஸ் ஸ்டாண்டுக்கு, 2 நாட்களுக்கு முன்பு இரவு 16 வயது சிறுமி, தன்னுடைய தம்பியுடன் வந்திருந்தாள்.. இருவரும் பஸ்சுக்காக காத்திருக்கும்போது, அங்கு வந்த ஒரு ஆட்டோ டிரைவர், தான் வீட்டில் பத்திரமாக இறக்கி விடுவதாக சொல்லி சிறுமியை அழைத்துள்ளார்.
16 வயது பெண்
உடனே சிறுமியும் தனது தம்பியுடன் ஆட்டோவில் ஏறினார். கொஞ்ச தூரம் சென்றதுமே அந்த ஆட்டோவில் இன்னொரு நபரும் ஏறிக்கொண்டார். அவர் தன்னுடைய நண்பர் என்று சிறுமியிடம் ஆட்டோ டிரைவர் சொன்னார்.. பிறகு ஆள்நடமாட்டம் இல்லாத இடத்துக்கு ஆட்டோவை ஓட்டிச்சென்று, டிரைவரும், அவரது நண்பரும் சேர்ந்து சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றனர்.
இதற்கு சிறுமி மறுப்பு தெரிவிக்கவும், 2 பேரும் சேர்ந்து சிறுமியை தாக்கி உள்ளனர். தடுக்க வந்த தம்பியையும் கொடூரமாக தாக்கினார்கள்.. இதில் அந்த சிறுவன் மயங்கி விழுந்துவிட்டான்.. பிறகு ஆட்டோ டிரைவரும், அவரது நண்பரும் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்தனர்.. சிறுமியிடம் இருந்த செல்போன் , பறித்து கொண்டு தப்பி சென்றனர்.
தம்பியை மீட்ட சிறுமி
பிறகு பாதிக்கப்பட்ட சிறுமி தன்னுடைய தம்பியை மீட்டுக் கொண்டு அங்கிருந்து மறுபடியும் தாவணகெரே டவுனில் உள்ள அரசு பஸ் ஸ்டாண்டுக்கு வந்தார்.. பிறகு அங்கிருந்த கடைக்காரர்களின் உதவியுடன் போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று புகார் தநத்ர். இதையடுத்து, ஆட்டோ டிரைவரையும், நண்பரையும் போலீசார் கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
இதுபோலவே சென்னையிலும் ஒரு கொடுமை நடந்துள்ளது.. பெரம்பூர் பகுதியை சேர்ந்த தம்பதிக்கு 20 வயதில் ஒரு மகனும், 17 வயதில் ஒரு மகளும் உள்ளனர். சென்னையில் உள்ள ஒரு கல்லூரியில் இந்த பெண், முதல் வருடம் படித்து வருகிறார். இவர் 20 வயது மணி என்ற இளைஞருடன் பழகி வந்துள்ளார்.
லாட்ஜில் மது போதை
இந்நிலையில் கடந்த 6ம் தேதி மணி சிறுமியிடம் சென்று, தனக்கு பிறந்தநாள் என்று சொல்லி சிறுமியை மாதவரம் அருகிலுள்ள லாட்ஜூக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு, சிறுமிக்கு மது வாங்கி தந்து குடிக்க வைத்துள்ளார்.. பிறகு சிறுமியுடன் உல்லாசமாக இருந்துள்ளார்.
இந்த விஷயம் தெரிந்ததுமே நேற்றைய தினம் பாதிக்கப்பட்ட சிறுமியின் அம்மா, செம்பியம் மகளிர் போலீசில் புகார் தந்தார்.. ஆனால் அதற்குள் மணி தலைமறைவாகிவிட்டதால், அவரை போலீசார் வலைவீசி தேடி கொண்டிருக்கிறார்கள்.
-
வேட்புமனு தாக்கல் செய்ய.. 4 நாட்கள்தான்! அதிரடியாக அறிவித்த தேர்தல் ஆணையம்! -
சென்னையில் ஓஎம்ஆர், தி நகரில் மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி.. தேடி வந்து விதிக்கப்படும் அபராதம் -
Chennai Expressway: சென்னை டூ பெங்களூர் எக்ஸ்பிரஸ்வே! ஸ்ரீபெரும்புதூரில் நிலத்தின் மதிப்பு கிடுகிடு! -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
தமிழகத்தில் ரெக்கார்டு பிரேக்கிங் தேர்தல் எது? சப்தமில்லாமல் சாதித்த ஜெயலலிதா! -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம்












Click it and Unblock the Notifications