இளமை இனிமேல் போகாது.. முதுமை எனக்கு வாராது! முத்திரை வரியால் ரஜினியை வாழ்த்திய வைரமுத்து
சென்னை: 50 ஆண்டுகள் ஒரே துறையில் உச்சத்தில் இருப்பது அபூர்வம் என்று நடிகர் ரஜினிகாந்துக்கு வைரமுத்து கவிதை வடிவில் வாழ்த்து தெரிவித்துள்ளார். நடிகர் ரஜினிகாந்த் சினிமாவுக்கு வந்து 50 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் கவிஞர் வைரமுத்து தனக்கே உரிய பாணியில் வாழ்த்து தெரிவித்துள்ளார். இளமை இனிமேல் போகாது.. முதுமை எனக்கு வராது என்று முத்து படத்தில் எழுதிய முத்திரை வரியால் வாழ்த்துவதாகவும் அவர் கூறியுள்ளார்.
சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் ரஜினிகாந்த் சினிமாவுக்கு வந்து வரும் 15 ஆம் தேதியோடு திரைத்துறையில் அறிமுகம் ஆகி 50 ஆண்டுகளை நிறைவு செய்கிறார். இதோடு நாளை அவர் நடித்துள்ள கூலி திரைப்படம் வெளியாகிறது. இது ரஜினி ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்டை கொடுத்துள்ளது.

ரஜினிக்கு வைரமுத்து வாழ்த்து
50 ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் அவருக்கு ரசிகர்கள், நடிகர், நடிகைகள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில் கவிஞர் வைரமுத்துவும் ரஜினிக்கு தனேக்க உரிய பாணியில் வாழ்த்து தெரிவித்துள்ளார். முத்து படத்தில் வைரமுத்து பாடல்கள் எழுதிய நிலையில் அதில் ஒரு வரியையும் வைத்து ரஜினிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பக வைரமுத்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-
50 ஆண்டுகள்
ஒரே துறையில்
உச்சத்தில் இருப்பது
அபூர்வம்
ரஜினி
நீங்கள் ஓர் அபூர்வ ராகம்
50 ஆண்டுகள்
ஒரே துறையில்
உச்சத்தில் இருப்பது
அபூர்வம்
ரஜினி
நீங்கள் ஓர் அபூர்வ ராகம்
புகழும் பொருளும்
உங்கள்
உழைப்புக்குக் கிடைத்த
கூலி தொடரட்டும்
உங்கள் தொழில்
நிலைக்கட்டும்
உங்கள் புகழ்
"இளமை இனிமேல் போகாது
முதுமை எனக்கு வாராது" என்று
முத்து படத்தில் எழுதிய
முத்திரை வரியால்
வாழ்த்துகிறேன்.. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
சூப்பர் ஸ்டார் ரஜினி
கடந்த 1975ஆம் ஆண்டு இயக்குனர் கே. பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியான "அபூர்வ ராகங்கள்" திரைப்படம் மூலம் திரைத்துறையில் அறிமுகம் ஆனார் ரஜினிகாந்த். முதலில் துணை கதாபாத்திரம், வில்லன் வேடங்களில் நடித்து வந்தார். இதன்பிறகு பைரவி படத்தின் மூலம் ஹீரோவாக நடிக்க ஆரம்பித்தார்.
இதற்கு பிறகு ரஜினி பல்வேறு படங்களில் நடிகராக நடித்து அசத்தினார். தனது ஸ்டைலால் தமிழக மக்களின் மனதை வென்றெடுத்தார். பில்லா, முரட்டுக்காளை, பாட்ஷா, படையப்பா, முத்து, அண்ணாமலை, சந்திரமுகி, சிவாஜி, எந்திரன், ஜெயிலர் என பல ஹிட் படங்களை கொடுத்துள்ளார். தற்போதும் படங்களில் நடித்து வருகிறார்.
50 ஆண்டுகள்
— வைரமுத்து (@Vairamuthu) August 13, 2025
ஒரே துறையில்
உச்சத்தில் இருப்பது
அபூர்வம்
ரஜினி
நீங்கள் ஓர் அபூர்வ ராகம்
புகழும் பொருளும்
உங்கள்
உழைப்புக்குக் கிடைத்த
கூலி
தொடரட்டும்
உங்கள் தொழில்
நிலைக்கட்டும்
உங்கள் புகழ்
"இளமை இனிமேல் போகாது
முதுமை எனக்கு வாராது" என்று
முத்து படத்தில் எழுதிய
முத்திரை… pic.twitter.com/dtIfpmi3wB
நடிகர் கமல்ஹாசன் வாழ்த்து
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் நடித்து முடித்துள்ளார். நாளை இந்த படம் உலகம் முழுக்க ரிலீஸ் ஆகிறது. இதுவரை 170 படங்களில் நடித்துள்ள ரஜினிக்கு கூலி 171வது படம் ஆகும். இதேபோல் வரும் 15 ஆம் தேதி ரஜினி திரையுலகிற்கு அறிமுகம் ஆகி 50 ஆண்டுகளை நிறைவு செய்கிறார். இதனால் ரசிகர்கள், திரையுலகினர் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். நடிகர் கமல்ஹாசன், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
எடப்பாடி வாழ்த்து
அதிமுக பொதுச்செயலாளர், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, “திரையுலகில் தனக்கே உரிய ஸ்டைலாலும் தனித்துவமான நடிப்பாலும், 50 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள தமிழ் சினிமாவின் சூப்பர்ஸ்டார் சகோதரர் ரஜினிகாந்த்க்கு எனது இதயங்கனிந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்வதுடன், இப்பொன்விழா ஆண்டில் அவரது நடிப்பில் நாளை வெளியாகவுள்ள கூலி திரைப்படம் வெற்றியடையவும் என்னுடைய வாழ்த்துகள்” என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications