'தூங்காத விழிகள் நான்கு' திரைப்படம்.. 7 நாட்களில் 4 பாடல்கள் கொடுக்கிறேன்'..கவிஞர் வைரமுத்து ட்வீட்
சென்னை: இயக்குனர் மணிவாசகன் இயக்கத்தில் வெளிவரவுள்ள 'தூங்காத விழிகள் நான்கு' திரைப்படம் குறித்து கவிஞர் வைரமுத்து ட்வீட் செய்துள்ள்ளார். இயக்குநர் மணிவாசகன் இயக்க உள்ள இந்த படத்துக்கு 'இன்னிசை தென்றல்' தேவா இசையமைக்க உள்ளார்.

முழுக்க, முழுக்க புதுமுக நடிகர்களே இந்த படத்தில் நடிக்கவுள்ளனர். கவிஞர் வைரமுத்து படத்தின் பாடல்களை எழுதவுள்ளார். இந்த திரைப்படம் குறித்து கவிஞர் வைரமுத்து வெளியிட்ட டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-
படம் - தூங்காத விழிகள் நான்கு
இசை - தேவா
நடிகர்கள் - துடைத்துவைத்த
புது நட்சத்திரங்கள்
40நிமிடங்கள் கதை சொல்லி
4 பாடல்கள் எழுதக் கேட்டார்
இயக்குநர் மணிவாசகன்
ஏதோ கேட்கத்
தயங்கி நின்றார்
7 நாட்களில்
4 பாடல்கள் தருவேன் என்றேன்
அப்போது
அவர்தந்த பூக்களில் ஒன்று
அவர் புன்னகையில்

வைரமுத்துவின் இந்த டுவிட்டர் பதிவுக்கு கீழே நெட்டின்கள் பல்வேறு கருத்துக்களை கூறி வருகின்றனர். ''அடுத்த தேசிய விருதுக்கு தயாராகும் படி ஒரு பாடல் எழுதுங்கள் ஐயா'' என்று ஒருவர் கூறியுள்ளார். ''இந்த திரைப்படம் வாழ்த்துகள் கவிஞர் இந்த கூட்டணி வெற்றி பெற வேண்டும்'' என்று வேறு ஒரு நெட்டிசன் கமெண்ட் செய்துள்ளார்.












Click it and Unblock the Notifications