சென்னை அடையாறு போலீசை பதறவைத்த தொழிலதிபர்.. குடிபோதையில் வேகமாக வந்து விபத்து.. பகீர் காட்சிகள்
சென்னை: சென்னை அடையாறில் குடிபோதையில் தாறுமாறாக ஓட்டி சென்ற தொழிலதிபரை சினிமா பாணியில் விரட்டி போலீசார் கைது செய்ய முயன்றனர். அப்போது சாலை தடுப்பில் மோதி அந்த வாகனம் நின்றது. நல்ல வேளையாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
Recommended Video
மது போதையில் விபத்தை ஏற்படுத்திய தொழிலதிபர் காவலர்கள் இடத்தில் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் சென்னை அடையாற்றில் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை அடையாறு சர்தார் பட்டேல் சாலையில் நேற்று இரவு 7.30 மணி அளவில் சொகுசு கார் ஒன்று தாறுமாறாக சென்று கொண்டிருந்தது. அடையாறு புற்று நோய் மருத்துவமனை முன்பு அந்த காரை போலீசார் தடுத்து நிறுத்த முயன்றனர். ஆனால் கார் நிற்காமல் மின்னல் வேகத்தில் சென்றது.

மத்திய கைலாஷ்
சென்னை மத்திய கைலாஷ் சிக்னல் வழியே மதுபோதையில் சொகுசு காரை இயக்கிவந்த அந்தநபர் நிலை தடுமாறி முழு ஊரடங்கிற்காக காவல்துறையினர் சாலையில் அமைந்துள்ள தடுப்பு மீது மோதி விபத்துக்குள்ளாகினார் .

வாக்குவாதம்
அடையாற்றில் உள்ள சாலை தடுப்புகளில் மாறி மாறி மோதி, காரில் ஆக்சிலேட்டரை அழுத்தியபடி குடிபோதையில் நிதானம் இழந்தபடி இருந்த நபரை காரை விட்டு வெளியே வர காவலர்கள் சொன்னார்கள், அப்போது காவலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அந்த நபர் காரின் உள்ளே அமர்ந்து மது அருந்தியாக கூறப்படுகிறது.

பெயரை கூட சொல்ல முடியவில்லை
பார்ப்பதற்கு வயதானவர் போன்று தோற்றமளித்த அந்த நபர், நிதானம் கூட தெரியாத அளவிற்கு மது போதையில் இருந்தார். அவரிடத்தில் அவரது வீட்டு விலாசத்தையும் விசாரிக்க முடியாத நிலையிலும் தனது பெயரைக் கூட சொல்ல முடியாத அளவிற்கு மதுபோதையில் இருந்துள்ளார்.

மருத்துவ பரிசோதனை
இதையடுத்து அவரை காரில் இருந்து மீட்டு அரசு ராயப்பேட்டை மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக காவல்துறையினர்அனுப்பி வைத்தனர் . பிறகு அவரின் வாகனத்தையும் பறிமுதல் செய்து சென்னை அடையாறு காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.

தொழிலதிபர்
விசாரணையில் குடிபோதையில் காரை ஓட்டிவந்தது, தனியார் நிறுவன சேர்மன் ஹரேஸ்வி ஜெட்வானி என்பதும், அவர் துரைப்பாக்கத்தில் வசித்து வருவது தெரியவந்தது. இதுகுறித்து உறவினர்களுக்கு தகவல் அளித்த தெரிவித்த போலீசார் ஜெட்வானி மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

குடித்துவிட்டு சண்டை
ஊரடங்கில் சிலர் பசியும் பட்டினியுமாக இருந்து வரக்கூடிய நிலையில் இவரைப்போன்ற சிலர் மது அருந்திவிட்டு சாலையில் உள்ள அரசு பொருட்களை சேதப்படுத்தி, காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபடும் சம்பவங்கள் ஆங்காங்கே நடந்து வருகிறது.












Click it and Unblock the Notifications