சென்னையில் சுடுகாட்டில் பணியாற்றிய ஊழியரை அடித்தேக் கொன்ற பெண் உள்பட 4 பேர் கைது
சென்னை : சென்னையில் கடன் வாங்கிய தகராறில் சுடுகாட்டில் பணியாற்றிய ஊழியரை அடித்தக்கொன்ற பெண் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் 3 பேரை தேடி வருகின்றனர்.
சென்னை மூலகொத்தளம் ராமதாஸ் நகரை சேர்ந்தவர் ஜெகன்(45). இவர் மூலகொத்தளம் சுடுகாட்டில் மாநகராட்சி மயான ஊழியராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி கடந்த சில ஆண்டுகளுக்கு முன் பிரிந்து சென்றுவிட்டார். அவர் தனது இரண்டு மகள்களுடன் செங்குன்றம் அடுத்த அலமாதியில் தனது பெற்றோர் வீட்டில் வசித்து வந்தார்.

ஜெகனுக்கு குடிப்பழக்கத்திற்கு அடிமையாக இருந்திருக்கிறார். அவர் பலரிடம் வட்டிக்கு பணம் வாங்கி குடித்து செலவு செய்து வந்திருக்கிறார். இதனால் கடன் கொடுத்தவர்கள் கொடுத்த பணத்தை திருப்பி கேட்டு ஜெகனை வற்புறுத்தி வந்துள்ளார்கள். இதனிடையே கடந்த வாரம் லோன் வாங்கி ஒரு சிலருக்கு கடன் தொகையை திருப்பி கொடுத்துள்ளார். ஆனால் உடன் வேலை பார்த்த சசி(45), வேலு(35), சூரியா(25) ஆகியோருக்கு தர வேண்டிய பணத்தை திரும்பி தரவில்லை என கூறப்படுகிறது.
இதனால் மூவரும் நேற்று முன்தினம் இரவு ஆட்டோவில் சென்று அலமாதியில் இருந்து ஜெகனை கடத்தி வந்து மூலகொத்தளத்தில் உள்ள வேலு வீட்டில் அடைத்து வைத்து பணம் கேட்டு சரமாரியாக தாக்கிவிட்டு இருக்கிறார்கள் இதில் வலி தாங்காமல் ஜெகன் துடித்துடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். இதனால் அவர்கள் அனைவரும் அங்கிருந்து தப்பியோடிவிட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்து வண்ணாரப்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஜெகனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து, கொலை வழக்க பதிவு செய்த போலீசார் சசி, வடிவேல், சூரியா, சித்ரா ஆகிய நான்கு பேரை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள 3 பேரை தீவிரமாக தேடி வருகிறார்கள். கொடுக்கல் வாங்கல் தகராறில் மயான ஊழியர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் வண்ணாரப்பேட்டை பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
-
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மீண்டும் வந்த அதே வரலாற்று சிக்னல்.. தங்கம் விலை மிகப்பெரிய அளவில் சரிகிறது.. இப்போ வாங்கலாமா? -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன












Click it and Unblock the Notifications