ஐபிஎல்: சேப்பாக்கத்துக்கு வரும் ரசிகர்களின் பைக்குகளை குறிவைத்து திருட்டு.. தட்டி தூக்கிய போலீஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை பார்பதற்காக சென்னை சேப்பாக்கம் மைதானத்திற்கு வரும் கிரிக்கெட் ரசிகர்களின் புல்லட் பைக்குகளை குறிவைத்து ஒரு கும்பல் திருடி வந்துள்ளது. இந்த நிலையில் அந்த கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர்.

ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் சென்னை சேப்பாக்கம் மைதானத்திலும் நடைபெற்று வருகிறது. 4 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னையில் நடைபெறும் இந்த போட்டியைக் காண கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆர்வம் உள்ளது.

இப்படி கிரிக்கெட் போட்டியை காண பைக்குகளில் மைதானத்திற்கு வரும் கிரிக்கெட் ரசிகர்கள் தங்கள் பைக்குகளை மைதானத்திற்கு எதிரே உள்ளபகுதிகளில் நிறுத்தி வைத்து விட்டு செல்கின்றனர். போதிய பார்க்கிங் வசதி இல்லாததால் திறந்த வெளியிலும் பாதுகாப்பற்ற முறையிலும் பைக்குகளை ரசிகர்கள் நிறுத்தி செல்வதை காண முடிகிறது.

Police arrested two people for stealing Cricket Fans bike in Chennais Chepakkam

இந்த நிலையில், இதைப் பயன்படுத்தி கிரிக்கெட் ரசிகர்களின் பைக்குகளை குறிவைத்து ஒரு கும்பல் தொடர்ச்சியாக திருடி வந்துள்ளது. இந்த திருட்டு கும்பலை போலீசார் கையும் களவுமாக பிடித்துள்ளனர். இது குறித்த விவரம் வருமாறு: -

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கடந்த மாதம் 12 ஆம் தேதி சென்னை சூப்பர் கிங்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதிய போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியைக் காண சென்னை மாதவரம் பகுதியை சேர்ந்த அஸ்வின் என்ற இளைஞர் தனது புல்லெட் பைக்கில் வந்திருந்தார்.

மைதானத்திற்கு வெளியே பைக்கை நிறுத்தி வைத்து விட்டு மேட்ச் பார்க்க சென்ற அஸ்வின் போட்டி முடிந்து வெளியே வந்து பார்த்த போது அங்கு தனது புல்லட் பைக் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். வேறு இடத்தில் யாராவது தள்ளி விட்டு இருப்பார்களோ என்று அங்கும் இங்கும் தேடிய போதும் பைக் இல்லை.

இதனால், பைக்கை யாரோ திருடிச்சென்றதை உணரந்த அஸ்வின், போலீசில் புகார் அளித்தார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் கண்காணிப்பை தீவிரப்படுத்தினர். இந்த நிலையில், நேற்று முன் தினம் சென்னை சூப்பர் கிங்ஸ் - பஞ்சாப் அணிகள் மோதிய போட்டி சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியைக் காண ரசிகர் ஒருவர் தனது புல்லெட் பைக்கில் வந்து இருந்தார்.

மைதானத்திற்கு வெளியே பைக்கை நிறுத்திவிட்டு போட்டியை காண சென்ற நிலையில், பைக்கின் சைடு லாக்கை உடைக்க இருவர் முயற்சி செய்ததை போலீசார் கவனித்தனர். அவர்களை பிடித்து விசாரணை நடத்தியதில், அவர்கள் பல பைக்குகளை திருடி வந்தது தெரியவந்தது. அவர்கள் இருவரும் நெல்லையை சேர்ந்த சுரேஷ் ராஜன் மற்றும் தூத்துக்குடியை சேர்ந்த மணி என்பது தெரியவந்தது.

விலை உயர்ந்த பைக்குகளை குறிவைத்து திருடி வந்ததும் அதிகப்படியான பைக்குகள் சேர்ந்ததும் மொத்தமாக சொந்த ஊருக்கு சென்று விற்பனை செய்து வந்ததும் அவர்களிடம் நடத்திய விசாரணையில் தெரியவந்தது. மேலும், சென்னையில் பல்வேறு பகுதிகளில் திருடிய பைக்குகளை பார்க்கிங்கில் நிறுத்தி வைத்து உள்ளதை கண்டறிந்த போலீசார் அந்த பைக்குகளையும் மீட்டனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+