நயன்தாரா- விக்கி திருமணம்.. மகாபலிபுரம் கடற்கரையில் திரண்ட மக்கள்.. காவலர்கள் விரட்டியதால் பரபரப்பு
சென்னை: மகாபலிபுரம் கடற்கரைக்கு வந்த மக்கள் விக்னேஷ் சிவன்- நயன்தாரா திருமணத்தை காண வந்திருப்பதாக கருதிய போலீஸார் அவர்களை விரட்டியடித்தனர்.
Recommended Video
நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து வருகிறார்கள். அவர்களின் திருமணம் எப்போது என ரசிகர்கள் எதிர்பார்ப்பில் இருந்தனர். இதனிடையே கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இருவருக்கும் ரகசியமாக நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
திருமணத்தை ஜூன் 9ஆம் தேதி திருப்பதியில் நடத்துவதாக இருந்தது. ஆனால் கொரோனா கட்டுப்பாடுகளால் அங்கு திருமணம் செய்ய அவர்களுக்கு அனுமதி கிடைக்கவில்லை. இதையடுத்து மகாபலிபுரத்தில் ஹெரட்டன் கிராண்ட் ரிசார்ட்டில் திருமணம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

நயன்தாரா - விக்னேஷ் சிவன்
நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணம் இன்று மகாபலிபுரத்தில் நடைபெற்றது. நேற்று முன்தினம் மெஹந்தி வைபவம் தொடங்கியது. இவர்களது திருமணம் இந்து முறைப்படி நடைபெற்றது. கெட்டி மேளம் கொட்ட இன்று காலை 10.25 மணிக்கு திருமணம் நடைபெற்றது. இவர்களது திருமண விழாவையொட்டி ஒரு லட்சம் பேருக்கு திருமண விருந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ரஜினிகாந்த் வருகை
இந்த திருமணத்திற்கு நடிகர் ரஜினிகாந்த், ஷாரூக் கான், விஜய் சேதுபதி, நடிகர் கார்த்தி, தயாரிப்பாளர் போனி கபூர், நடிகர் சரத்குமார், நடிகை ராதிகா, இயக்குநர் கே எஸ் ரவிக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த திருமணத்திற்கு செல்லும் பிரபலங்கள் அல்லாதோருக்கு QR code ஸ்கேன் செய்யப்பட்ட பின்னரே உள்ளே அனுமதிக்கப்படுகிறார்கள்.

நயன் திருமணம்
மேலும் நயன் திருமணத்திற்கு வருகை தருவோர் வீடியோ, புகைப்படம் எடுக்க தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் மகாபலிபுரம் சுற்றுலா தலம் என்பதால் அங்கு பொதுவாக மக்கள் கூட்டம் அதிகமாகவே காணப்படும். அதிலும் கடற்கரை பகுதியிலும் கோயிலிலும் அதிக கூட்டம் இருக்கும்.

நயன்தாரா திருமணம்
இந்த நிலையில் மகாபலிபுரம் கடற்கரைக்கு சாரை சாரையாக பொதுமக்கள் வந்த வண்ணம் உள்ளனர். இதனால் அவர்களை தடுத்து நிறுத்திய போலீஸார் அவர்கள் நயன்தாரா திருமணத்திற்கு வருவதாக கருதி அவர்களை தடுத்து நிறுத்தினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
-
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள்












Click it and Unblock the Notifications