Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சென்னையில் "தலைவர்கள்".. ஜி20 மாநாடு ஆரம்பம்.. அதென்ன 'ட்ரோன்'? போலீஸ் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் இன்று முதல் மூன்று நாட்களுக்கு ட்ரோன்கள் உள்ளிட்ட ஆளில்லா சிறிய ரக விமானங்கள் வாகனங்கள் பறக்க சென்னை பெருநகர காவல்துறையினர் தடை விதித்துள்ளனர்.

ராணுவம் தொடங்கி இயற்கை பேரிடர், சினிமா மற்றும் உளவு என பல்வேறு பணிகளுக்கு தற்போது ட்ரோன்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு நாளும் இதன் பயன்பாடு என்பது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இவ்வாறு இருக்கையில் இதனை கட்டுப்படுத்த பல்வேறு வரைமுறைகளை மத்திய அரசும் காவல்துறையினரும் விதித்து வருகின்றனர். யாராவது இந்த ட்ரோனை பயன்படுத்த வேண்டும் எனில் சுமார் 25 படிவங்களை பூர்த்தி செய்ய வேண்டும்.

இது தவிர இதை பறக்க வைக்க கட்டணம் ரூ.3,000 ஆக நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. அதேபோல இதை இயக்குபவர்கள் இதற்கென தனியாக பயிற்சி பெற்று பைலட் லைசென்ஸ் கொண்டிருக்க வேண்டும். இவ்வளவு கெடுபிடிகள் இருந்ததால் ட்ரோன் பயன்பாடு குறைவான அளவில் இருந்தன. இந்நிலையில் இந்த கட்டுப்பாடுகளை கடந்த 2021ம் ஆண்டு மத்திய அரசு தளர்த்தியது, அதன்படி ட்ரோன்களை இயக்க 25 படிவங்களை படிவங்களை பூர்த்தி செய்ய வேண்டிய அவசியமில்லை. அதற்கு மாறாக 6 படிவங்களை மட்டும் பூர்த்தி செய்தால் போதுமானதாகும்.

தளர்வுகள்

தளர்வுகள்

அதன் பின்னர் கட்டணமும் ரூ.3,000லிருந்து வெறும் 100 ரூபாயாக குறைக்கப்பட்டது. மேலும், ட்ரோன் பறக்க பச்சை, மஞ்சள் மற்றும் சிவப்பு நிற மண்டலங்கள் இருந்த நிலையில் பச்சை மண்டலத்தில் ட்ரோன்களை இயக்க அனுமதி தேவையில்லை என்றும் மத்திய அரசு கூறியது. இதனையடுத்து ட்ரோன் பயன்பாடு மற்றும் விற்பனை கடந்த 2 ஆண்டுகளில் கணிசமான அளவில் அதிகரித்தது. இருப்பினும் சிலர் இதனை தவறான நோக்கத்திற்காக பயன்படுத்துவதாக சர்ச்சைகள் எழுந்தன. இதனை அவ்வப்போது காவல்துறையினர் கண்காணித்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

சென்னையில்

சென்னையில்

இப்படி இருக்கையில் சென்னையில் இன்று தொடங்கி 3 நாட்களுக்கு ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்படுவதாக பெருநகர சென்னை மாநகராட்சி காவல்துறையினர் உத்தரவிட்டுள்ளனர். இது தொடர்பாக அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில், "ஜி20 மாநாட்டின் கூட்டம் கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் 24 மற்றும் 25ம் தேதி நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் 29 வெளிநாட்டு பிரதிநிதிகள், 15 வெளிநாட்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள் ஆகியோர் பங்கேற்கின்றனர். இவர்கள் அனைவரும் அண்ணாசாலை, அடையாறு சர்தார்படேல் சாலை, வேளச்சேரி சாலை, கிண்டி ஆகிய இடங்களில் உள்ள நட்சத்திர ஹோட்டல்களில் தங்குகின்றனர்.

3 நாட்கள்

3 நாட்கள்

எனவே, இவர்கள் தங்கும் ஹோட்டல்கள், பயணம் செய்யும் சாலைகள், கூட்டம் நடைபெறும் இடம் ஆகியவை சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்படுகிறது. இதனால் சென்னை பெருநகர காவல் துறைக்குட்பட்ட பகுதிகளில் பாதுகாப்பு கருதி மார்ச் 23 முதல் 25-ஆம் தேதி வரை 3 நாட்கள் ட்ரோன்கள் உள்ளிட்ட ஆளில்லாத வான்வழி வாகனங்கள் பறக்கத் தடை விதிக்கப்படுகிறது" என்று காவல்துறை கூறியிருக்கிறது. மேற்குறிப்பிட்டதைப்போல ட்ரோன்களை இயக்க 3 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. இதில் மஞ்சள் மண்டலத்தில் ட்ரோன்களை 400 அடிக்கு மேல் இயக்கிக்கொள்ளலாம். ஆனால் பச்சை மண்டலம் போல இங்கு அனுமதி வாங்காமல் ட்ரோனை இயக்க முடியாது.

சிவப்பு மண்டலம்

சிவப்பு மண்டலம்

அதாவது கடற்படை மற்றும் விமான போக்குவரத்துத்துறை அனுமதி பெற்ற பின்னரே இந்த மண்டலத்தில் ட்ரோன் இயக்கப்பட வேண்டும். மீறி இயக்கினால் ட்ரோன் பறிமுதல் செய்யப்படுவதுடன் அதை இயக்கிய நபரும் கைது செய்யப்படுவார். இறுதியாக இருப்பது சிவப்பு மண்டலம். இந்த மண்டலத்தில் ட்ரோன்கள் எக்காரணத்தை கொண்டும் இயக்கக்கூடாது. மீறி அதை இயக்கும் அவசியம் ஏற்பட்டால் நேரடியாக மத்திய அரசிடம் அனுமதி பெற வெண்டும். தற்போது கிண்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளாக அறிவிக்கப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+