உணவுப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் பதிவாகும் வழக்குகள்.. போலீஸ் விசாரிக்க முடியாது.. ஹைகோர்ட்
சென்னை: உணவுப்பாதுகாப்பு சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்படும் வழக்குகளை காவல்துறை விசாரிக்க முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
பெங்களுருவில் இருந்து குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்களை கடத்தி வருவதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், நாமக்கல் மாவட்டம் பரமத்தி காவல்நிலைய உதவி ஆய்வாளர் தலைமையிலான காவல்துறையினர் கடந்த ஜனவரி 14 ம் தேதி கீரம்பூர் சுங்கச்சாவடி அருகே சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, லாரி ஒன்றை வழிமறித்து சோதனை செய்ததில், 3 ஆயிரத்து 500 கிலோ குட்கா, பான்மசாலா போன்ற தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
இது தொடர்பாக குடோன் உரிமையாளர் தங்கராஜ் உள்ளிட்ட 4 பேர் மீது பரமத்தி காவல்நிலையத்தில் இந்திய தண்டனை சட்டம், சிகரெட் மற்றும் புகையிலை பொருள் ஒழுங்குமுறைச் சட்டம் மற்றும் உணவுப்பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கை ரத்து செய்ய கோரி குடோன் உரிமையாளர் தங்கராஜ் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், உணவுப்பாதுகாப்பு சட்டத்தின் கீழான குற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரிக்க தனி அதிகாரிகள் இருப்பதாகவும், இந்த பிரிவுகளின் கீழ் தொடர்ப்படும் வழக்குகளை காவல்துறையினர் விசாரிக்க முடியாது எனவும் தெரிவித்தார்.
இந்த சட்டத்தின் கீழ், பதிவு செய்யப்பட்ட குற்றச்சாட்டுகளை கைவிடும்படி காவல்துறையினருக்கு அறிவுறுத்திய நீதிபதி, இந்திய தண்டனைச் சட்டம், சிகரெட், புகையிலை பொருட்கள் ஒழுங்குமுறை சட்டப்பிரிவுகளின் கீழான குற்றச்சாட்டுகளை தொடர்ந்து காவல்துறை விசாரிக்க வேண்டும் என கூறி, வழக்கை ரத்து செய்ய மறுத்த நீதிபதி, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
-
Vijay Friend: "சார் அந்த கச்சத்தீவு.." நோ கமெண்ட்ஸ்னு சொன்ன மீன்வளத் துறை அமைச்சர் ஸ்ரீநாத்! -
பிச்சு உதற போகுது கனமழை.. 7 மாவட்டங்களில் டமால் டுமீல் தான்! வங்கக்கடல் சக்கரத்தால் இனி கூலிங் தான்! -
சென்னையில் பச்சிளம் குழந்தை கடத்தல்.. ஆக்ஷனில் இறங்கிய போலீஸ்! 5 மணி நேரத்தில் குற்றவாளி கைது! -
லேட் ஆகுது மதுரவாயல் பாலம்.. முடங்கும் கார் ஏற்றுமதி! சென்னை போர்ட்டில் நடப்பது என்ன? எக்ஸ்க்ளூசிவ் -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்?












Click it and Unblock the Notifications