கன்பார்ம்.. நுரையீரலில் திரவமே இல்லை.. ஜெயக்குமார் பிரேத பரிசோதனை.. போலீஸ் பிடித்த பாயிண்ட்
சென்னை: நெல்லை காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் மரணம் தொடர்பான வழக்கில் புதிய திருப்பம் ஏற்பட்டு உள்ளது.
நேற்று அவரின் பிரேத பரிசோதனை அறிக்கையின் முழு விவரங்கள் வெளியானது. இன்று அந்த அறிக்கையின் கூடுதல் தகவல்கள் கிடைத்துள்ளன.

அந்த அறிக்கையில், ஜெயக்குமார் நுரையீரலில் தண்ணீர் இல்லை, திரவம் எதுவும் இல்லை. அதேபோல் தொண்டை மொத்தமாக எரிந்து உள்ளது. குரல்வளையை இல்லை. இது எல்லாம் பொதுவாக ஏற்கனவே ஒருவர் இறந்து அவரை எரியூட்டினாள் மட்டுமே நடக்கும்.
எனவே போலீஸ் இதில் முக்கிய முடிவிற்கு வந்துள்ளது. அதில் ஜெயக்குமார் ஏற்கனவே இறந்துவிட்டார். அதன்பின் அவரை எரியூட்டி உள்ளனர்.; அப்படி என்றால் இது தற்கொலையாக இருக்காது. ஏனென்றால் இதில் கண்டிப்பாக இன்னொரு நபர் தொடர்பு படுத்தப்பட்டு இருக்கிறார்.
இன்னொரு நபர் இல்லாமல் உடல் ஒன்றை எரியூட்ட முடியாது என்பதால்வழக்கில் திருப்பம் ஏற்பட்டு உள்ளது
கொலை: இன்னொரு பக்கம் ஜெயக்குமாரின் மகனிடம் டிஎன்ஏ பரிசோதனை செய்ய முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் உயிரிழந்த விவகாரத்தில் இதனால் தற்போது புதிய திருப்பம் ஏற்பட்டு உள்ளது.
சம்பவ இடத்தில் கண்டுபிடிக்கப்பட்ட உடல் தனது கணவரின் உடலே அல்ல ஜெயக்குமாரின் மனைவி ஜெயந்தி மறுத்து உள்ளார். உடலில் இருக்கும் அடையாளங்கள் தனது கணவரின் உடல் அடையாளங்கள் இல்லை என்று மறுத்துள்ளார்.
இந்த நிலையில்தான் ஜெயக்குமாரின் மகனிடம் DNA பரிசோதனை செய்ய போலீசார் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இரண்டு பேரிடமும் டிஎன்ஏ பரிசோதனை செய்து அதை ஒப்பிட்டு பார்க்க முடிவு செய்துள்ளனர்.
காங்கிரஸின் திருநெல்வேலி கிழக்கு மாவட்டத் தலைவர் கே.பி.கே ஜெயக்குமார் தனசிங் மரணத்தில் வெளிவந்துள்ள ஆதாரங்கள் வைத்து பார்க்கையில் இது கொலையாக இருக்கலாம் என்றே முதல் கட்ட தகவல்கள் கூறுகின்றன.
ஜெயக்குமார் மே 3ஆம் தேதி காணாமல் போனதாகக் கூறப்பட்ட நிலையில், சனிக்கிழமை அவரது வீட்டின் பின்புறத்தில் பாதி எரிந்த நிலையில் சடலம் கண்டெடுக்கப்பட்டது. போலீஸ் வட்டார தகவலின்படி, ஜெயக்குமார் தனக்கு நிறைய பணம் கொடுக்க வேண்டிய மூத்த அரசியல்வாதிகள் உட்பட சில நபர்களால் உயிருக்கு பயந்து வாழ்ந்து வந்ததாக கூறப்பட்டது.
அதோடு, உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக திருநெல்வேலி காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளிக்க முடிவெடுத்து கடிதம் எழுதி இருக்கிறார். அவர் எழுதியதாகக் கூறப்படும் இரண்டு கடிதங்கள் - ஒன்று திருநெல்வேலி எஸ்பிக்கும் மற்றொன்று அவரது மருமகனுக்கும். இரண்டும் அவரது அலுவலக மேஜையில் காணப்பட்டன, அவை ஒருபோதும் போலீசாரிடம் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
இவரை வீட்டின் பின்புறத்தில் மின் கம்பிகளில் கட்டி வைத்து எரித்து கொலை செய்துள்ளனர். அதற்கு முன் அவரை துன்புறுத்தியதாகவும் கூறப்படுகிறது.
இவர் எழுதிய புகார் ஏன் காவல்துறையிடம் ஒப்படைக்கப்படவில்லை என்பது தெளிவாகத் தெரியவில்லை. அந்த கடிதத்தில் தனக்கு பணம் தர வேண்டியவர்களில் ஒரு எம்.எல்.ஏ மற்றும் முன்னாள் எம்.பி ஆகியோர் அடக்கம். ஆனால் இவர்கள் பணம் தரவில்லை. லோக்சபா தேர்தலுக்கு முன்னதாக அவரது வீட்டிற்கு அருகே சிலர் சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடுவது கண்டுபிடிக்கப்பட்டது என்றும் போலீசார் தரப்பு தெரிவித்துள்ளது.
போலீஸ் விசாரணையில், ஜெயக்குமார் தான் எழுதிய கடிதங்களை நகல்கள் எடுக்குமாறு தனது உதவியாளரிடம் கூறியது தெரியவந்தது. மே 2ம் தேதி மாலை அவர் காணாமல் போனாலும், மறுநாள் மாலைதான் புகார் அளிக்கப்பட்டது. பாதிக்கப்பட்டவரின் ஓரளவு கருகிய உடலின் மீது ஒரு மரப் பலகை வைக்கப்பட்டு, அவரது வீட்டின் பின்னால் கண்டுபிடிக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications