பாலியல் சீண்டல்.. பத்ம சேஷாத்ரி ராஜகோபாலன் மீது போக்சோ உள்பட 5 பிரிவுகளின் கீழ் வழக்கு
சென்னை: மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக புகாருக்குள்ளான பத்மா சேஷாத்ரி பாலபவன் பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
Recommended Video
சென்னை கே கே நகர் பத்மா சேஷாத்ரி பால பவன் பள்ளியில் 20 ஆண்டுகளாக பணியாற்றி வந்த ராஜகோபாலன் என்ற வணிகவியல் ஆசிரியர் பல ஆண்டுகளாக அவரிடம் படிக்கும் மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு வந்ததாக புகார் எழுந்துள்ளது.
இதுகுறித்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் முன்னாள் மாணவி புகார் அளித்திருந்தார். அதே போன்ற பல மாணவிகளும் புகார் அளித்து வந்தனர்.

மாணவி
ஆசிரியர் ராஜகோபாலன் மாணவிகளிடம் ஆன்லைன் வழியாக வகுப்புகள் எடுக்கும் போது குளித்து விட்டு பாத்ரூமில் இருந்து அப்படியே நேராக வருவது, இடுப்பில் வெறும் துண்டை மட்டும் அணிந்து கொண்டு வகுப்பு எடுத்தது உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டதாக புகார்கள் எழுகின்றன.

ராஜகோபாலன்
இதையடுத்து காவல் துறை துணை ஆணையர் ஜெயலட்சுமி நேற்றைய தினம் பள்ளி நிர்வாகத்திடமும் ராஜகோபாலனிடமும் விசாரணை நடத்தினார். இதையடுத்து மடிப்பாக்கத்தில் சுற்றி வளைக்கப்பட்ட ராஜகோபாலன் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டார்.

மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்
இதுகுறித்து விசாரணை நடத்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலருக்கு உத்தரவிடப்பட்டது. அதன்படி சென்னை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அனிதா, தனியார் பள்ளி தாளாளர் மற்றும் பள்ளி முதல்வர் கீதா ஆகியோரிடமும் விசாரணை நடத்தப்பட்டது.

கல்வித் துறை
இதையடுத்து பள்ளி நிர்வாகத்தின் அறிக்கை முதன்மை கல்வி அலுவலரிடம் சமர்ப்பிக்கப்பட்டது. அந்த அறிக்கை பள்ளிக் கல்வி ஆணையருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது குறித்து தமிழக அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டதாக கல்வித் துறையினர் தெரிவித்துள்ளனர்.

ராஜகோபாலன் கைது
இதனிடையே இந்த விவகாரம் தொடர்பாக, அளிக்கப்பட்ட புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். போக்சோ சட்டம் உள்பட 5 பிரிவுகளில் ஆசிரியர் ராஜகோபாலன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது மற்றும் தகவல் தொழில்நுட்ப சட்டப்பிரிவின் கீழும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
-
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
"நீங்கள் ஸ்டாலினை சீண்டி இருக்கலாம்.. ஆனால் என்னிடம் வேண்டாம்.!" ஆளுநர் ரவிக்கு மம்தா எச்சரிக்கை -
பவன் கல்யாண் போட்ட தூண்டில்.. நாமக்கல்லில் 70% எகிறும் விஜய் கிராஃப்.. திமுகவுக்கு 4 பக்கம் ஆபத்து? -
எடப்பாடியை முதல்வராக மோடி - அமித்ஷா அறிவிக்காதது ஏன்.. காரணம் இதுதான்.. உடைத்த பிரபலம் -
விசிக 8, மதிமுக 4.. நாளைக்குள் தொகுதி பங்கீட்டை முடிக்கும் திமுக.. குறைந்த தொகுதிகளில் உதயசூரியன்! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
பச்சை, வெள்ளை, சர்க்கரை ரேஷன் அட்டையில் அரசு சலுகைகள்! 3 மாதம் பொருட்கள் வாங்காவிட்டால் கார்டு கட்? -
175 சீட் "மாஸ்டர் பீஸ்" தலைகீழாக போகுதே? கியரை மாற்றிய திமுக, அஇஅதிமுக.. லட்டு சான்ஸ் மிஸ் ஆகிறதே? -
நாடு முழுதும் ESMA அமல்.. கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டால் மத்திய அரசு அதிரடி.. மீறினால் அவ்வளவுதான்












Click it and Unblock the Notifications