"பெரியார் வேஷம் போட்ட குழந்தையை.." ஒற்றை கமெண்டால் கம்பி எண்ணும் வெங்கி.. தேவையா இது..!
சென்னை : பெரியார் வேடமிட்ட குழந்தையை கொன்று ரோட்டில் தொங்கவிட வேண்டும் என்று பேஸ்புக்கில் பதிவு செய்த பேரூராட்சி பணியாளரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பிரபல தனியார் தொலைக்காட்சி ஒன்றில் கடந்த சில நாட்களாக குழந்தைகளை வைத்து ரியாலிட்டி ஷோ ஒன்று நடத்தப்பட்டு வருகிறது.
காமெடியோடு சமூக கருத்துக்களை சொல்லும் வகையில் அந்த ரியாலிட்டி ஷோவில் பெரியார் வேடமணிந்த குழந்தை ஒன்று பங்கேற்றது பெரும் பேசுபொருள் ஆகியது.

டிவி நிகழ்ச்சி
இந்நிலையில் நிகழ்ச்சியில் பங்கேற்ற குழந்தையை பார்த்த கயத்தாறு பேரூராட்சியில் தற்காலிக பணியாளராக பணியாற்றி வரும் வெங்கடேஷ் குமார் பாபு என்ற நபர் அந்த குழந்தையை அடித்து கொன்று ரோட்டில் தொங்க விட வேண்டும் என்றும், அப்போது தான் மற்ற குழந்தைகளுக்கும், பெற்றோர்களுக்கும் பயம் வரும் என்றும் கூறி பேஸ்புக்கில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். மேலும் ஏன் வா.உ.சி., தேவர், பாரதி , நேதாஜி இவர்கள் வேஷம் போட முடியாதா என்றும் வெங்கடேஷ் குமார் பாபு என்ற பெயரில் இருந்த அந்த நபர் சர்ச்சைக்குரிய வகையில் கமெண்ட் செய்திருந்தார்

போலீசில் புகார்
இந்த நிலையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் கோவை மாநகர செயலாளர் சாஜித் தலைமையில் கோவை மாநகர காவல் ஆணையரிடம் புகார் அளித்தனர். தனியார் தொலைக்காட்சியில் குழந்தைகள் நிகழ்ச்சியில் பெண் விடுதலை, இளைய சமுதாயம் எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்து கருத்துக்கள் வெளியிடப்படுகின்றன. அப்படி பெரியார் வேடமணிந்து பேசிய குழந்தைகயை தமிழக முதலைமைச்சர் அழைத்து பரிசு வழங்கி ஊக்கப்படுத்தினார்.

கடும் நடவடிக்கை
வெங்கடேஷ் குமார் பாபு என்பவர் குழந்தையை அடித்து கொன்று நடு ரோட்டில் தொங்கவிடவேண்டும், என்று பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார். தனக்கு பிடிக்காத வேடமாக இருந்தாலும் மழலை என்று பாராமல் காட்டுத்தனமாக பேசிய அடிப்படை மதவாதியை கண்டித்து இன்று கோவை மாநகர காவல் ஆணையரிடம் புகாரளித்துள்ளோம். மேல் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளார் எனவும் அவர்கள் கூறியிருந்தனர்.

கமெண்ட் செய்தவர் கைது
இந்நிலையில் வெங்கடேஷ் குமார் பாபுவின் கமெண்ட் தொடர்ந்து சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியது எடுத்து அவருக்கு கடும் கண்டனங்கள் குவிந்தது. அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து நிலையில் வெங்கடேஷ் குமார் பாபு மீது இதுகுறித்து கயத்தாறு பேரூர் தி.மு.க. செயலாளர் சுரேஷ் கண்ணன் கயத்தாறு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில், போலீசார் வெங்கடேஷ் குமார் பாபுவை கைது செய்தனர். மேலும் அவர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications