கீர்த்தி சுரேஷை பார்க்க குவிந்த கூட்டத்தால் போக்குவரத்து நெரிசல்.. ரசிகர்கள் மீது போலீசார் தடியடி
Recommended Video

சென்னை: வேலூர் மாவட்டம் திருப்பத்தூரில் நகைக்கடை திறப்பு விழாவில் கலந்து கொள்ள வந்த நடிகை கீர்த்தி சுரேஷைக் காண ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
நடிகையை காண வந்த ரசிகர்களை போலீசார் அடித்து விரட்டியதால் , பலர் கீழே விழுந்து காயமடைந்தனர்.
வேலூர் மாவட்டம் திருப்பத்தூரில் தனியார் நகைக்கடையின் புதிய கிளை அமைக்கப்பட்டது. இக்கடையின் திறப்பு விழா நேற்று நடைபெறும் என்றும், இதில் நடிகை கீர்த்தி சுரேஷ் கலந்து கொள்வர் என்றும் விளம்பரப்படுத்தப்பட்டது.
[இன்னும் கண்டுபிடிக்கப்படாத மலேசிய விமானம்.. அடுத்தடுத்த விபத்தில் சிக்கும் இந்தோனேஷிய விமானங்கள்]

குவிந்த ரசிகர்கள்
இதையடுத்து அங்கு காலை முதலே ஏராளமான ரசிகர்கள் திரளத் தொடங்கினர். நேரம் செல்லச் செல்ல ரசிகர்கள் கூட்டம் அதிகரித்து, சாலை முழுவதும் கூட்டமாகக் காணப்பட்டது.
ரசிகர்கள் கூட்டத்தின் காரணமாகவும், சாலையை ஆக்கிரமித்து மேடை அமைக்கப்பட்டிருந்ததாலும், அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

நகைக்கடை திறந்த கீர்த்தி சுரேஷ்
இதனால் அச்சாலையில் போக்குவரத்தை போலீசார் முற்றாக தடை செய்தனர். இதனிடையே ரசிகர்களின் உற்சாக முழக்கத்திற்கிடையே காரில் வந்த கீர்த்தி சுரேஷ், நகைக்கடையை திறந்து வைத்து முதல் விற்பனையை தொடங்கி வைத்தார்.

நடனமாடி அசத்தல்
பின்னர், சாலை மறித்து அமைக்கப்பட்டிருந்த மேடையில் தோன்றி கையசைத்ததோடு, சிறிது நேரம் பேசி நடனமாடினார்.
நிகழ்ச்சி முடிந்ததும் ரசிகர்களுடன் செல்ஃபி எடுத்துக் கொண்ட கீர்த்தி சுரேஷ், காரில் ஏறி புறப்பட்டார். ஆனால் ரசிகர்களின் கும்பலுக்கிடையே கார் மாட்டிக் கொண்டதோடு, நகர முடியாமல் நின்றது.

தடியடி
காருக்கு வழிவிடாத ரசிகர்களால் மீண்டும் நெரிசல் உருவானதையடுத்து அங்கு வந்த போலீசார், ரசிகர்களை அடித்து விரட்டினார். பலர் கீழே விழுந்து காயமடைந்த நிலையில், அடிதாங்க முடியாமல் பலர் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். இதனால் திருப்பத்தூரில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications