சேப்பாக்கம் ஸ்டேடியத்திற்கு தேசியக்கொடியுடன் ரசிகர்களுக்கு அனுமதி இல்லையா? கொதித்த அண்ணாமலை
சென்னை: சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்திற்கு இந்திய தேசியக் கொடியை கொண்டு செல்ல அனுமதி மறுக்கப்பட்டு இருப்பதாக குற்றம் சாட்டியுள்ள தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்திற்கு இந்த அதிகாரத்தை கொடுத்தது யார் ? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
கடந்த 14-ம் தேதி அகமதாபத்தில் இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி பாகிஸ்தானை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. போட்டியின் போது பாகிஸ்தான் வீரர் முகம்மது ரிஸ்வான் அவுட் ஆகி பெவிலியன் திரும்பும் போது இந்திய ரசிகர்கள் சிலர் அவரை ஜெய்ஸ்ரீராம் என கோஷம் எழுப்பிய விமர்சனத்திற்கு உள்ளானது. இது தொடர்பாக பல்வேறு தரப்பினரும் இந்திய ரசிகர்களின் செயல்பாடு ஏற்றுக்கொள்ள முடியாதது என்று விமர்சனத்தை முன்வைத்தனர்.

தமிழக விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் இந்த விவகாரத்தை கையில் எடுத்து விளையாட்டில் அரசியல் கலக்க கூடாது என்று சாடியிருந்தார். அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், இந்தியா அதன் விளையாட்டுத்திறன் மற்றும் விருந்தோம்பல் ஆகியவற்றிற்கு புகழ்பெற்றது. இருப்பினும், அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் பாகிஸ்தான் வீரர்கள் நடத்தப்பட்ட விதம் ஏற்றுக்கொள்ள முடியாதது.

தேசியக்கொடி எடுத்துச்செல்ல: விளையாட்டு நாடுகளுக்கு இடையே ஒருங்கிணைக்கும் சக்தியாக இருக்க வேண்டும், உண்மையான சகோதரத்துவத்தை வளர்க்க வேண்டும். வெறுப்பை பரப்பும் கருவியாகப் பயன்படுத்துவது கண்டிக்கத்தக்கது" என்று சாடியிருந்தார். இந்த நிலையில், தான் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதும் போட்டி நடைபெறுகிறது. இந்தப் போட்டியை காண சென்ற கிரிக்கெட் ரசிகர்கள் இந்திய தேசியக் கொடியை எடுத்து செல்ல போலீசார் அனுமதி அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இது தொடர்பாக விமர்சனத்தை முன்வைத்துள்ள தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, மூவர்ண கொடியை அவமதித்த போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இது தொடர்பாக அண்ணாமலை தனது எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது:- பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியின் போது ஜெய்ஸ்ரீராம் என கோஷம் எழுப்பியதில் உதயநிதி ஸ்டாலினுக்கு அதிருப்தி ஏற்பட்டது. கடந்த காலங்களில் பாகிஸ்தானில் இந்திய வீரர்கள் நடத்தப்பட்ட விதத்தை மறந்துவிட்டார்.
மன்னிப்பு கேட்க வேண்டும்: திமுக அமைச்சர் பொன்முடியின் மகனும் தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவராகவும் இருக்கும் அசோக் சிகாமனி, தேசிய கொடியை அவமதித்து தனது அரசியல் பிரசாரத்தை மேலும் ஒரு படி மேலே எடுத்து சென்றுள்ளார். சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடைபெறும் கிரிக்கெட் போட்டியைக் காண செல்லும் ரசிகர்கள் கையில் இந்திய தேசியக் கொடியை எடுத்துச் செல்ல மைதானத்திற்கு வெளியே இருக்கும் ரசிகர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்திற்கு இந்த அதிகாரத்தை கொடுத்தது யார்? இந்திய தேசியக் கொடியை அவமதித்த போலீஸ் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்துகிறோம். தமிழ்நாடு மக்களிடம் திமுகவும் மன்னிப்பு கேட்க வேண்டும். தவறினால் மூவர்ண கொடியின் கண்ணியத்தை காக்க தவறிய திமுக அரசுக்கு எதிராக போராட்டம் நடத்த வேண்டிய நிர்பந்தித்திற்கு பாஜக தள்ளப்படும்" என்று பதிவிட்டுள்ளர்.
-
Mano Thangaraj: அமைச்சர் மனோ தங்கராஜுக்கு சீட் இல்லை.. கைவிரித்த திமுக தலைமை.. இதுதான் காரணமா? -
ஓ.பன்னீர்செல்வத்துக்கு போடி.. வைத்திலிங்கம், மனோஜ் பண்டியனுக்கு எந்த தொகுதி? விவரம்! -
விட்டு கொடுக்காத திமுக.. விஜய்யுடன் நேருக்கு நேர் போட்டி.. பெரம்பூர் சிட்டிங் எம்எல்ஏக்கு வாய்ப்பு -
தலைநகர் சென்னையை மொத்தமாக அள்ள திமுக பிளான்.. 15 தொகுதிகளில் நேரடி போட்டி! 1ல் காங்கிரஸ்! -
கள்ளக்குறிச்சி, பெரியகுளம் உள்பட விசிக போட்டியிடும் 8 தொகுதிகள் எவை! வெளியானது பட்டியல் -
விசிகவுக்கு திருப்போரூர், பெரியகுளம் உள்பட 8 தொகுதிகள்! உத்தேச பட்டியல் வெளியீடு! -
விஜயபாஸ்கரை பார்த்து பயம்.. செந்தில் பாலாஜிக்கு தில் இருக்கா.. கோவை தெற்கு அதிமுக வேட்பாளர் தடாலடி -
கட்டுக்கட்டாக பணம்.. சென்னையில் திமுக எம்பி ஜெகத்ரட்சகன் நிறுவன காரில் ரூ.60 லட்சம் பறிமுதல் -
சென்னை மாணவி தடா அருவிக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
தேமுதிக போட்டியிடும் 10 தொகுதிகள் இறுதியானது.. திமுக தலைமையகத்தில் சுதீஷ் சொன்ன சேதி! -
Election Exclusive: வரம் கொடுத்த சாமி தலையில் கை வைத்த பிரேமலதா.. திமுக தொகுதிகளை கேட்டு அடம்! குட்டையைக் குழப்பு காங்.! -
கோவையில் போட்டியிடும் செந்தில் பாலாஜி.. நிர்வாகிகளுக்குப் பறந்த மெசேஜ்












Click it and Unblock the Notifications