ஆருத்ரா மோசடி: போலீஸுக்கு தண்ணீர் காட்டும் நடிகர் ஆர்.கே.சுரேஷ்.. சொத்துகளை முடக்க திட்டம்!
சென்னை: ஆருத்ரா நிதி நிறுவன மோசடி வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள நடிகரும் தயாரிப்பாளருமான ஆர்.கே.சுரேஷ் பல முறை சம்மன் அனுப்பியும் ஆஜராகாததால் அவருடைய சொத்துகளை முடக்க பொருளாதார குற்றப்பிரிவு துறை முடிவு செய்துள்ளது.
ஆருத்ரா, ஹிஜாவு, ஐஎஃப்எஸ் எல்பின் உள்ளிட்ட 8 பெரிய நிதி நிறுவனங்கள் தமிழகம் முழுவதும் 2.91 லட்சத்திற்கும் மேற்பட்ட முதலீட்டாளர்களிடம் இருந்து பணத்தை வசூலித்துள்ளது. அவ்வாறு வசூலித்த ரூ 14,168 கோடி பணத்தை மோசடி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இது தொடர்பாக நிதி நிறுவன நிர்வாகிகள், முகவர்கள் உள்பட 45 பேரை குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்துள்ளனர். இதில் ஆருத்ரா நிதி நிறுவனம் 1 லட்சம் முதலீட்டாளர்களிடம் இருந்து 2,.438 கோடி ரூபாய் மோசடி நடந்துள்ளது. இந்த வழக்கில் மாலதி, மைக்கேல்ராஜ், செந்தாமரை, சந்திர கண்ணன், ஹரீஷ் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த வழக்கில் காஞ்சிபுரத்தை சேர்ந்த ரூசோ கைது செய்யப்பட்டார். அவர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில்தான் இந்த வழக்கில் ஆர்.கே. சுரேஷுக்கும் தொடர்பிருப்பது தெரியவந்தது. தனக்கு பாஜகவில் செல்வாக்கு இருப்பதால் இந்த வழக்கில் சிக்கிய குற்றவாளிகளை காப்பாற்றுவதாக கூறி ரூ 12.50 கோடியை வாங்கியதாக ரூசோ வாக்குமூலம் அளித்துள்ளார்.
ரூசோவின் வாக்குமூலத்தின் அடிப்படையில் தமிழக பாஜக ஓபிசி பிரிவு துணைத் தலைவரான ஆர்.கே.சுரேஷுக்கும் பாஜகவின் நிர்வாகி ஹரீஷுக்கும் தொடர்பிருப்பது தெரியவந்தது. ஆருத்ராவை தொடர்ந்து எல்பின் நிதி நிறுவன நிறுவனருக்கும் ஆர்.கே. சுரேஷ் உதவி செய்தது தெரியவந்தது. இந்த நிலையில் 10 மாதங்களாக ஆர்.கே. சுரேஷ் வெளிநாட்டில் தலைமறைவாக இருந்து வருகிறார்.
அவரை பிடிக்க பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். ஆர்.கே.சுரேஷ் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என பலமுறை சம்மன் அனுப்பியும் இதுவரை அவர் நேரில் ஆஜராகாமல் விளக்கத்தையும் அளிக்காமல் இருந்து வருகிறார். இவர் துபாயில் தங்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அண்மையில் கூட கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஆர்.கே.சுரேஷ் உள்ளிட்ட முக்கிய குற்றவாளிகளை ஒப்படைக்க துபாய் அரசுக்கு கடிதம் எழுதப்பட்டிருந்தது. இந்த நிலையில் சென்னையில் உள்ள நடிகர் ஆர்.கே.சுரேஷின் சொத்துகளை முடக்க காவல் துறையினர் திட்டமிட்டுள்ளது தெரியவந்துள்ளது.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications