நடிகர் விஜய் சேதுபதிக்கு மிரட்டல்- உதைத்தால் பரிசு என அறிவித்த அர்ஜூன் சம்பத் மீது போலீஸ் வழக்கு
சென்னை: நடிகர் விஜய் சேதுபதியை உதைத்தால் ரூ1,001 பரிசு என அறிவித்த இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
நடிகர் விஜய் சேதுபதியின் உதவியாளர் மீது பெங்களூரு விமான நிலையத்தில் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதல் நடத்திய தமிழகத்தைச் சேர்ந்த நபர், பசும்பொன் முத்துராமலிங்க தேவரை விஜய் சேதுபதி அவமரியாதையாக பேசியதாக குற்றம்சாட்டி இருந்தார்.
ஆனால் இது தொடர்பாக விஜய் சேதுபதி எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. அதேநேரத்தில் இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத், தமது கட்சியின் அதிகாரப்பூர்வ பக்கத்தில் இந்த விவகாரத்தை கிளப்பி இருந்தார்.

அர்ஜூன் சம்பத் மிரட்டல்
மேலும் அந்த பக்கத்தில், நடிகர் விஜய் சேதுபதியை உதைப்பவர்களுக்கு பரிசு வழங்கப்படும்; ஒரு உதைக்கு ரூ1,001 பரிசு தொகையை இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜூன் சம்பத் வழங்குவார் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதற்கு பல்வேறு தரப்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

அர்ஜூன் சம்பத் மீது வழக்கு
இந்நிலையில் விஜய் சேதுபதிக்கு மிரட்டல் விடுத்ததாக அர்ஜூன் சம்பத் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தல், சமூக அமைதியை சீர்குலைத்தல் உள்ளிட்ட காரணங்களுக்காக அர்ஜூன் சம்பத் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

சூர்யாவுக்கு அர்ஜூன் சம்பத் பாணியில் மிரட்டல்
அர்ஜூன் சம்பத்தின் இந்த பதிவைத் தொடர்ந்துதான் நடிகர் சூர்யாவின் ஜெய் பீம் திரைப்படத்துக்கு பாமகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். அத்துடன் பாமகவின் மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் பழனிச்சாமி, நடிகர் சூர்யாவை தாக்கினால் ரூ1,00,000 லட்சம் பரிசு வழங்கப்படும் என மிரட்டல் விடுத்தார். இதனைத் தொடர்ந்து பாமகவினரோ, பரிசு தொகை வேண்டாம் விஜய் சேதுபதியை நாங்கள் தாக்குகிறோம் என கூறியதால் பதற்றம் ஏற்பட்டது.

பாமக நிர்வாகி மீதும் வழக்கு
இது தொடர்பாக நடிகர் சூர்யா தரப்பில் போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டது. இதனால் நடிகர் சூர்யாவின் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அத்துடன் நடிகர் சூர்யாவுக்கு மிரட்டல் விடுத்த பாமக மாவட்ட செயலாளர் பழனிச்சாமி மீது 5 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications