Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

உஷார் உங்கள் வாகனத்தில் இந்த ஸ்டிக்கர் உள்ளதா? உடனே நீக்கிடுங்க.. போலீஸ் கண்காணிக்கிறது

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் அரசு நிர்ணயித்த விதிகளுக்கு உட்படாமல் நம்பர் பிளோட் பொருத்திய 5,963 வாகன ஓட்டிகள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல் பல்வேறு ஸ்டிக்கர்களை முறைகேடாக பயன்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சாலை பாதுகாப்பு விதிகளிலும், போக்குவரத்து விதிகளிலும் தமிழ்நாடு போக்குவரத்து போலீசார் கண்டிப்பு காட்டி வருகிறார்கள். கடந்த சில நாட்களுக்கு முன்புதான் தமிழ்நாட்டில் பைக் மற்றும் கார் ஓட்டுனர்கள் தங்கள் நம்பர் பிளேட்களில் டிசைன்களை பயன்படுத்த கூடாது என்று போலீசார் எச்சரிக்கை விடுத்து இருந்தனர்.

நம்பர் பிளேட்களில் எந்த விதமான டிசைன்களை பயன்படுத்தினாலும் அபராதம் விதிக்கப்படும். போக்குவரத்து சட்டப்பிரிவு 177ன்கீழ் ரூ.100 அபராதம் விதிக்கப்படும் என்று போலீசார் கண்டிப்புடன் தெரிவித்துள்ளனர்.

புதிய விதி

புதிய விதி

இன்னொரு பக்கம் உரிய அடையாள அட்டை இல்லை தங்கள் பணி குறித்து வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்ட கூடாது என்றும் போலீசார் உத்தரவிட்டுள்ளனர். அதாவது பலர் வழக்கறிஞர், ராணுவம், போலீஸ், பத்திரிக்கையாளர் என்று ஸ்டிக்கர் ஒட்டுவது உண்டு. சிலர் இந்த பணிகளை மேற்கொள்ளவில்லை என்றாலும் பொய்யாக ஸ்டிக்கர் ஒட்டிக்கொள்ளவது உண்டு.

சிக்கல்

சிக்கல்

உரிய அடையாள அட்டையின்றி பத்திரிகையாளர், வழக்கறிஞர், போலீஸ் என 'ஸ்டிக்கர்' ஒட்டுவது தவறு என்று போலீசார் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்து இருந்தனர். இந்த நிலையில் இப்படி பொய்யாக ஸ்டிக்கர் ஒட்டி சாலையில் வலம் வந்தவர்களின் வாகனங்களிலிருந்து, அந்த ஸ்டிக்கர்களை போலீசார் கடந்த சில நாட்களாக அகற்றி வருகிறார்கள். இவர்களுக்கு உரிய அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

அபராதம்

அபராதம்

சென்னையில் அரசு வாகனம் என குறிக்கும் வகையில் சாதாரண அரசு ஊழியர்கள் தங்கள் சொந்த வாகனங்களில் ஒட்டியிருந்த ஜி ஸ்டிக்கரையும் போலீசார் நீக்கி நடவடிக்கை எடுத்தனர். இது தொடர்பாக தமிழ்நாடு காவல்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் அரசு நிர்ணயித்த அளவுகளின்படி வாகனங்களில் நம்பர் பிளேட் பொருத்தாமல் வந்த 2,341 வாகன ஓட்டிகள் மீது போக்குவரத்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர். மத்திய மோட்டார் வாகன விதிகள் 1989 பிரிவு 50 மற்றும் 51-ன்படி வாகனங்களின் நம்பர் பிளேட்களில் உள்ள எழுத்துக்கள் மற்றும் எண்களின் பின்னணி நிறம், அளவு மற்றும் குறிப்பிட்ட இடைவெளிகள் இருக்க வேண்டும் எனவும், பிற வாசகங்கள், சின்னங்கள் அல்லது படங்கள் நம்பர் பிளேட்களில் ஒட்டவும்/எழுதவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

விதி என்ன

விதி என்ன

ஆனால் சமீபகாலமாக, மோட்டார் வாகன சட்டத்தில் அரசு நிர்ணயித்துள்ள விதிமுறைகளின் படி நம்பர் பிளேட் பொருத்தாமல், பல்வேறு அளவுகள் மற்றும் வாசகங்களுடன் நம்பர் பிளேட்களை பொருத்தியும், பொதுமக்களில் சிலர் அரசு வாகனம் (G), காவல் (Police) வழக்கறிஞர், (Advocate) மனித உரிமைகள் ஆணையம் (Human Right Commission), பத்திரிகை மற்றும் ஊடகம் (Press & Media) இது போன்று பல துறையை சார்ந்த ஸ்டிக்கர்களை ஒட்டி முறைகேடாக பயன்படுத்தி வருவதாக தொடர்ந்து காவல் துறைக்கு வந்த புகார்களை அடுத்து சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால், இ.கா.ப மேற்படி முறைகேட்டில் ஈடுபடும் நபர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டதின் பேரில் சட்டம் மற்றும் ஒழுங்கு ஆய்வாளர்கள் மற்றும் போக்குவரத்து காவல் ஆய்வாளர்கள் தலைமையில் காவல் குழுவினர் வாகன தணிக்கை செய்து சம்பந்தப்பட்ட நபர்கள் மீது தகுந்த நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர்.

நடவடிக்கை

நடவடிக்கை

சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறையினர் இன்று (27.10.2021) மாலை வரை சிறப்பு வாகன தணிக்கை செய்து பிற வாசகங்கள், சின்னங்கள், படங்கள் மற்றும் அரசு நிர்ணயித்த அளவுகளில் இல்லாமல் நம்பர் பிளேட்கள் பொருத்தி வந்த 2,341 வாகன ஓட்டிகள் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.
ஆக மொத்தம் கடந்த 2 நாட்களில் அரசு நிர்ணயித்த விதிகளுக்கு உட்படாமல் நம்பர் பிளோட் பொருத்திய 5,963 வாகன ஓட்டிகள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அபராதம்

அபராதம்

இந்த சிறப்பு தணிக்கை தொடர்ந்து 3 நாட்கள் நடத்தப்பட்டு மத்திய மோட்டார் வாகன விதிகளின் படி இல்லாமல், குறைபாடுகளுடன் நம்பர் பிளேட்கள் பொருத்தி வரும் வாகன ஓட்டிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை பெருநகர காவல் துறை சார்பாக தெரிவிக்கப்பகிறது. எனவே பொதுமக்கள் அரசு நிர்ணயித்துள்ள அளவுகளில் நம்பர் பிளேட்களை பொருத்தியும், தேவையற்ற வாசகங்களை நீக்கம் செய்தும் ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது, என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+