கண்கள் சிவந்த ஸ்டாலின்.. கிராமசபை கூட்டத்தில்.. விவசாயியை எட்டி உதைத்த செயலாளர்.. தனிப்படை அமைப்பு
ஸ்ரீவில்லிபுத்தூர் : விவசாயி மீது தாக்குதல் நடத்திய ஊராட்சி செயலரை கைதுசெய்ய தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே நேற்று நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் விவசாயி மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
நேற்றுதான் விவசாயியை எட்டி உதைத்த ஊராட்சி செயலாளர் தங்கபாண்டியனை சஸ்பெண்ட் செய்து வட்டார வளர்ச்சி அலுவலர் மீனாட்சி உத்தரவிட்டார். விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பிள்ளையார் குளம் ஊராட்சி கங்கா குளம் பகுதியில் இந்த கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது.
அப்பகுதி அதிமுக எம்.எல்.ஏ மான்ராஜ் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் அரசு அதிகாரிகள் பங்கேற்று இருந்தனர். அப்போது விவசாயிகள் பலரும் கேள்வி எழுப்பி உள்ளனர். அப்போது விவசாயி அம்மையப்பர், ஊராட்சி செயலாளர் தங்க பாண்டியனை மாவட்ட ஆட்சியர் மாற்றி நான்கு மாதங்கள் ஆகிவிட்டது. ஏன் மீண்டும் ஊராட்சி செயலாளர் இங்கு வந்துள்ளார் என்று கேட்டுள்ளார்.

இதை கேட்டதும் கோபம் அடைந்த தங்க பாண்டியன் அதிமுக எம்.எல்.ஏ மான்ராஜ் முன்னிலையில் அந்த விவசாயியை எட்டி உதைத்து உள்ளார். இந்த நிலையில்தான் விவசாயியை எட்டி உதைத்த ஊராட்சி செயலரை கைது செய்ய 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளது.
பிள்ளையார்குளம் செயலர் தங்கப்பாண்டியன் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஸ்ரீவில்லிபுத்தூர் டிஎஸ்பி முகேஷ் செல்வகுமார் தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் இன்று பெரும்பாலும் தங்கபாண்டியன் கைது செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
( சாட்டையை விளாசும் ஸ்டாலின்.. ரெடியான பெரிய ஆர்டர்? ஒன்றாக அழைக்கப்பட்ட கலெக்டர்கள், எஸ்.பிக்கள் )
கிராம சபை கூட்டம்: மகாத்மா காந்தி பிறந்தநாளை ஒட்டி தமிழ்நாடு முழுவதும் நேற்று கிராமசபை கூட்டம் நடந்தது . காணொலி வாயிலாக முதல்வர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அதில், மக்களாட்சி முதலில் மலர்ந்த இடம் கிராமங்கள்தான். திராவிட மாடல் ஆட்சி அமைந்தபிறகுதான் கிராம சபை கூட்டம் நடக்கிறது.
முறையாக தடங்கல் இன்றி கிராம சபை கூட்டங்களை நடத்தி வருகிறோம். கிராமப்புற மக்களின் குரல் எப்போதும், எந்த சூழலிலும் தடையின்றி ஒலிக்க வேண்டும் என்று குறிப்பிட்டார்.
தமிழ்நாட்டில் காந்தி ஜெயந்தி 02.10.2023 அன்று 12,525 கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டங்கள் நடந்தது. இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களதிகாரத்திற்கு முக்கியத்துவம் அளித்திடும் வகையில் இவ்வரசு பொறுப்பேற்றவுடன் கிராம ஊராட்சிகளில் ஆண்டுதோறும் நடைபெறும் 4 கிராம சபைக் கூட்டங்கள் என்பதை 6 ஆக உயர்த்தி அரசாணையிட்டு கிராம சபைக் கூட்டங்கள் நடைபெறுவது உறுதி செய்யப்படுகிறது.
( கிராமசபை கூட்டம்.. கேள்வி கேட்ட விவசாயியை எட்டி உதைத்த ஊராட்சி செயலாளர்.. பாய்ந்தது ஆக்ஷன் )
இந்தியா கிராமங்களில் வாழ்கிறது என்றுரைத்த உத்தமர் காந்தியடிகளின் பிறந்ததினமான அக்டோபர் 2-ஆம் நாளில் நடைபெற உள்ள கிராமசபைக் கூட்டங்களில் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் பொதுமக்கள் பெருந்திரளாகக் கலந்து கொள்ளும் வகையில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அனைத்து கிராம ஊராட்சிகளும்கிராம சபைக் கூட்டங்களில் பொதுமக்கள் அதிக அளவில் கலந்து கொள்ள அனைத்து உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுத்திடும் வகையில் கிராமசபைக் கூட்ட அழைப்பிதழ் ஒன்று வடிவமைக்கப்பட்டு ஊரக வாழ் பொதுமக்களுக்கு இல்லம் தோறும் வழங்கப்பட்டுள்ளது, என்று கூறப்பட்டு உள்ளது.
என்ன நடக்கும்?: "எல்லார்க்கும் எல்லாம் என்றிருப்பதான இடம் நோக்கி நடக்கின்றது இந்த வையம்" என்கிற புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் அவர்களின் வரிகளுக்கிணங்கவும், மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் எண்ணப்படி "அனைவரையும் உள்ளடக்கிய, பொறுப்புள்ள மக்கள் நலனை மையமாகக் கொண்ட உள்ளாட்சி நிர்வாகத்தினை நோக்கிய இந்த கிராம சபையின் கருப்பொருளாக "எல்லார்க்கும் எல்லாம்" என்கிற மையகருத்தின்படி நடத்தப்படவுள்ளது.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
மத்தி மீனின் "கோடி" ரூபாய் ரகசியம்.. விலை மலிவான இந்த மீனுக்குள் ஒளிந்திருக்கும் நன்மை! வரப்பிரசாதம்












Click it and Unblock the Notifications