சென்னை தரமணியில் சோகம்.. விபத்தை ஏற்படுத்திவிட்டோம் என்ற குற்ற உணர்ச்சி.. உயிரையே விட்ட போலீஸ்காரர்
சென்னை: சென்னை தரமணி அருகே இன்று காலையில், உடலில் பெட்ரோல் ஊற்றி போலீஸ்காரர் ஒருவர் தீக்குளித்து தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. நேற்று மாலை மதுபோதையில் காரை ஓட்டி சென்று இருசக்கர வாகனத்தில் சென்றவர் மீது விபத்தை ஏற்படுத்தியதால் குற்ற உணர்ச்சியில் இருந்த போலீஸ்காரர் இன்று காலையில் தற்கொலை செய்துள்ளார்.
சென்னை தரமணி காவல்நிலையத்தில் தலைமைக் காவலராக பணியாற்றி வருபவர் செந்தில். நாகப்பட்டினத்தை சேர்ந்த இவர் சென்னை ஆலந்தூரில் உள்ள காவலர் குடியிருப்பில் மனைவி மற்றும் குழந்தைகளுடன் தங்கி வசித்து வந்தார். இவருக்கு இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள். நேற்று மாலை 5.30 மணியளவில் செந்தில் கிண்டி அருகே காரில் சென்று கொண்டிருந்தார்.

மது போதையில் காரை ஓட்டி விபத்து
அப்போது அவர் மதுபோதையில் இருந்ததாக சொல்லப்படுகிறது. மடுவின்கரை மேம்பாலத்தில் சென்றபோது கார் கட்டுபாடின்றி சென்றதாக கூறப்படுகிறது. இதில், முன்னால் சென்ற இருசக்கர வாகனம் மீது அவரது கார் வேகமாக மோதியது. இருசக்கர வாகனத்தில் சென்ற நபர் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தார். விசாரணையில் அவரது பெயர் முருகேசன் என்பதும், தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்ததும் தெரியவந்தது. அவருக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதையடுத்து அங்கிருந்தவர்கள் ஒன்று திரண்டு படுகாயமடைந்தவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே காரை தாறுமாறாக ஓட்டிச் சென்று விபத்தை ஏற்படுத்திய தலைமைக் காவலர் செந்திலை மற்ற வாகன ஓட்டிகள் விரட்டி சென்று கத்திப்பாரா மேம்பாலம் அருகே பிடித்தனர். பின்னர் செந்திலை பிடித்து கிண்டி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசிடம் ஒப்படைத்தனர்.
மன உளைச்சலில் இருந்தார்
தொடர்ந்து விபத்து குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். காயமடைந்தவர்கள் தரப்பிலும் புகார் அளிக்கப்பட்டதால், தலைமைக் காவலர் செந்தில் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. பின்னர் அவரிடம் எழுதி வாங்கிவிட்டு போலீசார் அனுப்பியதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் விபத்து ஏற்படுத்தி பொதுமக்கள் விரட்டி சென்று பிடித்தது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியானதை பார்த்து செந்தில் மன உளைச்சல் அடைந்துள்ளார். எனினும் இன்று வழக்கம்போல் பணிக்கு சென்றுள்ளார். அப்போது அவர் காலை 11 மணியளவில் கிண்டி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசில் ஆஜராகும் படி அறிவுறுத்தப்படது. அதன்பேரில் மோட்டார் சைக்கிளை எடுத்துக்கொண்டு அங்கு சென்றார்.
பைக்கிலிருந்து பெட்ரோலை எடுத்து..
ஆனால் அவர் செல்லும் வழியிலேயே தரமணி ரயில்வே மைதானம் மோட்டார் சைக்கிளை நிறுத்தி, அதில் இருந்த பெட்ரோலை வாட்டர் கேனில் எடுத்தார். ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் வைத்து திடீரென அவர் தன் உடலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துள்ளார். சத்தம் கேட்டு ஓடி வந்த அந்த வழியாக சென்றவர்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.
ஆனால் அங்கு டாக்டர்கள் பரிசோதித்து விட்டு அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். விபத்து ஏற்படுத்திய மன உளைச்சலில் அவர் இந்த விபரீத முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. மற்றவர்களுக்கு உதாரணமாக தைரியத்துடனும், தன்னம்பிக்கையுடன் இருக்க வேண்டிய போலீஸ்காரரே மன உளைச்சலில் இத்தகைய செயலில் ஈடுபட்டது அப்பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தற்கொலை தீர்வு அல்ல
தற்கொலை என்பது எந்தவொரு பிரச்சினைக்கும் தீர்வு இல்லை.. தற்கொலை செய்து கொள்ளும் எண்ணம் தோன்றினால் உடனடியாக சினேகா தற்கொலை தடுப்பு உதவி எண்: 044 -2464000 (24 hours), மாநில தற்கொலை தடுப்பு உதவி எண்: 104 (24 hours), ஐகால் (iCall Pychosocial) உதவி எண் e - 022-25521111 ( Mon - Sat, 8am - 10pm) எண்களுக்குத் தொடர்பு கொள்ளவும்.
அவரை பரிசோதித்து விட்டு அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். விபத்து ஏற்படுத்திய மன உளைச்சலில் அவர் இந்த விபரீத முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
-
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
தாய் இறந்த துக்கத்திலும்! பாதுகாப்பு கொடுத்த போலீஸாருக்கு கையெடுத்து கும்பிட்டு நன்றி சொன்ன அஜித் -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு! -
வீட்டில் தனியாக இருந்த 2 பெண்களிடம் அத்துமீற முயன்ற வடமாநில நபர் கொலை.. திருவள்ளூர் அருகே ஷாக்! -
ஆலங்குளம் அருகே 6 பேர் அரிவாளால் வெட்டப்பட்ட வழக்கில் ஷாக்.. ஒருவரை சுட்டுப் பிடித்தது போலீஸ்! -
தென்காசியில் ஷாக்.. கண்ணில் தென்பட்டவர்கள் அனைவருக்கும் அரிவாள் வெட்டு.. மர்ம கும்பல் வெறிச்செயல்!












Click it and Unblock the Notifications